- Home
- உடல்நலம்
- Dizziness Causes : நின்றால், எழுந்தால் உடனே தலை சுற்றுதா? இந்த விஷயத்தை சாதாரணமா நினைக்காதீங்க!! உஷார்ர்ர்
Dizziness Causes : நின்றால், எழுந்தால் உடனே தலை சுற்றுதா? இந்த விஷயத்தை சாதாரணமா நினைக்காதீங்க!! உஷார்ர்ர்
நின்றாலோ எழுந்தாலோ தலை சுற்றுவதற்கான காரணம் மற்றும் அதை தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

Dizziness Causes
சிலர் படுக்கையிலிருந்து தூங்கி எழும்போது அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுந்து நிற்கும் போது தலை சுற்றுவதாக கூறுகிறார்கள். 65 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு இப்படி வர வாய்ப்புள்ளது. மேலும் சில இளைஞர்களுக்கும் இது வரும். ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகள் தான் இதற்கு முக்கிய காரணமாகும். எனவே இதை தவிர்க்க சில வழிமுறைகள் குறித்து இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
மெல்லமாக எழ வேண்டும் :
படுக்கையிலோ அல்லது நாற்காலியில் இருந்து எழும்போதோ டக்குனு எழுந்தால் கால்களிலிருந்து இதயத்திற்கு பாயும் இரத்தத்தின் வேகம் அதிகரிக்கும். இதனால் தலை சுற்றல், மயக்கம் ஏற்படும் .எனவே எப்போது எழுந்தாலும் பொறுமையாகவும் மெதுவாகவும் எழுந்திருக்க வேண்டும்.
சில மருந்துகளின் விளைவுகள் :
நீண்டகாலமாக சில மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று மருந்தின் அளவை குறைக்கவும் அல்லது தேவையில்லாத பட்சத்தில் மருந்தை முற்றிலும் நிறுத்தவும்.
உணவைப் பிரித்து சாப்பிடுங்கள் :
ஒரே நேரத்தில் வயிறு முட்ட சாப்பிடுவது ஒரு விதமான மயக்கத்தை ஏற்படுத்தும். எனவே உணவை பிரித்து அதாவது சிறிய இடைவெளி விட்டு சாப்பிட வேண்டும். இதனால் மயக்கமும், மந்தநிலையும் ஏற்படுவது தடுக்கப்படும்.
அதிக தண்ணீர் குடிக்கவும் :
உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லை என்றால் இரத்த அழுத்தத்தில் மாறுபாடுகள் ஏற்படும். இதனால் படுக்கையில் இருந்து எழுந்தாலோ, உட்கார்ந்த பின் எழுந்து நிற்கும் போது தலை சுற்றல் வரும். இதை தவிர்க்க ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
உடற்பயிற்சி செய்தல் :
தலை சுற்றலை தவிர்க்க உடற்பயிற்சி செய்தல் சிறந்த தேர்வாகும். ஏனெனில் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஒட்டுமொத்த உடலிலும் ரத்த ஓட்டம் சீராக பாயும். ஆனால் தூங்கி எழுந்தவுடனே உடற்பயிற்சி செய்ய வேண்டாம். சிறிது நேரம் வாம் அப் செய்த பிறகு உடற்பயிற்சி செய்ய தொடங்கவும்.
இவற்றை கொண்டு செல்ல மறக்காதீங்க!
கடுமையான வெயிலில் ஒருபோதும் வெளியே செல்ல வேண்டாம். அதுபோல வெயிலில் செல்லும்போதெல்லாம் குடை பிடித்து செல்லவும். மேலும் கையில் தண்ணீர் பாட்டில் எப்போதுமே வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நீண்ட நேரம் நின்று வேலை செய்வதை தவிர்க்கவும்.
