வாழைப்பழத்தில் ஒளிந்துள்ள நன்மைகள்!! தினமும் '1' சாப்பிட்டால் கூட போதும்
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு காணலாம்.

Benefits Of Eating Bananas Daily : பழங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று மருத்துவர்கள் சொல்லி இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோலவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியத்திற்கு எத்தனை நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? வாழைப்பத்தில் நார்ச்சத்து, புரதச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம் மற்றும் பல பிரச்சினைகளில் இருந்தும் நம்மை பாதுகாக்க உதவுகின்றன. சரி, இப்போது தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் நம் ஆரோக்கியத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை சிறப்பாக்கும். இது ரத்த நாளங்களில் சுவர்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றது.
செரிமானத்தை மேம்படுத்தும்:
வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால் இது செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதில் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் புரோபயாடிக்குகளும் நிறைந்துள்ளன. இது தவிர, வாழைப்பழம் உப்புசம் ஏற்படுவதை குறைக்கும் மற்றும் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்க வைக்கும்.
எடை இழப்புக்கு உதவும்:
வாழைப்பழத்தில் கலோரிகள் குறைந்த அளவில் உள்ளதால் எடை இழப்புக்கு இது மிகவும் நன்மை பயக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் இதில் ஏராளமான நார்ச்சத்து உள்ளதால் இது செரிமானத்தை மெதுவாக்கி, உங்களது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியிருக்க வைக்கும்.
ரத்த சோகையை தடுக்கும்:
வாழைப்பழத்தில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் ரத்த சோகைக்கு சிகிச்சை அளிக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இதில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும்.
தூக்கம் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் :
வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி செரோடோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றது. செரோடோனின் என்பது பதட்டம், மனநிலை, தூக்கம் முறைகள் மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் ஒரு ஹார்மோன் ஆகும்.
சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்:
வாழைப்பழத்தில் பொட்டாசியம் இருப்பதால் இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது சிறுநீரக செயல்பாட்டை பராமரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் ஏற்படும் அபாயம் குறையும். குறிப்பாக, சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம் மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: கருமை இல்லாத பளபள முகத்திற்கு வாழைப்பழத் தோலை எப்படி யூஸ் பண்ணனும்?
ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும்:
வாழைப்பழம் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளன. இது ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த உதவும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழத்தில் இருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்தி, இன்சுலின் அளவு அதிகரிப்பதை கட்டுப்படுத்த உதவும்.
ஆற்றல் வழங்கும்:
தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரைகளும் உள்ளன. அவை ஆற்றலை வழங்குகின்றன. எனவே உடற்பயிற்சி செய்வதற்கு முன் அல்லது காலை உணவில் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆற்றல் கிடைக்கும் .மேலும் இது உங்களது மனநிலையையும் சிறப்பாக வைக்ககும்.
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:
வாழைப்பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், அது சருமத்தின் நெகிழ்ச்சி தன்மைக்கு இன்றியமையாத கொலாஜன் உற்பத்திக்கு உதவும் ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றியாகும். கொலாஜன் சருமத்தை இளமையாகவும், உறுதியாகவும் வைக்க உதவுகிறது. மேலும் வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஏ சருமத்தை நீரேற்றமாக வைக்க உதவுகிறது மற்றும் கறைகள் சுருக்கங்கள் ஏற்படுவதை குறைக்கும். வாழைப்பழத் தோலை முகத்தில் தடவினால் பருக்கள் வருவதை தடுத்து, சருமத்தை தெளிவாக்கும்.
இதையும் படிங்க: காலையில் வெறும் வயிற்றில் செவ்வாழை சாப்பிட்டால்... நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்க