Diva Jaimin Shah: யார் இந்த திவா ஜெய்மின் ஷா? விரைவில் அதானி மகனுடன் திருமணம்!
திவா ஜெய்மின் ஷா, விரைவில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் கடைசி மகன் ஜீத் அதானி மனைவியாகப் போகிறார்.
அதானி குழுமத்தின் தலைவரும் கோடீஸ்வரருமான கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும் திவா ஜெய்மின் ஷாவுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 12) நிச்சயதார்த்தம் நடந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கான நிச்சயதார்த்த விழாவில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டனர். ஜீத் மற்றும் திவாவின் திருமண நிச்சயதார்த்த விழாவில் இருந்து வெளியான புகைப்படம் ஒன்றில் இருவரும் பாரம்பரிய உடையில் காட்சி அளிக்கின்றனர். திருமணம் ரகசியமாக நடத்தப்படுவதால், வெகுசில விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன.
திவா ஜெய்மின் ஷா யார்?
திவா ஜெய்மின் ஷா வைர வியாபாரியான ஜெய்மின் ஷாவின் மகள். இவர் சி தினேஷ் மற்றும் கோ பிரைவேட் லிமிடெட் இயக்குநர். இவரது நிறுவனத்திற்கு மும்பை மற்றும் சூரத்தில் அலுவலகங்கள் உள்ளன. சினு தோஷி மற்றும் தினேஷ் ஷா ஆகியோர் இந்த நிறுவனத்தை நிறுவினர். நிறுவனத்தின் இயக்குநர்களாக ஜிகர் தோஷி, அமித் தோஷி, யோமேஷ் ஷா மற்றும் ஜெய்மின் ஷா ஆகியோர் இருக்கிறார்கள்.
Jeet Adani: அதானி மகன் ஜீத் திருமணம்! வைர வியாபாரி மகள் திவாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது
ஜீத் அதானி யார்?
ஜீத் அதானி பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2019 இல் அதானி குழுமத்தில் சேர்ந்தார். குழுமத்தின் சி.எஃப்.ஓ. அலுவலகத்தில் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கிய ஜீத் அதானி, நிதி சார்ந்த நடவடிக்கைகளைக் கவனித்துவந்தார். தற்போது அதானி குழுமத்துக்குத் துணைத் தலைவராக (குரூப் ஃபைனான்ஸ்) பணியாற்றி வருகிறார்.
அதானி குழுமத்தின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்திற்கும், அதானி டிஜிட்டல் லேப்ஸ் ஆகியவற்றிற்கும் ஜீத் தலைமை வகிக்கிறார். அதானி குழுமத்தைச் சேர்ந்த அனைத்து நிறுவனங்களுக்கும் புதிய மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கம் பணியையும் மேற்பார்வை செய்துவருகிறார்.
Reddmatter: உலகையே மாற்றி அமைக்கும் ரெட் மேட்டர் சூப்பர் கண்டக்டர் கண்டுபிடிப்பு!