Jeet Adani: அதானி மகன் ஜீத் திருமணம்! வைர வியாபாரி மகள் திவாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்தது
கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கு வைர வியாபாரியின் ஒருவரின் மகள் திவாவுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
அதானி குழும தலைவர் கௌதம் அதானியின் இளைய மகன் ஜீத் அதானிக்கும் வைர வியாபாரியின் மகள் திவா ஜெய்மின் ஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மார்ச் 12ஆம் தேதி இந்த நிச்சயதார்த்த வைபவம் நடைபெற்றது. நிச்சயதார்த்த விழாவில், தம்பதியரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீத் அதானி, அதானி குழுமத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இவரை மணக்க இருக்கும் திவா வைர வியாபாரி ஜெய்மின் ஷாவின் மகள். ஜெய்மின் ஷா மும்பை மற்றும் சூரத்தில் உள்ள சி தினேஷ் அண்ட் கோ பிரைவேட் லிமிடெட் என்ற வைர நிறுவனத்தை நடத்திவருகிறார்.
ரகசியமாக நடந்த இந்த நிச்சயதார்த்தை ஒட்டி நடந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் படத்தில் ஜீத் மென்மையான எம்பிராய்டரி வேலைகளுடன் கூடிய வெளிர் வண்ண ஆடை அணிந்து போஸ் கொடுக்கிறார். திவா இளஞ்சிவப்பு மற்றும் நீல நிறங்களின் லெஹங்கா அணிந்து ரம்மியமாகத் தோற்றம் அளிக்கிறார்.
நிச்சயதார்த்தம் முடிந்தபோதும் எப்போது திருமணம் நடக்கப்போகிறது என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால் இருவரும் இந்த ஆண்டின் இறுதியில் அல்லது 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
அதானியின் மூத்த மகன் கரண், வழக்கறிஞர் சிரில் ஷ்ராப்பின் மகள் பரிதியை மணந்தார். பரிதியும் வழக்கறிஞர்தான்.