MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Eating too fast: வேக வேகமாக சாப்பிடுறீங்களா? உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

Eating too fast: வேக வேகமாக சாப்பிடுறீங்களா? உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

Eating too fast: அவசர அவசரமாக உணவை சாப்பிடுவது சாதாரண பழக்கமாகத் தெரிந்தாலும், தொடர்ந்து வேகமாக சாப்பிடுவது உடலில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 01 2026, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வேக வேகமாக சாப்பிடுறீங்களா?
Image Credit : pinterest

வேக வேகமாக சாப்பிடுறீங்களா?

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், சாப்பிடுவதற்குக்கூட நேரம் இல்லாமல் பலரும் உணவை அவசர அவசரமாக சாப்பிடுகிறோம். வேலைக்குச் செல்லும் அவசரம், நேரமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் உணவை நிதானமாக மென்று சாப்பிடும் பழக்கம் குறைந்து வருகிறது.

இப்படி வேகமான சாப்பிடும் பழக்கம் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இவ்வாறு தொடர்ந்து வேகமாக சாப்பிட்டால் உடலில் என்ன பிரச்சனைகள் வரும்? இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ஆய்வுகள் கூறுவதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
உடல் எடை அதிகரிக்குமா?
Image Credit : pinterest

உடல் எடை அதிகரிக்குமா?

நாம் சாப்பிடும் உணவு வயிற்றுக்குச் சென்றவுடன், வயிறு மற்றும் குடல் பகுதியிலிருந்து சில திருப்தி ஹார்மோன்கள் (Satiety Hormones) சுரக்கின்றன. இந்த ஹார்மோன்கள் வயிறு நிரம்பியதை மூளைக்கு உணர்த்துவதற்கு சிறிது நேரம் ஆகும்.

ஆனால், நாம் உணவை அவசரமாகச் சாப்பிடும்போது, இந்த சிக்னல் மூளையைச் சென்றடைவதற்கு முன்பே நாம் தேவைக்கு அதிகமான உணவை உட்கொள்ள வாய்ப்பு உள்ளது. இப்படி தொடர்ந்து தேவைக்கு அதிகமாக கலோரிகளை எடுத்துக்கொள்ளும்போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து கடந்த 2019-ல் Cell Metabolism இதழில் வெளியான ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செரிமான பிரச்சனைகள்:

உணவை நன்றாக மென்று சாப்பிடாமல் அவசர அவசரமாக விழுங்கும்போது செரிமானம் செய்ய கடினமாக இருக்கும். இதனால் சிலருக்கு வயிறு பாரமாக இருப்பது, ஏப்பம், வயிற்று வலி அல்லது வயிற்றில் அசௌகரியம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதுதொடர்பாக கடந்த 2002-ல் Journal of Dental Researchன் இதழில் வெளியான ஆய்வில், வேகமாக சாப்பிடுவது சிலருக்கு அஜீரணம், வயிற்று உப்புசம் (Bloating) போன்றவை ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

நெஞ்செரிச்சல்:

வேகமாக விழுங்கும்போது வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து, நெஞ்செரிச்சல் , ஏப்பம் போன்ற பிரச்சினைகள் உண்டாகும். மேலும், அவசரமாக சாப்பிடும் போது உணவு சரியாக அரைபடாமல் தொண்டையில் சிக்கி விழுங்குவதில் சிரமம் ஏற்படலாம்.

வாயுத் தொந்தரவு:

உணவை அவசரமாகச் சாப்பிடும்போது உணவுடன் சேர்த்து அதிக காற்றையும் நாம் விழுங்குகிறோம். இதனை ‘Aerophagia’ எனக் குறிப்பிடுகின்றனர். இதுகுறித்து 2009 வெளியான ஆய்வுகளில் அதிகமாக காற்றை விழுங்குவது வயிற்றில் உப்புசம், வயிறு விரிவடைதல், ஏப்பம் மற்றும் வாயுத் தொந்தரவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

சர்க்கரை அளவு அதிகரிப்பு:

நாம் மிக விரைவாகச் சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை திடீரென உயர்த்தும். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வேகமாக உணவை சாப்பிடும்போது post-meal blood glucose அதிகமாக உயர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வளர்சிதை மாற்றப் பிரச்சனை:

வேகமாக சாப்பிடுவது இன்சுலின் சுரப்பில் பாதிப்பை ஏற்படுத்தி, வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளுக்கு (Metabolic Syndrome) வழிவகுக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Related image1
Avoid food : உங்களுக்கு 30 வயசாச்சா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க!
Related image2
Vada Health Effects: “ஒரு வடைதானே..!”னு தினமும் சாப்பிடுறீங்களா? உடம்புக்குள் நடப்பது இதுதான்..!
33
எப்படி சாப்பிடுவது?
Image Credit : pinterest

எப்படி சாப்பிடுவது?

  1. ஒவ்வொரு வாய் உணவையும் நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
  2. சாப்பிடும்போது மொபைல் போன், தொலைக்காட்சி (TV பார்ப்பதை தவிர்க்கவும். இது உணவின் மீது கவனம் செலுத்த உதவும்.
  3. நேரமில்லை என்று உணவை வேகமாக விழுங்குவதைத் தவிர்த்து, ஒவ்வொரு வேளையும் உணவை நிதானமாக சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது.

About the Author

V
Vishnupriya
சுகாதார நன்மைகள்
உணவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பருவகால காய்ச்சலைத் தடுக்க உதவும் 5 நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள்
Recommended image2
Exercise Mistakes: உடற்பயிற்சியில் செய்யும் இந்த தவறுகள் காயம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும்!
Recommended image3
National Nutrition Week 2026: உடலுக்கு தேவையான சத்துகளை பெற சமச்சீர் உணவு தட்டு அமைப்பது எப்படி?
Related Stories
Recommended image1
Avoid food : உங்களுக்கு 30 வயசாச்சா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க!
Recommended image2
Vada Health Effects: “ஒரு வடைதானே..!”னு தினமும் சாப்பிடுறீங்களா? உடம்புக்குள் நடப்பது இதுதான்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved