- Home
- உடல்நலம்
- Night Shift Health Tips : அடிக்கடி நைட் ஷிப்ட் வேலையா? மறக்காம இந்த '4' விஷயங்களை பாலோ பண்ணுங்க! ஹெல்த் நல்லாருக்கும்
Night Shift Health Tips : அடிக்கடி நைட் ஷிப்ட் வேலையா? மறக்காம இந்த '4' விஷயங்களை பாலோ பண்ணுங்க! ஹெல்த் நல்லாருக்கும்
நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் ஆரோக்கியமாக இருக்க கீழே குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.

தினமும் காலையில் எழுந்து வேலைக்கு செல்வதே பெரும் பாடாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், உலகமே தூங்கும் நேரத்தில் இரவு பணிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளன. அதிலும் சிலர் ரொட்டேஷன் முறையிலும், இன்னும் சிலரோ நிரந்தரமாகவும் நைட் ஷிப்டில் வேலை செய்கின்றனர்.
நைட் ஷிப்டில் வேலை செய்பவர்களுக்கு உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பிரச்சனைகள் அழையா விருந்தாளிகள் போல வந்துவிடும். அதிலும் குறிப்பாக ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களை விட, நிரந்தரமாக நைட் ஷிப்டில் வேலை செய்பவர்களுக்கு தான் உடல் உபாதைகள் அதிகமாக வரும் என்று சொல்லப்படுகின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் ஹெல்தியாக இருக்க கீழே குறிப்பிட்ட சில விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும். அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
நைட் ஷிப்ட் முடிந்து வீட்டிற்கு வந்துடும் உடனே படுத்து தூங்காமல் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் மிதமான வேகத்தில் வாக்கிங் செல்லவும் அல்லது லேசான ஸ்ட்ரெட்சஸ் செய்யவும். இப்படி செய்தால் ஆழமான தூக்கம் கிடைக்கும். மேலும் தூங்கி எழுந்தவுடன் உற்சாகமாக உணர்வீர்கள். அதுபோல சூடான நீரில் குளிக்கவும்.
நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் இரவு முழுவதும் அலுவலக வெளிச்சத்தில் இருந்து தான் பணி செய்வார்கள். எனவே, காலையில் வீட்டுக்கு கிளம்பும் முன் கருப்பு கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும். அதுபோல தூங்கும் அறை முழுவதுமாக இருக்க வேண்டும்.
பகல் முழுவதும் தூங்கிய பிறகு மதியம் எழுந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். அதுபோல 6 முதல் 7 மணிக்குள் இரவு சாப்பாட்டை முடித்து விடுங்கள்.
அதுபோல நீங்கள் தூங்குவதற்கு சுமார் 6 மணி நேரத்திற்கு முன் டீ,.காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. உதாரணமாக நீங்கள் காலையில் 9 மணிக்கு தூங்க செல்கிறீர்கள் என்றால் இரவு 1 மணிக்கு மேல் காபி, டீ குடிப்பதை தவிர்க்கவும்.

