- Home
- உடல்நலம்
- மழைக்காலத்தில் இந்த உணவை மட்டும் எவ்வளவு ஆசையா இருந்தாலும் சாப்பிடாதீங்க!! மோசமான பிரச்சனை வரும்
மழைக்காலத்தில் இந்த உணவை மட்டும் எவ்வளவு ஆசையா இருந்தாலும் சாப்பிடாதீங்க!! மோசமான பிரச்சனை வரும்
மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

What Not To Eat In Rainy Season
தற்போது ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த சீசனில் நீர் மற்றும் காற்றில் பரவும் நோய்கள் அதிகரிக்கும். நிறைய கொசுக்கள் மற்றும் நோய் கிருமிகள் உற்பத்தியாகும் இந்த பருவத்தில் நாம் சாப்பிடும் உணவில் அதிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, மழைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பச்சை இலை காய்கறிகள் :
மழைக்காலத்தில் கீரைகள், முட்டைகோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் மண்ணில் விளையக்கூடியது என்பதால் இதில் நிறைய பூச்சிகள் வரும். நிறைய பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவார்கள். இவற்றை சாப்பிட்டால் தொற்று நோய், உணவு ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம் உள்ளன. வேண்டுமானால் சூடான நீரில் உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து விட்டு பிறகு நன்கு கழுவி சமைத்து சாப்பிடலாம். இல்லையெனில், மழை வாழ முடியும் வரை இவற்றை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.
எண்ணெய் பலகாரங்கள் :
மழைக்காலத்தில் சாலை ஓர கடைகளில் விற்பனையாகும் வடை, சமோசா, பஜ்ஜி, பக்கோடா போன்ற எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றின் மீது மாசு, ஈக்கள், கொசுக்கள், கண்ணுக்கு தெரியாத கிருமிகள் தங்கும், அதுமட்டுமில்லாமல் அவை சுகாதாரமற்ற தண்ணீரால் தயாரிக்கப்படலாம். எனவே அவற்றை சாப்பிட்டால் வயிற்றில் நோய் கிருமிகள் உருவாகும்.
கடல் உணவுகள் :
மழைக்காலத்தில் தான் மீன், நண்டு, இறால் போன்றவை இனப்பெருக்கம் செய்யும் காலம். எனவே இந்த சமயத்தில் அவற்றை சாப்பிட்டால் நோய்க்கிருமிகள் மற்றும் நச்சுத்தன்மை அதிகரிக்கும். இதனால் ஃபுட் பாய்சன் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளன. எனவே மலையாளம் முடியும் வரை கடல் உணவுகள் சாப்பிடுவது தவிர்ப்பது தான் சிறந்தது.
கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ் :
சர்க்கரை கலந்த சோடா உள்ளிட்ட கார்பனேட்டட் ட்ரிங்க்ஸ் மழைக்காலத்தில் குடிக்க கூடாது. ஏனெனில் இவற்றில் இருக்கும் மினரல்கள் உடலில் ஜீரண சக்தியை குறைத்து விடும். ஏற்கனவே, மழைக்காலத்தில் ஜீரண மண்டலத்தின் செயல் திறனும் குறைவாகவே இருப்பதால், வயிற்று வலி, அஜீரணம் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
தயிர் / மோர்
தயிர், மோர் போன்ற பிற பால் பொருட்கள் மழை காலத்தில் உட்கொண்டால் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் அஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் எனவே மழைக்காலத்தில் இவற்றை தவிர்த்து விடுங்கள்.
வெளியில் விற்பனையாகும் ஃப்ரூட் சாலட் :
கடைகளில் விற்பனைக்காக பழங்களை முன்கூட்டியே வெட்டி வைத்திருப்பார்கள் இதனால் அவற்றில் நீர் சத்துக்கள் வெளியேறு விடும் மற்றும் ஈக்கள் மொய்க்க தொடங்கும். அவற்றை சாப்பிட்டால் உடலுக்கு தான் கேடு. எனவே மழைக்காலம் முடியும் வரை கடைகளில் விற்பனையாகும் ஃப்ரூட் சாலட் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

