MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் கொடூரம்: 19 குழந்தைகள், 7 கர்ப்பிணிப் பெண்கள் பலி - கசிந்த ரகசிய அறிக்கை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் கொடூரம்: 19 குழந்தைகள், 7 கர்ப்பிணிப் பெண்கள் பலி - கசிந்த ரகசிய அறிக்கை

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூன் 5 முதல் ஜூன் 9 வரையிலான காலக்கட்டத்தில்,பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூரமான ஒடுக்குமுறை குறித்த ரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளன.இது அப்பகுதியில் நிலவும் மோசமான மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jun 10 2026, 11:22 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
ஒடுக்குமுறையின் பின்னணி
Image Credit : X

ஒடுக்குமுறையின் பின்னணி

பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, பணவீக்கம் மற்றும் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 'ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி' (JAAC) என்ற அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் போராட்டங்களை நசுக்குவதற்காக, பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்களின் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தியதாக அந்த ரகசிய அறிக்கை குற்றம் சாட்டுகிறது.

அறிக்கையில் உள்ள அதிர்ச்சிகரமான விவரங்கள்

  • உயிரிழப்புகள்: இந்த வன்முறையில் 19 குழந்தைகள் மற்றும் 7 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நிராயுதபாணியான போராட்டக்காரர்கள் மற்றும் துக்க நிகழ்வுகளில் ஈடுபட்டவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
  • ராணுவக் குவிப்பு: போராட்டங்களை ஒடுக்குவதற்காக சுமார் 14,000-க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் மெயின்லேண்ட் பாகிஸ்தானிலிருந்து PoK பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
  • தொடர்புத் தடைகள்: வன்முறை மற்றும் அட்டூழியங்களை உலகம் அறியக்கூடாது என்பதற்காக, அப்பகுதி முழுவதும் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
  • தலைவர்கள் கைது: JAAC அமைப்பைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டும், காயமடைந்தும் அல்லது சிறைபிடிக்கப்பட்டும் உள்ளனர்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
சர்வதேச அளவில் எதிரொலிக்கும் போராட்டங்கள்
Image Credit : X

சர்வதேச அளவில் எதிரொலிக்கும் போராட்டங்கள்

பாகிஸ்தான் அதிகாரிகளின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மிஸ்பூர், முசாஃபராபாத், கில்கிட்-பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது சர்வதேச நாடுகளையும் எட்டியுள்ளது. பிரிட்டனில் உள்ள காஷ்மீரி புலம்பெயர்ந்தோர் பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தியுள்ளனர். சுமார் 30 பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும், அமைதியான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கவும் பிரிட்டன் அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா கண்டனம்

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA), பாகிஸ்தான் தனது சொந்த தோல்விகளை மறைக்க பொய்யான தகவல்களைப் பரப்புவதாகவும், தவறான செய்திகளைப் பரப்பி திசைதிருப்ப முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்குப் பாகிஸ்தான் அரசு சர்வதேச சமூகத்திற்குப் பதில் சொல்ல வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தரப்போ, போராட்டக்காரர்கள் ஆயுதங்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியதால் தான் தாங்கள் நடவடிக்கை எடுத்ததாகத் தற்காப்புப் பேசி வருகிறது. இருப்பினும், களத்தில் நிலவும் சூழல் மிகவும் பதற்றமாகவே நீடிக்கிறது.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
பயங்கரவாதத் தாக்குதல்
பாகிஸ்தான்
இந்தியா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Caller ID Rule: இனி தெரியாத நம்பர்ல இருந்து போன் வந்தாலும் ஈசியா தெரிஞ்சிடும்..! 1ம் தேதி முதல் அமல்
Recommended image2
ரயில் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு..! அக். 27 முதல் அதிரடி மாற்றம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி..
Recommended image3
Diwali Bonus : ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Let Kashmir Speak என்ற தலைப்பில் டெல்லியில் நாளை பேரணி... பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்!!
Recommended image2
Now Playing
காஷ்மீர் மக்கள் மிகவும் மென்மையானவர்கள் மனித நேயம் மிக்கவர்கள்! #kashmir #pahalgamattack
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved