MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • இந்த 'இரத்த' வகை ஆட்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பு.. ஆய்வில் பகீர்!! 

இந்த 'இரத்த' வகை ஆட்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பு.. ஆய்வில் பகீர்!! 

Blood Group And Brain Stroke : குறிப்பிட்ட இரத்த வகை உள்ள ஆட்களுக்கு மூளை பக்கவாதம் வர வாய்ப்புள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 04 2025, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
இந்த 'இரத்த' வகை ஆட்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பு.. ஆய்வில் பகீர்!!

இந்த 'இரத்த' வகை ஆட்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பு.. ஆய்வில் பகீர்!!

இரத்த வகைக்கும், மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கும் இடையே தொடர்பு இருக்குமா? இந்த கேள்வியே புதிதாக இருக்கலாம். ஆனால் ரத்த வகை ஒருவருக்கு இளம் வயதில் மூளை பக்கவாதம் ஏற்பட காரணமாக அமையலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வினை மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி (UMSOM) ஆராய்ச்சியாளர்கள் முன்னின்று நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகள் நரம்பியல் இதழில் வெளியாகின. ஆராய்ச்சிகளின் முடிவுகளில், குறிப்பிட்ட ரத்த வகைகளை கொண்டிருப்பவர்களுக்கு 60 வயதிற்கு முன்பு ஏற்படும் பக்கவாதத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு இருதரப்பினரை ஒப்பிட்டு செய்யப்பட்டது. இதில் முன்பு செய்யப்பட்ட 48 ஆய்வுகளின் தரவுகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் பக்கவாதம் பாதிக்காத 6 லட்சம் பேரும், இஸ்கிமிக் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட  17 ஆயிரம் பேரும் பங்கேற்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இஸ்மிக் பக்கவாதம் என்றால் என்ன?

இஸ்மிக் பக்கவாதம் என்றால் என்ன?

மூளைக்கு இரத்த கொண்டு செல்லப்படுவது தடைபடுவதால் ஏற்படும் பக்கவாதமே 'இஸ்மிக் பக்கவாதம்' ஆகும். இந்த நோய் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு தான் பெரும்பாலும் ஏற்பட்டுள்ளது. 

36
எந்த இரத்த வகையினருக்கு ஆபத்து?

எந்த இரத்த வகையினருக்கு ஆபத்து?

இந்த ஆய்வில் நோயாளிகளின் மரபணு தரவுகளை ஆய்வு செய்தது.  குறிப்பிட்ட இரத்த வகை கொண்டிருப்பவர்களுக்கு  தான் இந்த ஆரம்ப கால பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பிற இரத்த வகையை கொண்டிருப்பவர்களுடன் ஒப்பீடு செய்யும் போது 'A' வகை இரத்தம் கொண்டிருப்பவர்களுக்கு ஆரம்பகால பக்கவாதம் ஏற்படுகின்ற வாய்ப்புகள் அதிகமாக இருந்துள்ளது. இன்னொரு தகவலும் இதில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. '0' வகை இரத்தப் பிரிவினருக்கு ஆரம்பகால பக்கவாதம் வரும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்துள்ளது.  ஆரம்ப கால பக்கவாதம் வரும் வாய்ப்பு கிட்டத்தட்ட 16 சதவீதம்  A- வகை இரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு இருந்துள்ளது. உறுதியாக இந்த இரத்த வகையைக் கொண்டிருப்பவர்களுக்கு பக்கவாதம் வரும் என சொல்ல முடியாவிட்டாலும் ஆபத்துக்கான வாய்ப்பு இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வுகளில் 0 - இரத்தப் பிரிவினருக்கு ஆரம்பகால பக்கவாதம் வரும் வாய்ப்பு  12% குறைவாக உள்ளது தெரியவந்தது. 

46
எந்த வகை இரத்தத்திற்கு மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்?

எந்த வகை இரத்தத்திற்கு மூளை பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம்?

இந்த ஆய்வுகள் A வகை இரத்தப் பிரிவினரை பயத்தில் அல்லது பதற்றத்தில் ஆழ்த்துவதற்கு அல்ல. அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு பரிந்துரை மட்டுமே. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். பக்கவாத பாதிப்பு ஏற்பட காரணமானவைகளை தவிர்க்க வேண்டும். 

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிக்கிறீர்களா? ஆபத்தின் விளிம்பில் இருக்கிறீர்கள்.. ஜாக்கிரதை!

56
ஏன் 'A' இரத்த வகை பாதிப்புக்கு காரணமாக உள்ளது?

ஏன் 'A' இரத்த வகை பாதிப்புக்கு காரணமாக உள்ளது?

இதற்கான தெளிவான காரணங்கள் ஏதும் ஆய்வில் கண்டறியப்படவில்லை.  ஆனால் மற்ற இரத்த பிரிவுகளைவிட இந்த வகை இரத்தத்தில் ரத்த உறைவுக்கான காரணிகள் கொஞ்சம் அதிகமாக உள்ளதாக தெரிகிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இரத்தப்போக்கு ஏற்படும்போது அதை கட்டுக்குள் வைக்க இரத்த உறைவு அவசியம். இதுவே அடிக்கடி ஏற்படும்போது மூளைக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்புகள் ஏற்பட வழிவகுக்கும். இதனால் பக்கவாதம் ஏற்படலாம். ஒருவரின் இரத்த வகையைப் பொறுத்து இரத்த ஓட்டத்தில் உள்ள புரதங்கள் அல்லது இரத்த உறைதலுக்கு உதவியாக இருக்கும் இரத்தத்தட்டுகள் இரத்தக் கூறுகளின் பண்புகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த ஆய்வு முழுக்க சரியானது என்றும் சொல்லிவிட முடியாது. இதில் சில குறைபாடுகளும், வரம்புகளும் உள்ளன. 

இதையும் படிங்க:  புகைபிடித்தல், நீண்ட நேரம் வேலை செய்வதால் இந்த ஆபத்தான நோய் ஏற்படுகிறது: நிபுணர்கள் எச்சரிக்கை..

66
ஆய்வின் குறைகள்:

ஆய்வின் குறைகள்:

உதாரணமாக இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு பன்முகத்தன்மை அதிகம் கிடையாது. ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 35% பேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்களில்லை. மற்ற  இனக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆய்வின் முடிவுகளை பொருத்திப் பார்க்க முடியுமா என்பதும் உறுதியாக தெரியவில்லை. இந்த ஆய்வு முழுக்க ஆரம்ப கால பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பினை குறித்து மட்டுமே ஆராய்ந்தது. ஆனால் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பக்கவாதங்களை ஆராய்ச்சி செய்த போது அதில் ரத்த வகைக்கும், பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளுக்கும் பெரியளவில் தொடர்பு இல்லாதது தெரியவந்தது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
2nd TEST • SA vs AUS
Result
SASA
425/9
AUSAUS
99 & 295
SA beat AUS by 31 runs
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
02:00 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Food For Children: சுவையான நெல்லிக்காய் சாதம் செய்யலாம்.! ஒரே நிமிடத்தில் ரெடியாகும் ஸ்கூல் லஞ்ச்.!
Recommended image2
Instant Acidity Relief: சாப்பிட்டதும் நெஞ்சில் எரிகிறதா? அசிடிட்டியை விரட்டும் 5 நிமிட வீட்டு வைத்தியம்!
Recommended image3
AI Cancer Prediction: ஒரு செல்ஃபி போதும்... கேன்சர் நோயாளி எவ்வளவு நாள் வாழ்வார்னு AI சொல்லிடும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved