ஆடை இல்லாமல் குளித்தால் நல்லதா? அறிவியல் சொல்வது இதுதான்!
Showering Without Clothes : மத கண்ணோட்டத்தில் ஆடை இல்லாமல் குளிப்பது நல்லதல்ல. ஆனால் அறிவியல் பார்வை என்ன சொல்லுகிறது என்று இங்கு பார்க்கலாம்.

ஆடை இல்லாமல் குளித்தால் நல்லதா? அறிவியல் சொல்வது இதுதான்!
நம்முடைய அன்றாட வாழ்க்கையின் பழக்கவழக்கங்களில் மிக முக்கியமானது எதுவென்றால், தினமும் குளிப்பது. குளிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை இருக்கும். ஏனென்றால் இது தினமும் குளிப்பது மூலம் நம் உடலில் இருக்கும் . காலநிலைய பொருட்படுத்தாமல் தினமும் குளிப்பது மிகவும் அவசியம். அதுபோல மக்கள் தங்களது வசதிக்கேற்ப தினமும் குளிப்பதை விரும்புகிறார்கள். அதாவது சிலர் குளிர்ந்த நீரில் குளிப்பதை விரும்புகிறார்கள். இன்னும் சிலரோ வெந்நீரில் தான் குளிப்பார்கள்.
ஆடை இல்லாமல் குளிக்கலாமா?
அந்த வகையில் குளிக்கும் போது மக்கள் செய்யும் மற்றொரு விஷயம் என்னவென்றால், ஆடை அணிந்து குளிப்பது அல்லது ஆடை இல்லாமல் நிர்வாணமாக குளிப்பது. ஆம், பொதுவாக பலர் குளிக்கும் போது ஆடைகள் அணிவதை விரும்புவதில்லை. சிலரோ உள்ளாடைகள் அல்லது துண்டு கட்டி கொண்டு குளிப்பார்கள். ஆனால், மத கண்ணோட்டத்தின்படி ஆடை இல்லாமல் நிர்வாணமாக குளிப்பது நல்லதல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதை பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. எனவே அதுகுறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆடை இல்லாமல் குளிப்பது நல்லதா?
பொதுவாக குளிப்பதற்கு என்று அறிவியலில் எந்த ஒரு குறிப்பிட்ட விதியும் இல்லை. மக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப குளிக்கலாம். அதாவது ஆடை அணிந்து அல்லது ஆடையில்லாமல் நிர்வாணமாக குளிக்கலாம். ஆனால் ஒருவர் ஆடையில்லாமல் நிர்வாணமாக குளித்தால், அவரால் முழு உடலையும் நன்றாக சுத்தம் செய்து குளிக்க முடியும். அதுவே, ஆடை அணிந்து குளித்தால் அவரால் நன்றாக சுத்தம் செய்து குளிக்க முடியாது. குளிக்கும்போது தொப்புள், இடுப்பு பகுதி மற்றும் அக்குள் நன்றாக சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஏனெனில் இந்த பகுதிகளில் தான் அதிகமாக வியர்வை ஏற்படும். இதனால் பாக்டீரியாக்கள் அங்கு தங்கும். எனவே ஆடை இல்லாமல் குளிப்பது தான் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் ஆடை அணிந்து குளித்தால் எந்த பயனும் இல்லை. ஆடையில்லாமல் நிர்வாணமாக குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று சொன்னால் தவறிழை ஆனால் உங்களது வசதிக்கேற்ப நீங்கள் எப்படி வேண்டுமானாலும் குளிக்கலாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
குளியலறை தூய்மை:
அதுபோல நீங்கள் குளிக்கும் பாத்ரூம் தூய்மையாக இருப்பது மிகவும் அவசியம். ஒருவேளை தூய்மையாக இல்லாவிட்டால், அதனால் உங்களது ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
ஆடையில்லாமல் தூங்கலாமா?
ஆடையில்லாமல் தூங்குவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. சில ஆய்வுகள் ஆடையின்றி தூங்குவது உடலை இயற்கையாக சுவாசிக்க அனுமதிக்கிறது மற்றும் சருமத்தில் அதிக அழுத்தம் கொடுக்காது என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் இப்படி தூங்குவதால் உடல் வெப்பநிலையை சிறப்பாக சீராக்க உதவுகின்றது. இது தவிர, ஆடையின்றி தூங்கினால் ரத்த ஓட்டம் மற்றும் ஹார்மோன் சமநிலை மேம்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதையும் படிங்க: குளிப்பதற்கு முன் இந்த '1' விஷயம் மட்டும் பண்ணுங்க; நோய்கள் விலகி ஓடும்!