புற்றுநோய் முதல் சுவாச பிரச்சனை வரை! பல பிரச்சனைகளுக்கு மருந்தாகும் வெற்றிலை!
வெற்றிலை என்பது, இந்தியாவில் அதிகம் கிடைக்க கூடிய ஒரு இலை என்பது நமக்கு தெரியும். மங்களகரமான விசேஷங்களில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் அதையும் தாண்டி வெற்றிலையில் உள்ள, மருத்துவத்தின் மகத்துவம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
Betel Leaf Health Benefit
தமிழகர்களின் கலாச்சாரத்தில், வெற்றிலைக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது. அந்த காலங்களில் நம் பாட்டன்.. பூட்டன்கள் வெற்றிலையை பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி உள்ளனர். ஆனால் இந்த காலத்தில், வெற்றிலை ஒரு அழகு செடியாக பல வீடுகளில் இருந்தாலும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி மக்களுக்கு தெரிவது இல்லை. மிஞ்சி மிஞ்சி போனால்... விரத நாட்களில் வெற்றிலையை வைத்து சாமிக்கு பூஜை செய்து விட்டு பின்னர் அந்த வெற்றிலையை தூக்கி போட்டு விடுகிறார்கள்.
இப்படி காய்ந்த நிலையில் தூக்கி போடும் வெற்றிலையில் பல மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. இதுபற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
Pain Relif
வலி நிவாரணி:
வெற்றிலை ஒரு வலி நிவாரணி என்பது, பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆயுர்வேதத்தில் வெற்றிலையை கொண்டு தைலங்கள் கூட செய்யப்படுகின்றன. அதே போல் வீட்டில் யாருக்காவது சிறிய அளவில் காயங்கள், சிராய்ப்புகள், வீக்கம் ஏற்பட்டால் வெற்றிலையின் சாறு அல்லது கொழுந்து வெற்றிலையை மை போய் அறைந்து வலி உள்ள இடங்களில் தடவினால் வலி நிவாரணியாக இது செயல்படும்.
Remedy for Stool Problem:
மலசிக்கல் பிரச்சனைக்கு தீர்வு:
வெற்றிலையை இரவு தண்ணீரில் பொடியாக நடுங்கி போட்டுவிட்டு, அந்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, மலச்சிக்கலுக்கு இது தீர்வாக அமையும். வெற்றிலையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது ஒருவரின் உடலில் உள்ள ரேடிக்கல்சை அழிக்கும். PH அளவை மீட்டெடுக்கும் என கூறப்படுகிறது.
Digest Problem
செரிமானத்தை மேம்படுத்துகிறது:
திருமணம், காதுகுத்து போன்ற விசேஷங்கலிலும்... விருந்து நிகழ்ச்சிகளிலும் சாப்பாட்டுக்கு பின்னர் வெற்றிலை பாக்கு கொடுப்பது கிராமப்புறங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ள ஒரு பழக்கம் ஆகும். இதில் கலாச்சாரம் என்பதை தாண்டி அறிவியலும் இருக்கிறது. அதிக ஆவி சாப்பிட்டால் ஒருவருக்கு ஏற்படும் வாய்வு தொல்லை, உள்ளிட்ட பிரச்சனைகளை வெற்றிலை நீக்குவதோடு செரிமானத்திற்கும் உதவுகிறது.
Breathing
சுவாச பிரச்சினை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அவர்களின் நெஞ்சு சளி பிரச்சனையை போக்க, வெற்றிலை பத்து மற்றும் கஷாயம் சிறந்த தீர்வாக இருக்கும். அதே போல் வெற்றிலையை சூப் போலவும், ரசமாகவும் உங்களுக்கு பிடித்தமான விதத்தில் இதை எடுத்து கொள்ளலாம். வெற்றிலையில், கஷாயம், சூப் மற்றும் ரசம் வைக்கும் போது சிறிதளவு சீரகம் மற்றும் மிளவு சேர்த்து கொள்ளவும். இது விரைவாக சளிபிரச்னையை தீர்க்க உதவும்.
Mouth Oder
வாய் துர்நாற்றத்தை குறைக்கும்:
வாயில் பாக்டீரியா சேர்வதால் துர்நாற்றம் ஏற்படுத்தும். சில சமயங்களில் பல்லில் ஏற்படும் பிரச்சனை, ஈறுகளில் ஏற்படும் பிரச்சனை அல்லது வயிறு சம்மந்தமான பிரச்சனைகளால் கூட வாய் துர்நாற்றம் ஏற்படும், இதனை சேரி செய்ய, வெற்றிலையை வாயில் நன்கு மென்று அதன் சாறை மற்றும் விழுங்குங்கள் இது உங்களின் வாய் பிரச்சனைக்கு தீர்வை ஏற்படுத்தும்.
எடை வேகமா குறையனுமா? அப்போ காலையில சாப்பிட கூடாத '5' உணவுகள்!!
Joint pains
மூட்டு வலியைப் போக்குகிறது:
வலி பிரச்சனைகளுக்கு வெற்றிலை சிறந்த மருந்து என்பது உங்களுக்கு தெரியுமா, நாலாட்ட மூட்டுவலி, ஆஸ்டியோபோரோசிஸ், முடக்கு வாதம், மற்றும் எலும்புகளை வலுப்படுத்த வெற்றிலை பத்து, போடுவதுடன், காலையில் 2 வெற்றிலையை நன்கு மென்று சாப்பிடுவதால், வலி தீர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
Control Suger:
நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது:
வெற்றிலை அல்லது அதன் பொடியை தண்ணீரில் கலந்து குடிப்பதன் மூலம் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
மாரடைப்பை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்பு; அதை குறைக்க உதவும் 5 சிம்பிள் டிப்ஸ்!
Cancer Cells Destroyed
புற்றுநோயைத் தடுக்கிறது:
வெற்றிலையை பாக்கு மற்றும் புகையிலையுடன் எடுத்து கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டிருந்தாலும், வெறும் வெற்றிலை மற்றும் சாப்பிடுவது புற்றுநோய்க்கு எதிராக போராடும் என கூறப்படுகிறது. காரணம் இதில் பினாலிக் கலவைகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற புற்றுநோய்க்கு எதிராக போராட கூடியவை.
Betel soup or Tea
மனச்சோர்வை குறைக்கும்:
ஓய்வில்லாமல் வேலை செய்வது, மற்றும் பிற காரணங்களால் மனசோர்வை நீங்கள் உணர்தால்... ஒரே ஒரு வெற்றிலையை முகந்து கொண்டே சாப்பிட்டு பாருங்கள், உங்கள் மனம் லேசாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதை உணர்வீர்கள். வெற்றிலையை தண்ணீரில் காய்ச்சி ஒரு தேநீர் போலவும் அருந்தலாம்.