MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • மாரடைப்பு அல்லது நெஞ்சரிச்சல்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

மாரடைப்பு அல்லது நெஞ்சரிச்சல்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

மார்பு வலி நெஞ்செரிச்சல் அல்லது மாரடைப்பு என தவறாக கருதப்படலாம். மார்பு வலி, தாடை, கழுத்து, கைகள் மற்றும் முதுகில் பரவினால் அது மாரடைப்பாக இருக்கலாம். உடல் உழைப்பின் போது வலி அதிகரித்தால் உடனடி மருத்துவ உதவியை நாடவும்.

2 Min read
Author : Ramya s
Published : Aug 27 2024, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Heart attack

Heart attack

சில நேரங்களில் நெஞ்செரிச்சல் என்பது மாரடைப்பாக தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.அவை இரண்டும் மார்பு வலியை ஏற்படுத்தும் என்றாலும், சரியான மருத்துவ கவனிப்பைப் பெறுவதற்கு இவற்றின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியம். மார்பு வலி பல்வேறு காரணிகளால் ஏற்படலாம், இது தசை வலி, மாரடைப்பு அல்லது நெஞ்செரிச்சலை குறிக்கிறதா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்பதால் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தும். ஆனால் அதை அலட்சியம் செய்வது ஆபத்தாக முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Heart attack

Heart attack

மாரடைப்பு வலி என்பது ஒரு பொதுவான கூர்மையான வலி அல்ல, மாறாக உடல் முழுவதும் பரவும் அசௌகரியத்தின் உணர்வு. வலி பொதுவாக மார்பில் இருந்து தொடங்குகிறது மற்றும் தாடை, கழுத்து, கைகள் மற்றும் சில நேரங்களில் முதுகில் பரவுகிறது.

36
Heart attack

Heart attack

திடீர் மார்பு வலி ஏற்படும் போது சிலருக்கு பயம் ஏற்படலாம். ஆனால் மாரடைப்பு வலியை நெஞ்செரிச்சலில் இருந்து எவ்வாறு வேறுபடுத்துவது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். திடீரென நெஞ்சு வலி ஏற்படும் போது, தண்ணீர் குடித்த பிறகு வலி குறைய ஆரம்பித்தால், அது மாரடைப்பு அல்ல அசிடிட்டி காரணமாக இருக்கலாம். ஆனால் வலி குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவ கவனிப்பு தேவைப்படும் இதயப் பிரச்சனையைக் குறிக்கலாம்.

46
Heart attack

Heart attack

நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான காரணி உடல் உழைப்புக்கும் வலிக்கும் உள்ள தொடர்பு. உடல் செயல்பாடுகளுடன் வலி அல்லது அசௌகரியம் அதிகரித்தால், அது இதயத்துடன் தொடர்புடையதாக இருக்கும். இந்த வகையான உழைப்பு தொடர்பான வலி, மாரடைப்பு உள்ளிட்ட இதயப் பிரச்சினைகளின் பொதுவான அறிகுறியாகும். உடல் உழைப்பு இல்லாமல் வலி மாறவில்லை என்றால், அது இதயம் அல்லாத தோற்றமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றன்றனர்.

56
Heart attack

Heart attack

மாரடைப்பு அறிகுறிகளை அசிடிட்டி என்று தவறாகக் கூறி, ஆன்டாக்சிட்களைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதால், பிரச்சனை தானாகவே குணமாகும் என்று பலர் நம்புகிறார்கள். மாரடைப்பு வலி மற்றும் நெஞ்செரிச்சலை வேறுபடுத்துவதில் இந்த சிரமம் தாமதமாக சிகிச்சைக்கு வழிவகுக்கிறது.

 

66
Heart attack

Heart attack

முறையான மருத்துவ சிகிச்சை பெறுவதில் இந்த தாமதம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். வலியின் தன்மை குறித்து ஏதேனும் நிச்சயமற்ற தன்மை இருந்தால் மருத்துவ உதவியை நாடுவது அவசியம். இந்த வேறுபாடுகளை உணர்ந்து உடனுக்குடன் பதிலளிப்பது உயிரைக் காப்பாற்ற உதவும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Homemade Biryani Masala : வீட்டிலேயே பிரியாணி மசாலா பொடி செய்வது எப்படி? கமகமக்கும் மணத்திற்கு இந்த ரகசிய ரெசிபி போதும்!
Recommended image2
Protein : சைவ உணவில் புரதம் பெற சிறந்த பயறு எது? எந்தப் பயறில் எவ்வளவு புரதம்?
Recommended image3
Kanchipuram Thenkuzhal Murukku : தீபாவளி ஸ்பெஷல் காஞ்சிபுரம் தேன்குழல் முறுக்கு..மொறுமொறுப்பான சுவையில் அசத்தும் பாரம்பரிய பலகாரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved