- Home
- உடல்நலம்
- Male Fertility: ஆண்களே உஷார்.! இந்த இந்த ஒரு உணவு உங்க கருவுறுதல் திறனை பாதிக்குமாம்.! ஆய்வு முடிவில் அதிர்ச்சி.!
Male Fertility: ஆண்களே உஷார்.! இந்த இந்த ஒரு உணவு உங்க கருவுறுதல் திறனை பாதிக்குமாம்.! ஆய்வு முடிவில் அதிர்ச்சி.!
அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra-processed foods) சாப்பிடுவது ஆண்களின் கருவுறுதல் திறனை மோசமாக பாதிக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரிக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த உணவுகள் கருவுறுதல் திறனை மோசமாக பாதிக்கும்
அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடும் ஆண்களுக்கு கருவுறுதல் திறன் குறைகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, இது கருவின் ஆரம்பகட்ட வளர்ச்சியையும் மெதுவாக்குகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள்
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு, பெற்றோர்கள் அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை (UPF) சாப்பிடுவது, கருத்தரிக்கும் நேரத்தையும், கருவின் வளர்ச்சியையும் எப்படி பாதிக்கிறது என்பது குறித்து இதுவரை எந்த ஆய்வும் செய்யப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஹியூமன் ரீப்ரொடக்ஷன் இதழில் வெளியான ஆய்வு
UPF நுகர்வு மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்
இராஸ்மஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் ஆராய்ச்சியாளரான டாக்டர். ரோமி கெய்லார்ட், ஆண்கள் அதிகளவில்அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது மலட்டுத்தன்மைக்கான அபாயத்தை அதிகரிக்கிறது எனக் கண்டறிந்துள்ளதாகக் கூறுகிறார்.
மாரடைப்பு அபாயம் அதிகம்
அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் மற்றும் மாரடைப்பால் இறக்கும் அபாயம் மிக அதிகம். ஆய்வில் பங்கேற்றவர்களின் தினசரி கலோரிகளில் 15% இந்த வகை உணவுகளில் இருந்துதான் வந்திருக்கிறது.
இனிப்பு பானங்களும் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும்
இனிப்பு குளிர்பானங்கள் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் அகால மரணத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2019-ல் பிரேசிலில் நிகழ்ந்த 57,000 அகால மரணங்களுக்கு அதிகமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளே காரணம் என 'அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் மெடிசின்' கூறுகிறது.
சில உணவுகள் அதிகளவில் பதப்படுத்தப்படுகின்றன
கொழுப்பு, ஸ்டார்ச், சேர்க்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள் போன்ற பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு பதப்படுத்தப்பட்ட உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

