MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • எடை வேகமா குறையனுமா? அப்போ காலையில சாப்பிட கூடாத '5' உணவுகள்!!

எடை வேகமா குறையனுமா? அப்போ காலையில சாப்பிட கூடாத '5' உணவுகள்!!

Worst Breakfast Foods For Weight Loss : நீங்கள் எடையை வேகமாக குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் காலையில் சில உணவுகளை சாப்பிடக்கூடாது அவை என்னவென்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

3 Min read
Author : Kalai Selvi
Published : Jan 23 2025, 08:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Worst Breakfast Foods For Weight Loss In Tamil

Worst Breakfast Foods For Weight Loss In Tamil

தற்போது உடல் பருமனால் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். எப்படியாவது எடையை குறைத்து உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் பெரும்பாலானோர் விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் பல வகையான டயாட்களை முயற்சியும் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அப்படி இருந்தும் சின்ன சின்ன தவறுகளை செய்வதால் அவர்களால் எடையை குறைக்க முடியாமல் போகிறது. எனவே அதை என்ன என்று அறிந்து கொண்டு தவிர்த்தால் உடல் எடையை குறைத்து விடலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Worst Breakfast Foods For Weight Loss In Tamil

Worst Breakfast Foods For Weight Loss In Tamil

மேலும் உடல் எடை அதிகரிப்பால் சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பல வகையான ஆபதன நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்கின்ற நிபுணர்கள். இதனால் தான் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். மேலும் உடல் பருமனால் வரும் பக்க விளைவுகள் எல்லா வயதினரிடமும் உள்ளது. உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியுடன், உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம். எடை அதிகரிப்புக்கு கலோரிகள் தான் காரணம். முக்கியமாக எடை இழப்புக்கு  காலை உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும்.

இதையும் படிங்க:  ராகியை 'இப்படி' சாப்பிட்டால் விறுவிறுனு எடையை குறைக்கலாம்.. செம்ம ரெசிபி

35
Worst Breakfast Foods For Weight Loss In Tamil

Worst Breakfast Foods For Weight Loss In Tamil

காலை உணவு ஏன் அவசியம்?

உடல் எடையை குறைப்பதற்கு காலை உணவு மிகவும் அவசியம். நீங்கள் காலை உணவை ஆரோக்கியமாக எடுத்துக் கொண்டால் உடல் பருமனை குறைத்து விடலாம். எனவே உங்களது காலை உணவானது ஆரோக்கியமாகவும், சத்தாகவும் இருக்க வேண்டும். ஏனெனில் அவை வளர்ச்சியை மாற்றத்தை பாதிக்கும் மற்றும் உங்களது உடலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நீங்கள் எடை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், காலையில் சில உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க: உடல் எடையை குறைக்க.. இந்த '10' விஷயங்களை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க!

45
Worst Breakfast Foods For Weight Loss In Tamil

Worst Breakfast Foods For Weight Loss In Tamil

எண்ணெய் உணவுகள்:

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் உங்களது காலை உணவில் பூரி, வடை, சமோசா, பஜ்ஜி போன்ற எண்ணெய் உணவுகள் இருக்கக் கூடாது. ஏனெனில் அவற்றில் கலோரிகள் அதிகம் உள்ளதால், அவை எடையை குறைப்பதற்கு பதிலாக இன்னும் அதிகரிக்க தான் செய்யும்.

வெள்ளை பிரட்:

பலரும் வெள்ளை பிரட்டை தான் காலை உணவாக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ஏனெனில் அவற்றில் அதிகளவு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் தான் உள்ளன. இது கொழுப்பை உடலில் சேமித்து வைத்து, உடல் எடையை அதிகரிக்க வைக்கும். வேண்டுமானால் வெள்ளை பிரட்டுக்கு பதிலாக பிரவுன்  பிரட் சாப்பிடுங்கள். இதில் உடலுக்கு தேவையான நார் சத்துக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் கலோரிகள் ரொம்பவே குறைவு. இதனால் எடையை அதிகரிப்பதை தடுக்கிறது. மேலும் இதை சாப்பிடுவதன் மூலம் அதிக பசி எடுக்காது. வயிறு நிரம்பி இருக்கும். இதன் காரணமாக எடையை செல்வமாக குறைத்து விடலாம்.

55
Worst Breakfast Foods For Weight Loss In Tamil

Worst Breakfast Foods For Weight Loss In Tamil

வெள்ளை அரிசி:

அரிசி தானியே வகை என்றாலும் அதில் உள்ள நார்ச்சத்துக்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு, வெறும் கார்போஹைட்ரேட்டுகள் மட்டும் தான் அதில் அதிகமாக இருக்கும். மேலும் இது நம்முடைய உடலுக்கு தேவையான சத்துக்களை நமக்கு வழங்குவதில்லை. வேண்டுமானால் வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் அரிசி சாப்பிடுங்கள். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அதிகமாகவே உள்ளன. அதை உடல் எடையை குறிக்க உதவும் மற்றும் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

பேக்கிங் ஜூஸ்;

நீங்கள் காலையிலேயே பேக்கிங் செய்யப்பட்ட ஜூஸ் குடித்தால் அது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்குதல் விளைவிக்கும். முக்கியமாக இந்த ஜூஸ் உங்களது எடையை அதிகரிக்க தான் செய்யும். ஏனெனில் இதில் அதிகளவு சர்க்கரை மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் உள்ளது. உடல் பருமனால் பல நோய்கள் தான் அதிகமாக வரும். எனவே இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்பட்ட ஜூஸ் குடியுங்கள். அது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.

சாக்லேட்:

சிலருக்கு காலை எழுந்த உடனே சாக்லேட் சாப்பிடுவதை விரும்புவார்கள். ஆனால் அப்படி சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும். ஏனெனில் சாக்லேட்டில் அதிகளவு சர்க்கரை உள்ளது. இது உங்களது உடலை பருமனாக்கும். எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க நினைத்தால் இதை காலையில் ஒருபோதும் சாப்பிட வேண்டாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
உடல் எடை குறைப்பு குறிப்புகள்
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(105.1 ov)389/3
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுத்து வலி இல்லாம நிம்மதியாக தூங்க வேண்டுமா? சரியான தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
Recommended image2
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved