115 வருடத்தில் இல்லாத மழை.. பேய் மழையால் ஆட்டம் கண்ட பெங்களூரு - இப்போதைய நிலை?
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 32011க்குப் பிறகு மே மாதத்தில் பெய்த இரண்டாவது அதிகபட்ச மழையான இதில் 3 பேர் இறந்துள்ளனர்.

Bengaluru 115 Year Rain Record
கர்நாடக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டுக்குப் பிறகு மே மாதத்தில் பெங்களூருவில் இவ்வளவு கனமழை பெய்ததில்லை. சாலைகள் நீரில் மூழ்கின. பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. வடிகால்கள் நிரம்பி வழிந்தன. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பெங்களூருவில் கொட்டித்தீர்த்த கனமழை
இந்நிலையில், பெங்களூருவில் மழைநீரில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பி.டி.எம் லேஅவுட் 2ஆம் கட்டத்தில் உள்ள என்.எஸ். பல்யா பகுதியில் 9 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர். பெங்களூருவில் இன்று (மே 19) பெய்த கனமழையால் பல பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகளின் அடித்தளங்கள், தாழ்வான பகுதிகள் என பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. பெங்களுருவில் கொட்டி தீர்த்த கனமழையால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் பதிவான பெரிய மழை
மே 18, 19 தேதிகளில் பெங்களூருவில் அதிக அளவு மழை பெய்துள்ளது. 2011க்குப் பிறகு மே மாதத்தில் பெங்களூருவில் பெய்த இரண்டாவது அதிகபட்ச மழை இதுவாகும். மே 18ஆம் தேதி காலை 8.30 மணி முதல் திங்கள் கிழமை காலை 8.30 மணி வரை 105.5 மி.மீ மழை பெய்துள்ளது. இது 2011க்குப் பிறகு மே மாதத்தில் பதிவான இரண்டாவது அதிகபட்ச மழையாகும். 2022 மே மாதத்தில் பெங்களூருவில் 114.6 மி.மீ மழை பதிவாகியிருந்தது. பெங்களூரு வரலாற்றில் மே மாதத்தில் அதிகபட்ச மழை பதிவானது 1909 மே 6ஆம் தேதி. அன்று 153.9 மி.மீ மழை பதிவாகியிருந்தது.
வானிலை மையம் அறிக்கை
ஐஎம்டியின் முன்னறிவிப்பின்படி, மே 23 வரை நகரில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவின் தலைநகருக்கு மே 22 வரை வானிலைத் துறை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தரவுகளின்படி, மே 19 அன்று காலை 8.30 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெங்களூரு நகரில் 105.5 மிமீ மழை பெய்துள்ளது. இந்த மாதத்தில் கடைசியாக இவ்வளவு கனமழை பெய்தது மே 18, 2022 அன்று. தற்செயலாக, மே மாதத்திற்கான மொத்த சாதனையே 153.9 மிமீ ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச மழைப்பொழிவு 153.9 மிமீ ஆக உள்ளது, இது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1909 மே 6 அன்று பதிவாகியுள்ளது.
கர்நாடகா அரசு மீது பாஜக குற்றச்சாட்டு
கடந்த இரண்டு ஆண்டுகளில் நகர உள்கட்டமைப்பிற்காக செலவிடப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய்கள் எந்த பலனையும் தரவில்லை என்று கூறி, எதிர்க்கட்சியான பாஜக ஆளும் காங்கிரஸுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மழை எதிர்பாராதது என்றும், அடைபட்ட மழைநீர் வடிகால்களை (SWD) மறுவடிவமைப்பு செய்து தூர்வாருமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் சித்தராமையா கூறினார். இருப்பினும் இந்த வாரத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.