- Home
- இந்தியா
- தர்மேந்திர பிரதான் ராஜினாமா போதாது.. அடுத்த குண்டை தூக்கிப் போட்ட CJP.. மத்திய அரசு ஷாக்!
தர்மேந்திர பிரதான் ராஜினாமா போதாது.. அடுத்த குண்டை தூக்கிப் போட்ட CJP.. மத்திய அரசு ஷாக்!
CJP vs Central Goverment: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மட்டும் போதாது. தங்களின் அனைத்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

தர்மேந்திர பிரதான் ராஜினாமாவுக்கு வரவேற்பு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) வரவேற்றுள்ளது. ஆனாலும், தங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடரும் என்று அந்தக் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. "இந்த அரசாங்கத்தில் ராஜினாமா எல்லாம் நடக்காது என்று ஒரு பேச்சு இருந்தது. ஆனால், 'உலகம் பணியும், பணியவைக்க ஆள் வேண்டும்' என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம்," என்று CJP நிறுவனர் அபிஜீத் திப்கே கூறினார்.பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தில் இது முதல் ராஜினாமா என்று குறிப்பிட்ட அவர், "நாங்கள் இதைச் செய்து காட்டிவிட்டோம்," என்றார்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தொடரும்
மத்திய அமைச்சர் ராஜினாமா செய்த செய்தி வெளியானதும், போராட்டம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் உற்சாகமாகக் கொண்டாடிய காட்சிகள் வெளியாகின. தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு மற்றும் லத்தியடி நடத்திய டெல்லி காவல்துறை அதிகாரிகள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மற்ற இரண்டு கோரிக்கைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக திப்கே குறிப்பிட்டார்.\
CJP தனது X தளத்தில், ''1.தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ளார். ஆனால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 கோடி ரூபாய், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற கோரிக்கைகள் நிலுவையில் உள்ளது'' என்று கூறியது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்தது ஏன்? தர்மேந்திர பிரதான் விளக்கம்
நாட்டின் இளைஞர்கள் குழப்ப வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற பரந்த நலன் கருதி, மாணவர்களுக்காகத் தான் பதவி விலகுவதாக தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய தனது ராஜினாமா கடிதத்தில், கல்வித்துறையுடன் தனக்கு நீண்டகாலமாக இருக்கும் தொடர்பை பிரதான் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், இந்திய இளைஞர்களின் லட்சியங்களுக்குத் நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
"கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, நான் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களுடன் தொடர்பில் இருக்கிறேன். வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய, முன்னோக்கிய கல்வி முறையே ஒரு வலுவான தேசத்தின் அடித்தளம் என்று நான் எப்போதும் நம்புகிறேன்," என்று பிரதான் கூறினார்.
மத்திய அரசு உடனுக்குடன் நடவடிக்கை
நீட்-யுஜி சர்ச்சை குறித்து நினைவுகூர்ந்த பிரதான், மே 3, 2026 அன்று நடந்த தேர்வில் முறைகேடுகள் வெளிவந்த உடனேயே மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டார். "இருப்பினும், மே 3, 2026 அன்று நடைபெற்ற நீட்-யுஜி தேர்வில் முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இந்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தைக் கவனத்தில் கொண்டு, சிபிஐயிடம் விசாரணையை ஒப்படைத்தது, தேர்வை ரத்துசெய்து, மறுதேர்வுக்கான தேதியை அறிவித்தது. இதனுடன், அடுத்த ஆண்டு முதல் தேர்வு கணினி அடிப்படையிலான சோதனை (CBT) முறையில் நடத்தப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது," என்று அவர் கூறினார்.

