- Home
- உடல்நலம்
- Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து
Spinach for Liver Health : இந்த கீரைய சாதாரணமா நினைக்காதீங்க! கல்லீரல் நோயை தடுக்கும் அருமருந்து
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன கீரைகள் சாப்பிட வேண்டுமென்று இந்த பதிவில் காணலாம்.

Spinach for Liver Health
கல்லீரல் என்பது நம்முடைய உடலில் மிக முக்கியமான உறுப்பு. இதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவது மிகவும் அவசியம். அந்த வகையில் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு கீரை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் நிறைய பேருக்கு கீரை என்றாலே பிடிக்காது. கீரைகள் தான் எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் கொட்டி கிடைக்கின்றன. எனவே, எந்த கீரை கல்லீரலுக்கு நல்லது என்று இங்கு பார்க்கலாம்.
காசினிக்கீரை :
காபி பொடியில் கலக்கப்படும் சிக்கரி தூள் இந்த கீரையின் வேரிலிருந்து தான் எடுக்கப்படுகிறது. பொதுவாகவே நாம் இந்த கீரையை பெரிதாக கண்டுக்கொள்ள மாட்டோம். ஆனால் இது ஒரு மருத்துவ கீரையாகும். அதாவது இரத்த சுத்திகரித்தல், செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் சரும நோய்களை குணப்படுத்தல் போன்ற மருத்துவ குணங்களுக்காக இந்த கீரை அறியப்படுகின்றது. குறிப்பாக கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பெஸ்ட் கீரை இது.
கிழாநெல்லி :
கல்லீரல் நோய்க்கு கீழாநெல்லி கீரை தான் சிறந்தது என்று கிராமங்களில் சொல்லப்படுகின்றது. இதற்கு இந்தக் கீரையில் இருந்து வெறும் சாற்றை மட்டும் எடுத்து மோரில் கலந்து குடிக்கலாம் அல்லது சிறுப்பருப்பு சேர்த்து சமைத்து உணவாக கூட சாப்பிடலாம். எனவே, கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க இந்தக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
கரிசலாங்கண்ணி :
மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உள்ளன. இவை இரண்டுமே சாப்பிடலாம். கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இந்த கீரை சிறந்தது என்று சொல்லப்படுகிறது. முடி வளர்ச்சி அதிகரிக்கவும் இந்தக் கீரை உதவுகிறது.
குறிப்பு : கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மேலே செல்லப்பட்டுள்ள கீரைகளை வாரத்திற்கு 2-3 முறையாவது சாப்பிடுங்கள். கல்லீரலுக்கு மட்டுமல்ல உங்களது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

