எவ்வளவு ஒல்லியா இருந்தாலும் '1' மாதத்தில் கொழுகொழுனு மாற சூப்பர் உணவுகள்!!
Weight Gain Foods : முக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய சில உணவுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
Weight Gain Foods In Tamil
தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைக்கிறேன் என்று ஆண்கள் உடலை அதிகப்படியாக மெலிய வைக்கிறார்கள். அதுபோலவே பெண்களும் ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்று உணவை சரியாக எடுத்துக் கொள்ளாமல் உடலை ஒல்லியாக்குகிறார்கள். கூடவே பலவீனமடைகிறார்கள். ஆனால் சிலரோ என்ன செய்தாலும் உடல் அதிகரிக்கவில்லை, பார்ப்பதற்கு ரொம்பவே ஒல்லியாக இருக்கிறோனே என்று கவலைப்படுகிறார்கள். இவர்களுக்காக சில சத்தான உணவுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அது அவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிக்க உதவும். அது என்ன என்று இப்போது பார்க்கலாம்.
Weight Gain Foods In Tamil
செவ்வாழைப்பழம்:
வாழைப்பழம் என்றாலே ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் வாழைப்பழத்தில் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் குறிப்பாக, செவ்வாழை மற்றும் நேந்திர பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஆய்வு சொல்கிறது. தினமும் இரவு தூங்கும் முன் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிச்சமாக அதிகரிக்கும். ஒருவேளை உங்களுக்கு செவ்வாழை சாப்பிட பிடிக்கவில்லை என்றால் அதை தினமும் காலை பால் சேர்த்து சர்ர்கரை கலந்து மில்க் ஷேக்காகவும் குடிக்கலாம். அதுபோல உடல் எடை மெலிந்து இருக்கும் குழந்தைகளுக்கு நேந்திரம் பழத்தை கொடுக்கலாம். இது அவர்களது எடையை அதிகரிப்பது மட்டுமில்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும்.
Weight Gain Foods In Tamil
பால் பொருட்கள்:
தயிர், பால், சீஸ் வெண்ணை போன்றவை உடல் எடை அதிகரிக்க உதவும். ஏனெனில் பால் பொருட்களில் அதிக அளவு புரதம் உள்ளது. அது உடலை அதிகரிக்க உதவும். நீங்கள் சைவ உணவு சாப்பிடும் நபர் என்றால் உடல் எடை அதிகரிக்க தினமும் வெண்ணெய் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் பிரட்டில் வெண்ணை தடவி சாப்பிடலாம். பிற உணவுகளில் கூட நெய்க்கு பதிலாக வெண்ணை சேர்த்துக் கொள்ளுங்கள்.
Weight Gain Foods In Tamil
அசைவ பிரியர்கள்:
அசைவ பிரியர்கள் உடல் எடை அதிகரிக்க விரும்பினால், உங்களது உணவில் வறுத்த மீன், ஆட்டிறைச்சி, கோழி, இறால், சிவப்பு இறைச்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக தினமும் காலை முட்டை சாப்பிடுங்கள். அதுவும் குறிப்பாக முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளதால் தினமும் இரண்டு முட்டை தவறாமல் சாப்பிடுங்கள். முட்டை சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும் என்று நினைத்தால் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து ஆம்லெட் ஆக போட்டு சாப்பிடுங்கள். கோழியில் நாட்டுக்கோழி தான் பெஸ்ட். இது தவிர, உருளைக்கிழங்கு, பழங்கள், காய்கறிகள், நட்ஸ்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் ஆரோக்கியமான முறையில் எடை அதிகரிக்க செய்யும்.
Weight Gain Foods In Tamil
எள்:
இளைத்தவனுக்கு எள்; கொளுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழி படி, உடல் மெலிந்து இருப்பவர்களுக்கு எள் ரொம்பவே நல்லது. எள்ளில் பலகாரங்கள் செய்து அவர்களுக்கு கொடுத்தால் உடல் எடை கூடுவது மட்டுமின்றி ஆரோக்கியமாகவும் இருக்கும். ஒல்லியானவர்கள் தினமும் தங்களது உணவில் ஒருவேளையாவது எள் சேர்த்து வந்தால் எடை கூடும். அதுபோல வாரத்திற்கு ஒரு முறை எள்ளில் செய்த பலகாரங்களையும் சாப்பிடுங்கள்.