அனைத்து காஷ்மீர் அரசியல் கைதிகளையும் விடுவிக்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாளை பேரணி நடைபெற உள்ளது.

அனைத்து காஷ்மீர் அரசியல் கைதிகளையும் விடுவிக்க உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நாளை பேரணி நடைபெற உள்ளது. அனைத்து காஷ்மீர் அரசியல் கைதிகளையும் விடுவிக்க கோரியும், இந்திய சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மீரில் ஊடகக் கட்டுப்பாடுகள் மற்றும் அடக்குமுறைகளை நீக்க கோரியும் டெல்லியில் நாளை (புதன்கிழமை) பேரணி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: யார் இந்த திவா ஜெய்மின் ஷா? விரைவில் அதானி மகனுடன் திருமணம்!

இந்த பேரணியில் ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்து காஷ்மீரி அரசியல் கைதிகளையும் விடுவிக்கக் கோரியும், ஊடகத் தடைகள் மற்றும் ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வரக் கோரியும் பிரச்சாரம் நடைபெறகிறது. மேலும் ஜம்மு காஷ்மீரில் மோடி அரசின் அடக்குமுறைக் கொள்கைகளுக்கு எதிராக அரசு ஒடுக்குமுறைக்கு எதிரான பிரச்சாரம் என்ற பெயரில் நடந்து வரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக Let Kashmir Speak என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஸோஹோ நிறுவனர் மீது அவரது மனைவி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு... விளக்கம் அளித்த ஸ்ரீதர் வேம்பு!!

இதில், ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூடி, பேராசிரியர் நந்திதா நரேன், முஹம்மது யூசுப் தாரிகாமி, மிர் ஷாஹித் சலீம், சஞ்சய் காக் மற்றும் அனில் சமாடியா ஆகியோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.