MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Vadhanarayanan Keerai : வாதநாராயணன் கீரை சாப்பிட்டால் என்ன பலன்? இப்படி சமைத்து பாருங்க!

Vadhanarayanan Keerai : வாதநாராயணன் கீரை சாப்பிட்டால் என்ன பலன்? இப்படி சமைத்து பாருங்க!

Vadhanarayanan Keerai: வாதநாராயணன் கீரையை வைத்து என்னென்ன சமைக்கலாம்? இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பதை இந்த தொகுப்பில் சுருக்கமாக பார்க்கலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Aug 29 2026, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வாதநாராயணன் கீரை?
Image Credit : magnific

வாதநாராயணன் கீரை?

நம்ம ஊர்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கீரை வகைகளில் வாதநாராயணன் கீரையும் ஒன்று. இந்த பெயரைக் கேட்டாலே மூட்டு வலி, உடல் வலி போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படும் கீரை என்றுதான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இதன் பயன்பாடு அதோடு முடிந்துவிடுவதில்லை. இயற்கையின் அரிய கொடை எனக் கருதப்படும் இந்தக் கீரை, குறிப்பாக வாதம், நரம்பு வலி, சளி, காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மரமாக வளரும் கீரை
Image Credit : magnific

மரமாக வளரும் கீரை

முதலில் இந்தக் கீரையைப் பற்றி ஒரு முக்கியமான விஷயத்தை தெரிஞ்சிக்கனும். வாதநாராயணன் கீரையின் தாவரவியல் பெயர் Delonix elata. இது சாதாரண கீரைகளைப் போல தரையில் படர்ந்து வளராமல், மரமாக வளரக்கூடியதாகும். குறிப்பாக கிராமப்புறங்களில் வீட்டுத்தோட்டங்கள், புல்வெளிகள் மற்றும் சாலையோரப் பகுதிகளில் இயற்கையாகவே இந்த மரத்தைப் பார்க்க முடியும்.

Related Articles

Related image1
Manathakkali Keerai Soup : பல நோய்க்கும் ஒரு மருந்து 'மணத்தக்காளி' கீரை சூப்! ஈஸியான ரெசிபி இதோ
Related image2
Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
35
கீரையில் என்னென்ன சத்துக்கள் உள்ளது?
Image Credit : magnific

கீரையில் என்னென்ன சத்துக்கள் உள்ளது?

இந்த கீரையில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் செரிமானம், குடல் இயக்கம் மற்றும் தசைகளின் பராமரிப்புக்கு உதவக்கூடும். மேலும், கால்சியம் எலும்பு, பற்களின் ஆரோக்கியத்துக்கும், இரும்புச்சத்து ஹீமோகுளோபின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்து ரத்த சோகையையும் தடுக்கிறது. இதில் காணப்படும் பல்வேறு வைட்டமின்கள் உடல் சீராக இயங்குவதற்கும், கண் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

45
வாதநாராயணன் கீரையில் என்ன சமைக்கலாம்?
Image Credit : magnific

வாதநாராயணன் கீரையில் என்ன சமைக்கலாம்?

  1. இந்தக் கீரையை நன்றாக சுத்தம் செய்து, தேவையான அளவு வேகவைத்து அல்லது வதக்கி பல்வேறு உணவுகளாக சமைக்கலாம்.
  2. கீரைப் பொரியல்
  3. கீரை மசியல்
  4. கூட்டு
  5. துவையல்
  6. ரசம்
  7. பருப்பு கீரைக் குழம்பு
  8. கீரை சாதம் என பல வகைகளில் பயன்படுத்தலாம்.

முக்கியமாக வெங்காயம், பூண்டு, பருப்பு, மிளகு, சீரகம் போன்றவற்றை கேழ்வரகு மாவுடன் கலந்து அடை செய்தால் சுவையாக இருக்கும்.

55
உணவல்ல..மருத்துவம்
Image Credit : magnific

உணவல்ல..மருத்துவம்

வாதநாராயனன் கீரை என்பது உணவு மட்டுமல்ல, ஒரு முழுமையான மருத்துவம். தமிழர் பாரம்பரிய உணவு மற்றும் மருத்துவத்தில் இதன் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. நம் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்து, காலந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்தையும், இயற்கையையும் பாதுகாக்கும்.

குறிப்பு:

இது பொதுவான தகவல் மட்டுமே. கீரையை அதிகமாக சாப்பிடுவதற்குப் பதிலாக அளவோடு உணவில் சேர்ப்பதே நல்லது. மூட்டு வலி, நீண்டகால மலச்சிக்கல் அல்லது வேறு உடல்நலப் பிரச்சனை இருந்தால், இந்தக் கீரையை மட்டும் நம்பாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

About the Author

V
Vishnupriya
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தினமும் 2 முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் 7 நன்மைகள்!
Recommended image2
பெண்கள் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் 7 முக்கிய நன்மைகள்!
Recommended image3
Distracted Eating: TV பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? Very Danger!
Related Stories
Recommended image1
Manathakkali Keerai Soup : பல நோய்க்கும் ஒரு மருந்து 'மணத்தக்காளி' கீரை சூப்! ஈஸியான ரெசிபி இதோ
Recommended image2
Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved