- Home
- உடல்நலம்
- Bread Without Maida: மைதா வேண்டாம்.. முட்டை வேண்டாம்.. ஓவனும் வேண்டாம்! குக்கரில் பிரெட் செய்வது எப்படி?
Bread Without Maida: மைதா வேண்டாம்.. முட்டை வேண்டாம்.. ஓவனும் வேண்டாம்! குக்கரில் பிரெட் செய்வது எப்படி?
Bread Without Maida: மைதா, முட்டை, ஓவன் இல்லாமல் குக்கரில் பிரெட் செய்வது எப்படி? தேவையான பொருட்கள், எளிய செய்முறை மற்றும் மென்மையான பிரெட் செய்யும் முக்கிய குறிப்புகளை தெரிந்துகொள்ளுங்கள்.

வீட்டிலேயே பிரெட் செய்ய ஆசையா?
வீட்டிலேயே பிரெட் செய்ய ஆசையா? ஓவன் இல்லையே என்று கவலைப்படுகிறீர்களா? மைதா, முட்டை எதுவும் இல்லாமல், வீட்டில் இருக்கும் ரவையை வைத்து மென்மையான பிரெட் போன்ற கேக்கை சாதாரண குக்கரிலேயே செய்யலாம்.
அதிக செலவும் வேண்டாம், சிக்கலான பொருட்களும் தேவையில்லை. காலை உணவு, மாலை நேர ஸ்நாக்ஸ் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் வகையில் இந்த ரவை பிரெட்டை எளிதாகத் தயாரிக்கலாம்.
ஓவன் இல்லாமல் குக்கரில் எப்படி மென்மையாகச் செய்வது? தேவையான பொருட்கள் என்ன? சரியான பதம் எப்படி இருக்க வேண்டும்? குக்கரில் எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும்? இதோ முழு செய்முறை.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
தயிர் - 1\2 கப்
பால் - 1\2 கப் வரை
சர்க்கரை - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் அல்லது உருகிய வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய் பொடி - 1\2 டீஸ்பூன்
நறுக்கிய முந்திரி/பாதாம் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
- ரவை சற்று கொரகொரப்பாக இருந்தால் மிக்ஸியில் ஒரு சுற்று மட்டும் அரைத்துக் கொள்ளலாம். மிகவும் நைசாக அரைக்க வேண்டியதில்லை.
- ஒரு பாத்திரத்தில் ரவை, தயிர், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் பால், தண்ணீர், எண்ணேய்யை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்.
- இந்த கலவையை சுமார் 20-30 நிமிடங்கள் மூடி வைக்கவும். ரவை பாலை உறிஞ்சி ஊறிய பிறகு மாவு கெட்டியாகும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்து கலக்கலாம்.
மாவு ஊறுவது நல்லது
ஊறிய மாவில் எண்ணெய் அல்லது உருகிய வெண்ணெய், ஏலக்காய்த் தூள் சேர்த்து கைகளால் நன்றாகப் பிசையவும். பின்னர் மாவை மூடி வைத்து சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு மணி நேரம் கழித்து மாவைத் திறந்து பார்த்தால், அது நன்றாக உப்பியிருக்கும். அந்த மாவை சப்பாத்தி போன்று மெதுவாக உருட்டி, மடித்து தயார் செய்து கொள்ளவும்.
இந்த மாவை ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி, 30 நிமிடங்கள் மீண்டும் ஊறவிடவும். பின்னர் மாவை எடுத்து, அதன் மேற்பரப்பில் சிறிதளவு எண்ணெய் தடவி, மேலே நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் சேர்க்கவும்.
குக்கரில் எப்படி செய்வது?
- குக்கரின் உள்ளே கொஞ்சம் உப்பு சேர்த்து, ஒரு சிறிய ஸ்டாண்ட் வைக்கவும்.
- குக்கரை மூடி 5 -10 நிமிடங்கள் மிதமான தீயில் முன்கூட்டியே சூடாக்கவும்.
- தயார் செய்து வைத்த மாவை பாத்திரத்துடன் குக்கருக்குள் உள்ள ஸ்டாண்ட் மீது வைக்கவும்.
- விசில் மற்றும் ரப்பர் கேஸ்கெட் இல்லாமல் குக்கரை மூடி, மிதமான அல்லது குறைந்த தீயில் சுமார் 30–40 நிமிடங்கள் வேகவிடவும்.
- 30 நிமிடங்களுக்குப் பிறகு குச்சி அல்லது டூத் பிக் குத்திப் பார்க்கவும். மாவு ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது.
- முழுமையாக ஆறிய பிறகு துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.

