MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • Period cramps: இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிட்டால் மாதவிடாய் வலி கூட பறந்து போகும்!

Period cramps: இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிட்டால் மாதவிடாய் வலி கூட பறந்து போகும்!

மாதவிடாய் காலத்தில் இலவங்கப்பட்டையினால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.  

1 Min read
Author : maria pani
Published : Jan 04 2023, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய சமையல் பொருள்களில் இலவங்கப்பட்டையும் ஒன்று என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் வெறும் சமையல் பயன்பாட்டிற்காக இதை சொல்லவில்லை, அதன் மருத்துவப்பயன்களுக்கும் பிரபலமானது இலவங்கப்பட்டை. ஆண்டிஆக்சிடண்ட், மெக்னீசியம், ஜிங்க், கார்போஹைட்ரேட், வைட்டமின், புரதம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துகள் இலவங்கத்தில் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை வலுப்படுத்த இது பெரிதும் உதவுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு இது பயன்படுகிறது. 

24

சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இலவங்கப்பட்டை மாதவிடாய் காலத்தில் சுழற்சியை சீராக்க உதவியது நிருபணமானது. மேலும் வலி நிவாரணியாகவும், ரத்தப்போக்கை சீராக்கவும் உதவும். இலவங்கப்பட்டை தூளை சூடான நீரில் சேர்த்து அருந்தலாம். பின்னர் தேன் கலந்து குடிக்கலாம். இப்படி குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் பட்டைத்தூளுடன் தேனை கலந்து சூரணம் போல உண்ணலாம். 

34

இலவங்கப்பட்டை பயன்கள் 

முகத்தில் உள்ள பருக்களை நீக்கி சருமத்தை பளபளக்க வைக்கும். மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை சீராக்கும். மாதவிடாய் வலியை குறைக்கும். மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் மூட் ஸ்விங்ஸ், ஹார்மோன் சமச்சீரின்மை ஆகிய பிரச்சனைகளை தீர்க்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தப் பட்டை நல்ல பயன் தரும். 

44

மாதவிடாய் வலி நிவாரணி 

மாதவிடாய் காலங்களில் சிலருக்கு மயக்கம், சோர்வு, வாந்தி வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். அடிவயிறு தாங்க முடியாத அளவுக்கு அதிகமான வலியை ஏற்படுத்தும். இது மாதிரியான நேரங்களில் இலவங்கப்பட்டை பெரிதும் உதவுகிறது. சூடான பாலில் பட்டை தூளை கலந்து அதனை அருந்தினால் மாதவிடாய் வலியில் இருந்து விடுபடலாம். இலவங்கப்பட்டையை கொண்டு தயாரித்த மூலிகை தேநீரை தயாரித்து அருந்தினால் வலி குறையும். வலி ஏற்படும்போது இலவங்கப்பட்டை எண்ணெய் வயிற்றி தடவி மசாஜ் செய்யலாம். 

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
5 வயது குழந்தை முதல் 75 வயது முதியவர் வரை… தினமும் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்?
Recommended image3
பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved