தினமும் 1 ஸ்பூன் பரங்கி விதை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
கிராமங்களில் மிகவும் எளிதாக கிடைக்க கூடிய பரங்கி விதைகள், தற்போது பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. தினமும் பரங்கி விதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

பரங்கி விதையின் நன்மைகள்
பரங்கி விதையில் வைட்டமின் சி, மெக்னீசியம், புரதம், துத்தநாகம், இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதன் விதைகள் தினமும் சாப்பிடுவதால், வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உங்கள் உடலுக்கு கிடைக்கும். இதன் முழுமையான 6 ஆரோக்கிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.
இதய ஆரோக்கியம்
மிகவும் விலை குறைவாக கிடைக்கும் இந்த விதையை, வாங்கி லேசாக சூடு படுத்தி, அரைத்து ஒரு ஸ்பூன் பாலில் நீங்கள் கலந்து குடிப்பதால், இதில் இருக்கும் மெக்னீசியம் உங்களின் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து. அதே போல் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த இந்த பரங்கி விதைகள் கெட்ட கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
உங்க குழந்தை புத்திசாலியாக இருக்கனுமா? அப்போ காலையில 'இப்படி' பழக்குங்க!!
எதிர்ப்பு சக்தி:
உங்களின் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என நீங்கள் கவலை பட்டால், பரங்கி விதைகளை தாராளமாக கொடுக்கலாம். இதில் உள்ள வைட்டமின் சி, ஈ, துத்தநாகம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
நல்ல தூக்கத்தை கொடுக்கும்:
சிலருக்கு வயது முதிர்வு, அல்லது ஆபீஸ் டென்சன் காரணமாக சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுவார்கள். அப்படி பட்டவர்கள் நல்ல தூக்கம் வேண்டும் என்றால் ஒரு ஸ்பூன் பரங்கி விதையை இரவில் சாப்பிடுவது அவர்களுக்கு நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
எடையை குறைக்கும் அற்புத மசாலா பொருள்..இதை '1' டம்ளர்ல போட்டு குடிங்க!!
மூளை ஆரோக்கியம்
குழந்திகளுக்கு நீங்கள் பரங்கி விதையை தொடர்ந்து கொடுத்து வருவதால், இதில் இருக்கும் துத்தநாகம், மெக்னீசியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் அவர்களின் மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது. நியாபக சக்தியில் சிறந்து விளங்குவார்கள். இது அவர்களின் படிப்புக்கு அதிகம் கை கொடுக்கும்.
செரிமானம்:
பரங்கி விதையில், ஏராளமான சத்துக்கள் உள்ளதோடு, நார் சத்தும் நிறைந்த நிறைந்துள்ளது. இது குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவர்களின் செரிமானத்தை மேம்படுத்தவும். குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும்.
மாரடைப்பு வராமல் தடுக்க பெண்கள் 'எத்தனை' காலடிகள் நடக்கனும்?
எடை குறைப்பு
பரங்கி விதைகளில் ஆரோக்கியம் எந்த அளவுக்கு அதிகமோ... அதே போல் கலோரி அளவு மிகக் குறைவு. மேலும் நார்ச்சத்தும் இவற்றில் உள்ளது. எனவே பசியைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்க இதன் விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
குறிப்பு: உணவு முறையில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு, மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.