MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • காய்ச்சல் சரியானாலும் இருமல் மட்டும் சில வாரங்கள் போகலையா? இதான் காரணம்!

காய்ச்சல் சரியானாலும் இருமல் மட்டும் சில வாரங்கள் போகலையா? இதான் காரணம்!

Post-infectious cough: சிலருக்கு காய்ச்சல் சரியானாலும் இருமல் மட்டும் சில வாரங்கள் போகாமல் தொல்லை கொடுக்கும். இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 26 2026, 02:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காய்ச்சல் சரியானாலும் இருமல் மட்டும் சில வாரங்கள் போகலையா?
Image Credit : Getty

காய்ச்சல் சரியானாலும் இருமல் மட்டும் சில வாரங்கள் போகலையா?

வைரல் காய்ச்சல் வந்தால் உடம்பு வலி, தொண்டை வலி, மூக்கடைப்பு என்று பல பிரச்சனைகள் வரும். கொஞ்ச நாளில் இந்த அறிகுறிகள் எல்லாம் சரியாகிவிடும். ஆனால், இருமல் மட்டும் சில வாரங்களுக்கு அப்படியே இருக்கும். காய்ச்சல் சரியான பிறகும் தொடரும் இந்த இருமலை 'போஸ்ட்-இன்ஃபெக்ஷியஸ் காஃப்' (Post-infectious cough) என்று சொல்கிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
போஸ்ட்-நேசல் டிரிப்
Image Credit : Getty

போஸ்ட்-நேசல் டிரிப்

வைரஸ் உடம்பை விட்டுப் போன பிறகும், தொண்டை மற்றும் சுவாசப் பாதையில் வீக்கமும் உணர்திறனும் கொஞ்ச நாளைக்கு அப்படியே இருக்கும். இதனால் குளிர்ந்த காற்று, தூசு, பேசுவது, சிரிப்பது அல்லது கடுமையான வாசனை வந்தால் கூட உடனே இருமல் வந்துவிடும். காய்ச்சல் நேரத்தில் உருவான அதிகப்படியான சளியும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

இதுமட்டுமில்லாமல், மூக்கு அல்லது சைனஸில் இருந்து சளி தொண்டைக்குப் பின்னால் இறங்கும் 'போஸ்ட்-நேசல் டிரிப்' (Post-nasal drip) பிரச்சனையும் இருமலை அதிகமாக்கும். குறிப்பாக, இரவில் தூங்கும்போது தொண்டையில் உறுத்தல் ஏற்பட்டு இருமல் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.

34
இருமல் எத்தனை நாள் இருப்பது சாதாரண விஷயம்?
Image Credit : Getty

இருமல் எத்தனை நாள் இருப்பது சாதாரண விஷயம்?

வைரல் காய்ச்சலுக்குப் பிறகு 3 முதல் 8 வாரங்கள் வரை இருக்கும் இருமலை சப்-அக்யூட் (Subacute) இருமல் என்று சொல்வார்கள். நேரம் செல்லச் செல்ல இருமலின் தீவிரம் தானாகவே குறைந்துவிடும். ஆனால், 8 வாரங்களுக்கும் மேல் இருமல் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரைப் பார்க்க வேண்டும். ஆஸ்துமா, ஆசிட் ரிஃப்ளக்ஸ், நாள்பட்ட மூக்கு பிரச்சனைகள் அல்லது வேறு ஏதாவது நுரையீரல் பாதிப்பு இருக்கிறதா என்று சோதிக்க வேண்டியது அவசியம்.

இருமலுக்கு ஆன்டிபயாடிக் மாத்திரை தேவையா?

வைரல் காய்ச்சலுக்குப் பிறகு வரும் இருமலுக்கு நாமே ஆன்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கிப் போடுவது தவறு. வைரஸுக்கு எதிராக ஆன்டிபயாடிக் வேலை செய்யாது. தேவையில்லாமல் இதைப் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் வருவதோடு, ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் அபாயமும் அதிகரிக்கும். பாக்டீரியல் நிமோனியா, பாக்டீரியல் சைனசிடிஸ் அல்லது கக்குவான் இருமல் என்று சந்தேகம் இருந்தால் மட்டும், மருத்துவரின் அறிவுரைப்படி மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.

44
இருமலைக் குறைக்க என்ன செய்யலாம்?
Image Credit : Getty

இருமலைக் குறைக்க என்ன செய்யலாம்?

உடலை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அப்பப்போது சூடான பானங்கள் குடிப்பது தொண்டை கரகரப்பைக் குறைக்கும். புகை, தூசு, இருமலைத் தூண்டும் வாசனைகளில் இருந்து தள்ளி இருப்பது ரொம்ப நல்லது. ஒரு வயசுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தேன் கொடுக்கலாம். மூக்கடைப்பு இருந்தால் சலைன் நாசல் வாஷ் பயன்படுத்தினால் கொஞ்சம் நிவாரணமாக இருக்கும். ஆவி பிடிப்பது சிலருக்கு தற்காலிகமாக ஒரு நிம்மதியைக் கொடுக்கும். ஆனால், சுடுதண்ணாரில் காயம் படாமல் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.

எப்போது மருத்துவரை பார்க்க வேண்டும்?

இருமல் நாளுக்கு நாள் குறையாமல் அதிகரித்துக்கொண்டே போனால் அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, வீசிங், அதிக காய்ச்சல், சளியில் இரத்தம், காரணமே இல்லாமல் உடல் எடை குறைவது, குரல் மாற்றம் அல்லது ரொம்ப சோர்வாக உணர்ந்தால் உடனே மருத்துவமனைக்குச் சென்றுவிட வேண்டும்.

தேவைப்பட்டால் மருத்துவர்கள் நெஞ்சு எக்ஸ்-ரே அல்லது லங் ஃபங்ஷன் டெஸ்ட் எடுக்கச் சொல்வார்கள். அதனால், வைரல் காய்ச்சலுக்குப் பிறகு வரும் இருமல் எல்லாமே பெரிய பிரச்சனை என்று பயப்படத் தேவையில்லை. ஆனால் அது ரொம்ப நாள் நீடித்தால் அல்லது வேறு ஏதாவது ஆபத்தான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைப் பார்த்து காரணம் தெரிந்துகொள்வது ரொம்ப முக்கியம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vathal Kulambu: அட்டகாசமான கல்யாண வீட்டு ஸ்டைல் வத்தக்குழம்பு செய்வது எப்படி?
Recommended image2
Idli Maavu Vada: இட்லி மாவில் மெதுவடை..மீதமான மாவை வீணாக்காமல் மொறுமொறுப்பாக செய்வது எப்படி?
Recommended image3
Milk paneer: ஒரிஜினல் பன்னீர் vs போலி பன்னீர்.! இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
Related Stories
Recommended image1
Fever Diet: காய்ச்சல் நேரத்தில் சிக்கன் சாப்பிடலாமா? நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
Recommended image2
Bath During Fever: காய்ச்சல் வந்தால் குளிக்கலாமா? தெரிந்துகொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved