MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ரூ.3,337 கோடி வருவாய்! இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையம் இது தான்!

ரூ.3,337 கோடி வருவாய்! இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையம் இது தான்!

இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, 2023-24 நிதியாண்டில் புது தில்லி ரயில் நிலையம் ரூ.3,337 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஹவுரா மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.

2 Min read
Author : Ramya s
Published : Jan 25 2025, 08:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Highest Earning Railway Station

Highest Earning Railway Station

இந்திய ரயில்வே என்பது நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து முறையாக உள்ளது. உலகின் 4-வது பெரிய ரயில்வே நெட்வோர்க்காகவும், ஆசியாவின் 2-வது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காவும் உள்ளது. சுமார் 68,000 கி.மீக்கு மேல் ரயில் பாதைகளை கொண்ட இந்தியாவில் 45,000 கிலோமீட்டருக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் உள்ளது.  அதுமட்டுமின்றி, அரசாங்கத்தால் இயக்கப்படும் மிகப்பெரிய போக்குவரத்து முறையாகவும் இந்திய ரயில்வே உள்ளது.

பேருந்து, விமானம் என பல போக்குவரத்து முறை இருந்தாலும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களை சொல்லலாம். நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

25
Highest Earning Railway Station

Highest Earning Railway Station

இந்தியாவில் சுமார் 7000க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. மேலும் நாட்டில் மொத்தம் சுமார் 22,000 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரி, இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையம் எது தெரியுமா? இந்த ரயில் நிலையத்திற்கு எத்தனை கோடி வருமானம் கிடைக்கிறது என்று தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி, 2023-24 நிதியாண்டில் நாட்டின் அதிக வருவாய் ஈட்டும் மற்றும் பரபரப்பான ரயில் நிலையங்களில் புது தில்லி ரயில் நிலையம் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

35
Highest Earning Railway Station

Highest Earning Railway Station

2023-24 ஆம் ஆண்டில் புது தில்லி ரயில் நிலையம் 39,362,272 பயணிகளுடன் ரூ.3,337 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது, அதைத் தொடர்ந்து ஹவுரா ரூ.1,692 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

வருவாயில் முன்னணியில் இருப்பதோடு மட்டுமல்லாமல், புது தில்லி ரயில் நிலையம் மிகவும் பரபரப்பான நிலையங்களில் ஒன்றாக உள்ளது, ஆண்டு முழுவதும் 39,362,272 பயணிகள் பயணித்துள்ளனர்.

45
Highest Earning Railway Station

Highest Earning Railway Station

மேற்கு வங்கத்தின் ஹவுரா நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையங்களில் , சென்னையின் எம்ஜிஆர் சென்ட்ரல் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. செண்ட்ரல் ரயில் நிலையம் ரூ.1299 கோடி ரயில் நிலையம் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று ரயில் நிலையங்களும் முதல் 100 இடங்களில் இடம்பெற்றுள்ளன, மேலும் ஆண்டு வருவாய் மற்றும் பயணிகள் வருகையில் ஒன்றாக எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

இந்திய ரயில்வே தரவுகளின்படி, மும்பையில் உள்ள லோக்மனாயா திலக் முனையம் 14,680,379 பயணிகளிடமிருந்து ரூ.1,036 கோடியை ஈட்டியுள்ளது. மும்பையின் CST ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களில் ஒன்றாகும், மேலும் 2024 ஆம் ஆண்டில் 51,652,230 பயணிகளிடமிருந்து ரூ.9,82 கோடி வருவாய் ஈட்டியது.

 

55
Highest Earning Railway Station

Highest Earning Railway Station

மகாராஷ்டிராவின் புனே ரயில் நிலையம் மற்றும் டெல்லியின் ஆனந்த் விஹார் ஆகியவை அதிக வருவாய் ஈட்டும் 100 நிலையங்களில் அடங்கும். புனே 22,256,812 பயணிகளின் வருகையிலிருந்து ரூ.9,76 கோடி வருடாந்திர வருவாய் ஈட்டியதாகவும், ஆனந்த் விஹார் 12,235,275 பயணிகளிடமிருந்து ரூ.8,44 கோடி வருவாய் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளது.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
இந்திய இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image2
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Recommended image3
ரூ.150 கோடியில் அம்பானி வாங்கிய ஆகாச அரக்கன்..! Rolls-Royce of skies.. இவ்வளவு வசதி இருக்கா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved