Indian youth and democracy : அரசியல் சிபாரிசுக்கு பதில் திறமைக்கும் நேர்மைக்கும் முன்னுரிமை கொடுப்பதுதான் நல்லாட்சி. JAM திட்டங்கள் மூலம் இடைத்தரகர்களை ஒழித்து, இந்தியாவில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
கட்டுரையாளர் : முன்னாள் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, திறன் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்
இந்த வாரம் வழக்கமா பேசுற தொழில்நுட்ப விஷயங்களை கொஞ்சம் தள்ளிவெச்சுட்டு, ஒரு முக்கியமான கேள்வியைப் பற்றி பேசப்போறேன். இதுவும் இந்தியாவோட எதிர்காலத்துக்கு ரொம்பவே முக்கியமானது. நல்லாட்சி எதைத் தரும், அது இல்லைனா என்ன மாதிரியான பாதிப்பு வரும்னு நம்ம ஊரு இளைய தலைமுறை புரிஞ்சு வச்சிருக்கா? தேவையில்லாத கூச்சல்களுக்கு நடுவுல உண்மையான விஷயம் என்னன்னு பார்க்க வேண்டிய நேரம் இது.
நான் பொது வாழ்க்கைக்கு வந்து இருபது வருஷம் ஆச்சு. இந்த காலக்கட்டத்துல அரசியல் விவாதங்கள் வெறும் சத்தமாக மட்டுமே மாறியிருக்கு. மக்கள் தேர்ந்தெடுத்த அரசு ஒழுங்கா வேலை செய்யுதாங்கிற அத்தியாவசிய கேள்விக்கும், இந்த கூச்சல்களுக்கும் சம்பந்தமே இல்லாம போச்சு. 2014-க்கு அப்புறம் வாக்களிக்க வந்த 15 கோடி இளைஞர்களும், இனிமே வரப்போற லட்சக்கணக்கான இளைஞர்களும்தான் இதுக்கான உண்மையான பதிலை தெரிஞ்சுக்கணும்.
இப்போ முக்கியமான கேள்வி என்னன்னா: 2004 முதல் 2014 வரை இருந்த 'வீணான பத்தாண்டு' கால இந்தியாவுக்கும், இப்போ உருவாகிட்டு இருக்கிற புதிய இந்தியாவுக்கும் என்ன வித்தியாசம்?
இதுக்கு பதில் வெறும் அரசு திட்டங்களின் பட்டியல் மட்டும் கிடையாது. மக்களுக்கும் அரசுக்கும் இடையில இருக்கிற பந்தத்துல வந்த பெரிய மாற்றம். அந்த பழைய பத்தாண்டு காலத்தில், ஒரு இளைஞனின் எதிர்காலத்தை தீர்மானித்தது அவனோட திறமை கிடையாது, 'உனக்கு யாரைத் தெரியும்?' என்ற அரசியல் செல்வாக்குதான். தகுதி அடிப்படையில் யாருக்கும் ஒப்பந்தங்கள் கிடைக்கல. சரியான யோசனை வச்சிருந்தவனுக்கு முதலீடு கிடைக்கல. செல்வாக்கு உள்ளவனுக்குத்தான் எல்லாம் கிடைச்சது. 2012-ல் கிரெடிட் சுவிஸ் வெளியிட்ட அறிக்கையில, வெறும் 10 தொழிலதிபர்கள் மட்டும் இந்திய வங்கி அமைப்பின் மொத்த மதிப்பில் 98 சதவீதத்தை கடனா வாங்கியிருந்தாங்கன்னு சொல்லியிருந்தது. அதே நேரத்துல திருச்சூர்ல கடை வச்சிருந்த ஒரு பெண்ணுக்கோ, சூரத்தில் இருந்த ஒரு இளம் பொறியாளருக்கோ கடன் கிடைக்கல.
முன்னாள் பிரதமரே என்ன சொன்னாருனா, நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படுற ஒரு ரூபாயில 15 பைசா மட்டும்தான் மக்களுக்கு போய் சேருதுன்னாரு. ஆனா ஜன் தன், ஆதார், மொபைல் சேர்ந்த 'ஜாம்' (JAM) கூட்டணி வெறும் தொழில்நுட்ப சாதனை இல்லை, அது நல்லாட்சியோட அடையாளம். அது இடைத்தரகர்களை மொத்தமா தூக்கியெறிஞ்சது. 2014-லிருந்து இதுவரைக்கும் 53 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல மக்களோட வங்கி கணக்குக்கு நேரடியா போய் சேர்ந்துருக்கு. அந்த 15 பைசா ஊழல் முறையை திருத்தல, அதை அடியோட மூடிட்டாங்க.
நிதி ஆயோக் தகவல்படி, வெறும் ஒன்பது வருஷத்துல கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் வறுமையில இருந்து மீண்டு வந்திருக்காங்க. வறுமை விகிதம் 2013-14ல் 29.17 சதவீதமா இருந்தது, 2022-23ல் 11.28 சதவீதமா குறைஞ்சிருக்கு. விவசாயிகளுக்கு நேரடியாக 4.47 லட்சம் கோடி ரூபாய் போயிருக்கு. கடைசி தவணையில மட்டுமே 9.5 கோடி விவசாயிகள் ஒரு பைசா கூட இடைத்தரகர்கள் பிடிக்காம முழுசா பணத்தை வாங்கியிருக்காங்க. நல்லாட்சி தரும் பலன் பெருகிக்கொண்டே போகும். வறுமையிலிருந்து மீண்ட ஒரு குடும்பம் திரும்பவும் வறுமைக்கு போகாது. இடைத்தரகர்களை நம்பியிருக்காத விவசாயி தன்னம்பிக்கையோடு வாழ்கிறான்.
