Sleep: உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினசரி எவ்வளவு நேரம் தூங்கினால் நல்லது?
மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நகர்ந்து கொண்டிருக்கும் இயந்திர உலகில், ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தூக்கம் என்பது இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ஆம், நாள் முழுக்க உழைத்து களைத்தவர்களுக்கு தூக்கம் தான் ஓய்வைத் தருகிறது. இளவயது குழந்தைகள், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் எனத் தொடங்கி வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் இன்றியமையாதது தூக்கம் தான். இன்று குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலருக்கும், ஒரு நாளில் 7 மணி நேரம் தூங்குவதே கடினமான விஷயமாக மாறி விட்டது. மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தூக்கம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
நல்ல தூக்கம் தான் பலம்
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் குறைந்த நேரம் தூங்கி, அதிக நேரம் படிக்க ஆயத்தமாவார்கள். ஆனால், இது முற்றிலும் தவறானது. நல்ல தூக்கம் தான் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், படித்த பாடங்கள் அனைத்தும் மனதில் நன்கு பதியும். இதனால் தேர்வை சிறப்பாக எழுத முடியும். ஆகவே, தேர்வு நேரங்களில் மாணவர்கள் ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூங்குவது அவசியமாகும்.
சதுரங்க விளையாட்டு வீரர்கள், சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக, நன்கு தூங்குவார்கள். இதனால் சதுரங்கப் போட்டியின் போது, காய் நகர்த்தலில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ள முடியும்.
sleeping
தூக்கமின்மை குறைபாடு
தூக்கமின்மை குறைபாடு உள்ளவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி, நல்ல மனநிலையில் உங்களை வைத்திருக்க தூக்கம் உதவுகிறது. ஒரு முக்கியமான விஷயத்தில் முடிவு எடுப்பது குறித்து குழம்பி உள்ளீர்கள் எனில், அன்றைய இரவு நன்றாக தூங்கி காலை எழுந்தால், நல்ல முடிவு உங்கள் மனதில் தானாக முன்வரிசையில் வந்து நிற்கும். தூங்கும் போது இரத்த அழுத்தம் குறைவதால், இரத்த நாளங்களுக்கு ஓய்வு கிடைக்கும். மேலும் உடல் வலி, வீக்கம் மற்றும் உடலின் உஷ்ணம் குறையும்.
Egg: முட்டை சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? உண்மைத் தகவல் இதோ!
எவ்வளவு நேரம் தூங்கலாம்?
இரவில் வேலை செய்யும் பல நபர்களுக்கு செரிமானப் பிரச்னைகள் உண்டாகும். மேலும், உடற்பருமனும் அதிகரிக்கும். நிம்மதியான இரவுத் தூக்கம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன், உடல் எடையை சீராக்கவும் உதவுகிறது. அதேநேரத்தில், ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதும் தவறான செயலாகும். இதன் காரணமாக உடலில் அளவுக்கு அதிகமான கால்சியம் சேரும். கைக்குழந்தைகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. குழந்தைகளுக்கு தினசரி 10 மணிநேரத் தூக்கம் தேவைப்படும். உடல் ஆரோக்கியத்திற்கு உணவுகள் மட்டுமல்ல நல்ல தூக்கமும் முக்கியம் தான்.