நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெய்: தினசரி உணவில் எப்படி சேர்த்துக்கொள்வது?
நெய் சரியான முறையில் எப்படி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
குளிர்காலம் நெருங்கி வரும் நிலையில், சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே நம் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதுவும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை செய்யலாம். அந்த வகையில் குளிர்காலத்தில் மிகவும் அவசியமான பொருட்களில் ஒன்று நெய். நெய்யில் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது.
சரும ஆரோக்கியத்திற்கும், உடல் வலிமைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. அதே நேரத்தில் நெய்யை உட்கொள்வது குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. நெய்யின் நன்மைகள் குறித்து பலருக்கு தெரிந்திருந்தாலும், அதை தங்கள் உணவில் சேர்க்கும் முறைகளில் பெரும்பாலான மக்கள் தவறு செய்கின்றனர். எனவே நெய் சரியான முறையில் எப்படி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சப்பாத்தியில் சேர்க்கலாம்
உங்கள் உணவில் நெய்யைச் சேர்ப்பதற்கான மிகவும் பொதுவான மற்றும் பயனுள்ள வழி, உங்கள் சப்பாத்தி அல்லது ரொட்டி சுடும் போது அதில் நெய் சேர்ப்பது. எனினும் அளவுக்கு அதிகமாக சேர்க்காமல், போதுமான அளவு சேர்த்துக்கொள்வது நல்லது.
காய்கறிகளை சமைக்க : காய்கறிகளை சமைக்கும் போது அதற்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயன்படுத்துவது நல்லது. நெய்யின் அதிக வெப்பப் புள்ளி காய்கறிகளில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு ஏற்றதாக அமைகிறது.
ஆரோக்கியமான சிற்றுண்டிக்காக
வீட்டில் பாப்கார்ன் தயாரிக்க, சுவை மற்றும் ஊட்டச்சத்தை சேர்க்க நெய்யைப் பயன்படுத்தவும். ஓட்ஸ் மற்றும் பேன் கேக் தயாரிக்கும் போது நெய்யையும் பயன்படுத்தலாம்.
ghee
மஞ்சளுடன் நெய்
நெய்யை உணவில் சேர்ப்பதற்கான மற்றொரு பயனுள்ள வழி மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்து அரைத்து,. அவற்றை ஒரு கப் பாலில் சேர்க்கவும்
சூப் அல்லது பருப்புடன் நெய்
மற்றொரு பயனுள்ள வழி, ஒரு ஸ்பூன் நெய்யை எடுத்து, அதை உங்கள் சூப், பருப்பு, மற்றும் பிற தானியங்களில் சிறிது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் சேர்ப்பது. குளிர்காலத்தில் படுக்கையில் இருந்து எழுவது கடினம், ஒரு ஸ்பூன் நெய் உங்களை சூடாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதை எளிதாக்கும்.