MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • IRCTC Tirupati Tour: குறைந்த செலவில் குடும்பத்தோடு திருப்பதி போகணுமா? இந்த பேக்கேஜை மிஸ் பண்ணாதீங்க!

IRCTC Tirupati Tour: குறைந்த செலவில் குடும்பத்தோடு திருப்பதி போகணுமா? இந்த பேக்கேஜை மிஸ் பண்ணாதீங்க!

குடும்பத்துடன் திருப்பதி செல்ல திட்டமிடுபவர்களுக்காக, ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) ஒரு நாள் பேருந்து சுற்றுலா தொகுப்பை வழங்குகிறது. இந்த பேக்கேஜில், ஏசி பேருந்து பயணம், சிறப்பு விரைவு தரிசனம், காலை உணவு மற்றும் பத்மாவதி தாயார் தரிசனம் ஆகியவை அடங்கும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 09 2026, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
திருப்பதி பை நாராயணாத்ரி எக்ஸ்பிரஸ் பேக்கேஜ்
Image Credit : Asianet News

திருப்பதி பை நாராயணாத்ரி எக்ஸ்பிரஸ் பேக்கேஜ்

தமிழ்நாட்டில் அல்லது சென்னையில் இருந்து குடும்பத்தோடு ஒரு ஆன்மீகப் பயணம் போக வேண்டும் என்று நினைத்தாலே முதலில் நினைவுக்கு வருவது திருப்பதி தான். ஆனால், வயதான பெற்றோர், குழந்தைகளை கூட்டிக்கொண்டு ரயிலில் டிக்கெட் பிடிப்பதில் தொடங்கி, திருப்பதியில் தங்குவதற்கு நல்ல ஹோட்டல் அறை தேடுவது, உள்ளூர் கோயில்களுக்குச் செல்ல வண்டி பேசுவது என எல்லாவற்றையும் திட்டமிடுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பட்ஜெட்டும் கையை மீறிப் போய்விடும்.

இனி அந்த கவலைகளே வேண்டாம்! தமிழ்நாட்டில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து குடும்பத்தோடு மிகக் குறைந்த செலவில், எந்தவித டென்ஷனும் இல்லாமல் 1 நாளில் திருப்பதி சென்று வர ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) ஒரு அசத்தலான 'சென்னை - திருப்பதி ஒரு நாள் பேருந்து சுற்றுலா தொகுப்பை' வழங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
டென்ஷன் இல்லாத ரயில் பயணம்: எப்போது, எங்கே தொடங்குகிறது?
Image Credit : Social Media

டென்ஷன் இல்லாத ரயில் பயணம்: எப்போது, எங்கே தொடங்குகிறது?

குடும்பத்துடன் பயணிக்கும் போது ரயிலில் சீட் கிடைப்பது பெரிய சவால் என்பதால், இந்த பேக்கேஜில் சென்னையில் இருந்தே சொகுசான ஏசி பேருந்து (AC Semi-Sleeper Bus / AC Tempo Traveller) வசதி செய்யப்பட்டுள்ளது.

 அதிகாலை புறப்பாடு: சென்னையில் உள்ள டி.நகர் (T. Nagar - Venkatanarayana Road, Near TTD Temple), சைதாப்பேட்டை, கிண்டி, போரூர் மற்றும் பூந்தமல்லி ஆகிய முக்கிய இடங்களில் இருந்து அதிகாலை 5:00 மணிக்கு பேருந்து புறப்படும். 

காலை உணவு: சரியாக காலை 8:00 முதல் 8:30 மணிக்குள் திருப்பதியை நெருங்கும் வழியில் சிறந்த உணவகத்தில் உங்களுக்கு சுவையான காலை உணவு வழங்கப்படும்.

37
சிறப்பு விரைவு தரிசனத்துடன் திருமலை பயணம்!
Image Credit : Asianet News

சிறப்பு விரைவு தரிசனத்துடன் திருமலை பயணம்!

மலைப் பயணம்: காலை 8:30 மணிக்கு திருப்பதிக்கு வந்தடைந்ததும், அங்கிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (APSRTC) பேருந்து மூலம் குடும்பத்துடன் திருமலை மலைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். 

சிறப்பு தரிசனம் (Special Entry Darshan): இந்த பேக்கேஜின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்டே இதில் ரூ. 300 மதிப்புள்ள சிறப்பு விரைவு தரிசன டிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது தான். இதனால் பல மணிநேரம் வரிசையில் காத்துக்கிடக்காமல், 1 முதல் 2 மணிநேரத்திற்குள் குடும்பத்துடன் மிக எளிதாக ஏழுமலையானை கண் குளிர தரிசனம் செய்துவிடலாம். 

லட்டு பிரசாதம்: தரிசனம் முடிந்தவுடன் ஒவ்வொரு நபருக்கும் தலா ஒரு சுவையான திருப்பதி லட்டு பிரசாதமாக வழங்கப்படும்.

