MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • இளம்வயதில் மாரடைப்பு; இதெல்லாமா காரணம்? தடுக்க என்ன செய்யனும் தெரியுமா?

இளம்வயதில் மாரடைப்பு; இதெல்லாமா காரணம்? தடுக்க என்ன செய்யனும் தெரியுமா?

இளம்வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், அதை தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் குறித்து இந்த பதிவில் காணலாம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Mar 26 2025, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

 Heart Attack Risk - Things Young People Should Pay Attention To! காலம் மாறிவிட்டது. நம்முடைய வாழ்க்கை முறையும் உணவு பழக்கமும் அடியோடு மாறிவிட்டது. துரித உணவுகள், பொரித்த உணவுகள், இனிப்பு உள்ளிட்ட ஆரோக்கியமில்லாத உணவுகளை உண்பது இளைய தலைமுறையினருக்கு விருப்பமான செயல்களாகிவிட்டது. இந்த ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் அவர்களுடைய உடல்நலம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிலருக்கு இளம் வயதில் மாரடைப்பு போன்ற உயிருக்கு தீங்கு விளைவிக்கும் நோய்களும் ஏற்படுகின்றன. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
இளம் வயதில் மாரடைப்பு:

இளம் வயதில் மாரடைப்பு:

- கெட்டக் கொழுப்பு உடலில் சேர்வது தான் மாரடைப்பு முக்கிய காரணமாக பார்ப்படுகிறது. ரத்த குழாயில் கொழுப்பு படிவதால் அவை ரத்தக் கட்டிகளாக (thrombus) மாறி ரத்த ஓட்டத்தை பாதிக்கின்றன. இரத்த ஓட்டம் சீராக இல்லாதபோது மாரடைப்பு வர காரணமாகிவிடுகிறது.  

- உடல் செயல்பாடு இல்லாமல் இருந்தாலும் பிரச்சனை தான். அதிகமாக உடற்செயல்பாடு இருந்தாலும் பிரச்சனை தான். திடீரென மாரடைப்பு வர நாள்பட்ட மன அழுத்தம் அல்லது அதிகமான உடல் செயல்பாடும் காரணம். சிலருக்கு பரம்பரை வழியாக மரபணு காரணமாக வரலாம்.  

36

- அதிகமான நேரம் அமர்ந்த நிலையில் இருப்பது, போதிய உடல் செயல்பாடு இல்லாதது போன்ற வாழ்க்கை முறையால் உடல் பருமன் அதிகரிக்கலாம். இப்படி உடற்செயல்பாடு குறையும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் மாரடைப்பு வரலாம். உயர் இரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பின் அளவு உயர்தலும் மாரடைப்பை வரவழைக்கும். மன அழுத்தம், மரபணு காரணிகள்  இளம் வயதினர் இடையே  மாரடைப்பு அதிகரிக்க காரணங்களாக உள்ளன. வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றுவது, பரிசோதனைகள்  மூலம் முன்கூட்டி தெரிந்து கொண்டு சிகிச்சை செய்தால் தடுக்கலாம். 

46
உணவு பழக்கம்:

உணவு பழக்கம்:

சுவைக்காக பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை அதிகம் கலக்கப்பட்ட பானங்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் போன்றவை எடையை அதிகரிக்கும். அதிக எடை இதய நோய் வரக் கூடிய வாய்ப்பை அதிகரிக்க வழிவகுக்கும். 

இதையும் படிங்க:  ஹார்ட் அட்டாக் வருதவற்கு முன் தோன்றும் 8 அறிகுறிகள்!

56
தூக்கமின்மை:

தூக்கமின்மை:

இரவு முழுக்க செல்போன் பார்ப்பது, தாமதமாக தூங்குவது என தூங்காமல் இருப்பது உடலுக்கு நல்லதல்ல. நாள்பட்ட மனச்சோர்வு, தூக்கமின்மை போன்றவை இரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.  இதனால் இதய நோய் வர வாய்ப்புள்ளது. 

புகைபிடித்தல்: 

புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட போதை பழக்கங்கள் இதய செயல்பாட்டை பாதிக்கும்.  

இதையும் படிங்க: பக்கவாதம், மாரடைப்புக்கு தடுப்பூசி: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

66
எவ்வாறு தடுப்பது?

எவ்வாறு தடுப்பது?

- ஆரோக்கியமான வாழ்க்கை முறை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நல்ல தூக்கம் அவசியம். குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்க வேண்டும். ஒரு வாரத்தில் 4 முதல் 5 நாட்கள் மிதமான உடற்பயிற்சி செய்தாலே போதும். திரைப்படங்களில் வருவது போல சிக்ஸ் பேக், சைஸ் ஸீரோ போன்ற மாயைகளில் இளைய தலைமுறை சிக்கக் கூடாது. போதிய தூக்கமில்லாத தீவிர உடற்பயிற்சி மாரடைப்பு  வர காரணமாக அமையலாம். உடற்பயிற்சி செய்பவர்கள் அவ்வப்போது சுகாதார நிபுணர்களிடம் ஆலோசிப்பது நல்லது. 

- 25 வயதுக்கு மேற்பட்டோர்  கெட்டக் கொழுப்பு பரிசோதனையை செய்து பார்க்க வேண்டும். உடலில் இருக்கும் கெட்டக் கொழுப்பின் அளவை பொறுத்து உணவு பழக்கங்களை மாற்ற வேண்டும். மருத்துவரிடம் ஆலோசித்து மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு இருப்பின் இளம் வயதிலேயே உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்த வேண்டும். இதனால் கெட்டக் கொழுப்பை குறைக்கலாம். இதய ஆரோக்கியமும் மேம்படும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Recommended image2
Mushroom Chutney: காளான் சட்னி ரெசிபி..காரசாரமான சுவையில் ஈஸியாக செய்வது எப்படி?
Recommended image3
Egg Curry: உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு.. மணக்க மணக்க காரசாரமான கிராமத்து ஸ்டைல் ரெசிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved