- Home
- உடல்நலம்
- Hungry After Meals : சாப்பிட்டாலும் உடனே பசி எடுக்குதா? காரணம் இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Hungry After Meals : சாப்பிட்டாலும் உடனே பசி எடுக்குதா? காரணம் இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
எவ்வளவு சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் பசி அதிகமாக எடுப்பதற்கான காரணங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Hungry After Meals
சிலருக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். இதை சாதாரண பசி என்று புறக்கணித்து விடாதீர்கள். ஆனால், இப்படி பசி எடுப்பதற்கு பின்னால் சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளும் மறைந்துள்ளன. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
நீரிழிவு நோய் :
நீரிழிவு நோய் அதிகப்படியான பசிக்கு முக்கிய காரணமாகும். நாம் சாப்பிடும் உணவானது குளுக்கோஸாக மாற்றிவிடும். இந்த குளுக்கோஸானது செல்களை அடைய இன்சுலின் தேவைப்படும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் சரியாக வேலை செய்யவில்லை என்றால், செல்களானது ஆற்றலைப் பெறாது. இதனால் ஆற்றலுக்காக தொடர்ந்து உணவுக்காக சமிக்ஞைகளை அனுப்பி கொண்டே இருக்கிறது. இதுவே எவ்வளவு சாப்பிட்டாலும் மீண்டும் மீண்டும் சாப்பிடுவதற்கான முதன்மையான காரணமாகும்.
தைராய்டு பிரச்சனைகள்:
தைராய்டு சுரப்பியானது அதிகமாகச் செயல்படும்போது, உடலின் வளர்சிதை மாற்ற விகிதமானது அதிகரிக்கும். இதனால் கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். ஆகவே, எவ்வளவு உணவு சாப்பிட்டாலும், உடலானது உடனடியாக அதை பயன்படுத்துவதால், மீண்டும் மீண்டும் பசி எடுக்கத் தொடங்கும். சிலருக்கு அதிக பசியும், எடை இழப்பும் ஏற்படலாம். வேகமான இதயத் துடிப்பு, பலவீனம், சோர்வு ஆகிய அறிகுறிகள் வந்தாலும் தைராய்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
தூக்கமின்மை
மன அழுத்தம் தூக்கத்தைக் கெடுக்கும். ஒருவருக்கு தீவிர மன அழுத்தம் காணப்பட்டால் அவரது உடலில் உயிர் காக்கும் ஹார்மோன் என அழைக்கப்படும் கார்டிசோல் அதிகமாக சுரக்கிறது. இதனால் உங்களுடைய பசி தொடர்ந்து அதிகரிக்கும். இரவில் சரியான உறக்கம் இல்லாதவர்களுக்கு பசியை தூண்டும் ஹார்மோனின் சுரப்பு அதிகமாகிறது. இதனால் பசியை குறைக்கும் லெப்டின் ஹார்மோன் சுரப்பு குறைந்து மிக மிஞ்சிய பசி ஏற்படுகிறது.
நீரிழப்பு
நம்முடைய மூளை, தண்ணீர் தாகத்தை பசி என்று தவறாக சிக்னல்களை அனுப்புவதால் அதிகமாக சாப்பிட்டு விடுகிறோம். ஆனால் உடலில் நீர்ச்சத்து குறைவதை புரிந்து கொண்டு தண்ணீர் குடிக்க வேண்டும். எல்லா பசிக்கும் உணவு தீர்வல்ல. ஒரு டம்ளர் தண்ணீர் போதுமானது.
மேலே சொல்லப்பட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உங்களுடைய உணவை ஆரோக்கியமாக மாற்றுவது அவசியம். புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்த உணவுகளை தினமும் குறைந்த பட்சம் 35 கிராம் சாப்பிடுவது உடலுக்கு அத்தியாவசியமானது. இதனால் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். அடிக்கடி பசி எடுக்காது. இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராது. மேலே குறிப்பிட்டுள்ள பிரச்சனைகள் தீவிரமாக இருந்தாலோ அல்லது ஆரம்பகட்ட அறிகுறிகள் இருந்தாலோ மருத்துவரை அணுகுவது அவசியம்.