47
பத்மாவதி தாயார் தரிசனம் மற்றும் ரிட்டர்ன் பயணம்!
Image Credit : our own

பத்மாவதி தாயார் தரிசனம் மற்றும் ரிட்டர்ன் பயணம்!

மதிய உணவு மற்றும் திருச்சானூர்: திருமலையில் இருந்து மதியம் 1:30 முதல் 2:30 மணிக்குள்ளாக கீழே திருப்பதிக்கு அழைத்து வரப்படுவீர்கள். மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, மதியம் 3:30 மணிக்கு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். தாயாரை தரிசனம் செய்துவிட்டு மாலை 4:30 முதல் 5:00 மணிக்குள் சென்னைக்கு மீண்டும் பேருந்து புறப்படும். 

சென்னை வந்தடைதல்: இரவு 8:30 முதல் 9:30 மணிக்குள் உங்களை பாதுகாப்பாக சென்னை டி.நகரிலேயே இறக்கிவிடுவார்கள்.

57
குடும்ப பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகக் குறைந்த கட்டணம்!
Image Credit : our own

குடும்ப பட்ஜெட்டுக்கு ஏற்ற மிகக் குறைந்த கட்டணம்!

சென்னையில் இருந்து இயக்கப்படும் இந்த ஒரு நாள் டூர் பேக்கேஜின் கட்டண விவரங்கள்.

  • பெரியவர்கள் (Adults) – ஒரு நபருக்கு: ரூ. 1,650 முதல் ரூ. 1,950 வரை 
  • குழந்தைகள் (5 முதல் 11 வயது வரை): ரூ. 1,300 
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்: இவர்களுக்கு தரிசன டிக்கெட் தேவையில்லை என்பதால் கட்டணம் ஏதும் இல்லை.
67
இந்த பட்ஜெட் பேக்கேஜில் என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
Image Credit : our own

இந்த பட்ஜெட் பேக்கேஜில் என்னென்ன வசதிகள் கிடைக்கும்?

பேக்கேஜில் சேர்க்கப்பட்டுள்ளவை (Inclusions)

  • சென்னையிலிருந்து திருப்பதிக்கு சென்று வர சொகுசு ஏசி பேருந்து / டெம்போ டிராவலர் வசதி. 
  • திருப்பதியிலிருந்து திருமலைக்கு சென்று வர தேவஸ்தான பேருந்து கட்டணம். 
  • ரூ. 300 மதிப்புள்ள திருப்பதி ஏழுமலையான் சிறப்பு விரைவு தரிசன டிக்கெட். 
  • 1 வேளை சுவையான காலை உணவு. பயணிகளுக்கு வழிகாட்ட ஒரு டூர் கைடு (Tour Guide) வசதி.
77
சேர்க்கப்படாதவை
Image Credit : our own

சேர்க்கப்படாதவை

  • மதிய உணவு மற்றும் இரவு உணவு. 
  • மொட்டை போடுதல் 
  • காது குத்துதல் போன்ற தனிப்பட்ட வேண்டுதல்களுக்கான செலவுகள். 

குறைவான செலவில், எந்தவித அலைச்சலும் இல்லாமல், ஒரே நாளில் குடும்பத்துடன் பாதுகாப்பாக திருப்பதி சென்று வர நினைப்பவர்களுக்கு இந்த ஐஆர்சிடிசி (IRCTC) சென்னை பேக்கேஜ் ஒரு வரப்பிரசாதம். உடனடியாக திட்டமிட்டு, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய www.irctctourism.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பாருங்கள். குடும்பத்தோடு கோவிந்தா நாமம் சொல்லி புறப்படத் தயாராகுங்கள்!

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
திருமலை
திருப்பதி
சுற்றுலாத் தொகுப்பு
சுற்றுலா
சுற்றுலாக்கள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Pre Match
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
IND chose to bowl.
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kanda Sashti Viratham 2026: கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி? 6 நாட்களும் என்ன சாப்பிடலாம்? முழு வழிமுறைகள் இதோ!
Recommended image2
Kedara Gowri viratham : தீபாவளி நோன்பு 2026.. கேதார கௌரி விரதத்தின் மகிமை, வழிபாட்டு முறை, விரதக் கதை!
Recommended image3
Kuladeivam Worship : குலதெய்வம் வழிபாடு ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியம்? முன்னோர்கள் பின்பற்றிய மரபுகளின் சிறப்புகள்!
Related Stories
Recommended image1
Chennai Budget Tour: சென்னை சுற்றுலா.! நாள் முழுவதும் கொண்டாட இத்தனை இடங்களா? பக்காவான பட்ஜெட் டூர்.!
Recommended image2
Summer Tour: உள்ளூர் செலவில் உலக சுற்றுலா.! நீலக்கடலும், வெள்ளை வீடுகளும்… கனவு போல ஒரு டூர்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved