எடையை குறைக்கும் அற்புத மசாலா பொருள்..இதை '1' டம்ளர்ல போட்டு குடிங்க!!
Bay Leaf Water : தினமும் காலை வெறும் வயிற்றில் பிரியாணியில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு காணலாம்.

எடையை குறைக்கும் அற்புத மசாலா பொருள்..இதை '1' டம்ளர்ல போட்டு குடிங்க!!
பிரியாணி இலை சமையலறையில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்றாகும். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமில்லாமல், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இலையானது உங்களது உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது அதாவது இதில் பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் பிரியாணி இலை ஊற வைத்த தண்ணீரை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? அது என்னவென்று பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எடையை குறைக்கும்:
பிரியாணி இலை ஊற வைத்த தண்ணீரானது எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தினமும் காலை வெறும் வயிற்றில் இது குளிப்பதன் மூலம், அதில் இருக்கும் மெட்டபாலிசம் அதிகரித்து வயிறு நீண்ட நேரம் நிரம்பி இருக்கும். இதனால் உடல் எடையை எளிதாக குறைத்து விடலாம். வேண்டுமானால் இந்த நீரை மதியம் மற்றும் இரவு நோக்கு பிறக்கும் குடிக்கலாம்.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்:
பிரியாணி இலை நீரானது தொடர்ந்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு ரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். ஏனெனில் பிரியாணி இலையில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் ரத்த சர்க்கரை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
தொற்றுக்களை நீக்கும்:
பிரியாணி இலையில் வைட்டமின் சி ஏராளமாகவே உள்ளன. இதுதவிர இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளது. இவை தொற்றுநோய்களிலிருந்து உங்களை பாதுக்கால்கும். எனவே, பிரியாணி இலை நீரை குளிர்காலத்தில் குடித்தால் சளி, இருமல் பிரச்சினையை நீக்கும்.
வீக்கத்தைக் குறைக்கும்:
பிரியாணி இலையில் இருக்கும் சினியோல் வீக்கத்தைக் குறைக்கும். எனவே, நீங்கள் பிரியாணி இலை தண்ணீர் தொடர்ந்து குடித்து வந்தால் வீக்கத்தை எதிர்த்து போராடும். அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் வீக்கம் பிரச்சினை அதிகரித்தால், இந்த நீரை ஒருநாளை இரண்டு முறை குடிக்கவும்.
இதையும் படிங்க: பணம் யோகம் பெற இதை மட்டும் உங்க பர்ஸ்ல வைங்க...பண மழை பொழியும்..!!
தூக்கத்தை மேம்படுத்தும்:
தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், பிரியாணி இலை தண்ணீர் குடிக்கவும். அதுவும் இரவு தூங்கும் முன் சிறிது நேரத்திற்கு முன் குடியுங்கள்.
சிறுநீரக கல் பிரச்சனையை தடுக்கும்:
பிரியாணி இலை கல் சிறுநீரக கல் பிரச்சனையை தடுக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு இந்த நீரை நீங்கள் ஒரு நாளைக்கு 2-3 முறை குறித்து வந்தால் சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்து நிபரணம் கிடைக்கும்.
இதையும் படிங்க: கற்பூரத்துடன் பிரியாணி இலையை அந்த நாளில் எரித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தயாரிப்பது எப்படி?
இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள் பிறகு அதில் 2-3 பிரியா நிலையை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் பெருஞ்சீரகம் அல்லது இலவங்கப்பட்டை தூள் சேர்க்கலாம். தண்ணீர் பாதியாக வந்ததும் வடிகட்டி குடித்தால் பல நன்மைகளை பெறுவீர்கள்.
குறிப்பு : உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அல்லது மருந்துகள் எடுத்துக் கொண்டால் இந்த நீரை குடிப்பதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.