ஆனா சீரழிவும் அதே வேகத்துலதான் பரவும். கர்நாடகாவை பாருங்க: ஒரே வருஷத்துல கடன் 90,280 கோடி ரூபாயில இருந்து 1,04,000 கோடி ரூபாயா உயர்ந்திருக்கு. காரணம், 52,000 கோடி ரூபாய்க்கு முறையான திட்டமிடல் இல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான். சாலைகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் கட்ட வேண்டிய உட்கட்டமைப்பு நிதியை இது முழுசா முழுங்கிடுச்சு.
கேரளாவில் புதிய அரசு 2026 ஜூன்ல ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. இடதுசாரி அரசின் பத்தாண்டு ஆட்சியில கடன் 5.07 லட்சம் கோடி ரூபாயா உயர்ந்திருக்குன்னு அதுல சொல்லியிருக்காங்க. 2025-ல் மட்டும் 84 நாட்கள் அந்த மாநிலம் ரிசர்வ் வங்கியின் ஓவர் டிராஃப்ட் நிலையிலதான் இருந்தது. மாநில வளர்ச்சிக்கு செலவழிக்கும் தொகை தேசிய சராசரியை விட பாதியாக, அதாவது 1.3 சதவீதமாக குறைஞ்சிடுச்சு.
அநீதிக்கு எதிராக உண்மையான போராட்டம் நடத்துவதுதான் ஜனநாயகத்தின் உயிர்க்காற்று. இந்திய வரலாற்றுல அது நிறைய நடந்திருக்கு, நானும் கலந்துட்டிருக்கேன். அதிகாரத்தை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு எப்பவும் உண்டு.
ஆனா இப்போ நடப்பது அதுவல்ல. ஆட்சியை முடக்குவதையே ஒரு அரசியல் வியூகமாக செய்கிறார்கள். சரியான மாற்று திட்டம் இல்லாததை மறைக்க, செயற்கையாக ஒரு அவசர நிலையை உருவாக்குறாங்க. ஏதோ ஒரு சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க பாராளுமன்றத்தை முடக்குவது, நெடுஞ்சாலைகளை மறிப்பது என அத்தனையும் செய்கிறார்கள்.
இது ஜனநாயக உரிமை கிடையாது. கருத்து விவாதத்திற்கு பதிலாக கூச்சலை பிரதியிடுவது. இதனால பெரிய பாதிப்பு இளைஞர்களுக்குத்தான். கூச்சல் போடுவதுதான் ஆட்சி செய்யும் திறன் என்று தவறாக நினைத்துக் கொள்ளும் அரசியல் கலாச்சாரம் உருவாகிறது. இதனால இளைஞர்கள் அரசியலை வெறுத்து ஒதுங்கும் ஆபத்து உண்டாகிறது.
உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இந்த தலைமுறை வளர்த்தெடுக்கும் அரசியல் சிந்தனைதான் அடுத்த 50 ஆண்டுகால இந்திய ஜனநாயகத்தை தீர்மானிக்கும்.
உத்தரப் பிரதேசத்தைப் பாருங்கள்: 'பிமாரு' (பின்தங்கிய) மாநிலமாக இருந்த உத்தரப் பிரதேசம், ஒன்பது வருஷத்துல 36 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக மாறியிருக்கு. கலவரங்கள் இல்லாத மாநிலமாகி, முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கு. அதேபோல, ஒரே காலாண்டில் பாதியளவு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடிச்சிருக்கு. ஆனா கேரளா, கர்நாடகாவில் கடன் சுமை அதிகரிச்சு, எதிர்கால முதலீடுகள் முடங்கி, நலத்திட்டப் பணம் ஊழலில் விரயமாகிறது.
இளம் இந்தியர்களுக்கான கேள்வி கொள்கை சார்ந்தது அல்ல. அது உங்கள் வாழ்க்கை சார்ந்தது. உங்களுக்கு எது நல்ல வாய்ப்பைத் தரும்? உங்க திறமைக்கும், உழைப்புக்கும் மதிப்பு கொடுக்கும் அமைப்பா? அல்லது அரசியல் செல்வாக்கையும், ஆட்களையும் நம்பியிருக்கும் அமைப்பா? உங்க ஊருக்கு சாலையும், வேலைவாய்ப்பையும் தரும் அரசாங்கமா? அல்லது கடன் வாங்கி இன்றைய செலவை முடித்து, நாளைய எதிர்காலத்தைப் பாழாக்கும் அரசாங்கமா?
யோசிச்சு பார்த்தா, இந்த கட்டுரை தொழில்நுட்பத்தை விட்டு தள்ளி வரல. நல்லாட்சிக்கு நான் சொல்லும் காரணமும், தொழில்நுட்ப நிர்வாகத்திற்கு சொல்லும் காரணமும் ஒன்றுதான். மக்களுக்காக வெளிப்படையாகவும், பொறுப்புடனும் செயல்படும் அமைப்புகள் மட்டுமே சிறந்த பலனைத் தரும்.
ஜனநாயகத் தேர்வு எப்போதும் ஒன்றுதான்: எந்த அரசு நாட்டின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புகிறது, எந்த அரசு அடுத்த தலைமுறையை ஏழையாக விட்டுச் செல்கிறது என்பதுதான். இதுதான் நிஜமான விஷயம். மற்றவை எல்லாம் வெறும் கூச்சல்.
(கட்டுரையாளர்: முன்னாள் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, திறன் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், பாஜக கேரள மாநிலத் தலைவர் மற்றும் நேமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் அவரது சொந்த கருத்துகள்.)






