MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • அழகு குறிப்புகள்
  • கருமை இல்லாத பளபள முகத்திற்கு வாழைப்பழத் தோலை எப்படி யூஸ் பண்ணனும்? 

கருமை இல்லாத பளபள முகத்திற்கு வாழைப்பழத் தோலை எப்படி யூஸ் பண்ணனும்? 

Benefits of Banana Peel on Face : வாழைப்பழ தோலை முகத்திற்கு எப்படி பயன்படுத்தினால் பளபளப்பான சருமத்தை பெறலாம் என்பதை பற்றி இங்கு காணலாம்.  

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 22 2025, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கருமை இல்லாத பளபள முகத்திற்கு வாழைப்பழத் தோலை எப்படி யூஸ் பண்ணனும்?

கருமை இல்லாத பளபள முகத்திற்கு வாழைப்பழத் தோலை எப்படி யூஸ் பண்ணனும்?

பொதுவாக ஒவ்வொரு பெண்களும் தங்களது முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதற்காக அவர்கள் பலவிதமான பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். அதுமட்டுமல்லாமல் சில பெண்கள் தங்களது முகத்திற்கு பளபளப்பை கொண்டு வர விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதனால் எந்த பயனும் அவர்கள் பெறுவதில்லை. ஆனால் இப்படி எந்தவித பொருட்களும் பயன்படுத்தாமல், பணத்தையும் வீணடிக்காமல் இயற்கை முறையில் முகத்திற்கு பளபளப்பை கொண்டு வரலாம் தெரியுமா? ஆம், உங்களது முகத்தில் பளபளப்பை கொண்டு வர நீங்கள் விரும்பினால் வாழைப்பழ தோலை பயன்படுத்தலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கறைகளைப் போக்கும்:

கறைகளைப் போக்கும்:

வாழைப்பழத் தோல் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதை கொண்டு உங்களது முகத்தை அழகாக மாற்றலாம். இதற்கு வாழைப்பழத் தோலில் உட்பகுதியை உங்களது முகத்தில் தடவி பிறகு லேசாக மசாஜ் செய்ய வேண்டும். பின் குறைந்தது ஐந்து நிமிடங்கள் கழித்து அப்படியே வைத்து விட்டு, பிறகு குளிர்ந்த நீரில் உங்களது முகத்தை சுத்தம் செய்யவும்.  தினமும் இரவு தூங்கு முன் இந்த முறையை நீங்கள் செய்து வந்தால் முகத்தில் படிந்திருக்கும் இறந்த சருமம் அகற்றிவிடும்.

35
பருக்களை போக்கும்:

பருக்களை போக்கும்:

உங்களது முகத்தில் பருக்கள் அல்லது கரும்புள்ளிகள் அதிகமாக இருந்தால் அவற்றை போக்குவதற்கு வாழைப்பழ தோல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு ஒரு வாழைப்பழத் தோலை நன்றாக அரைத்து அதனுடன் தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்க்கவும். பிறகு அந்த பேஸ்ட் உங்களது முகத்தில் தடவவும். இது உங்களது சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை நீக்குவது மட்டுமல்லாமல், முகத்தை பளபளப்பாகவும் மாற்றும்.

இதையும் படிங்க:  மஞ்சள் நிற பல்லை வெண்மையாக்கும் வாழைப்பழத் தோல்; ரகசியம் இதுதான்!!

45
சுருக்கங்களை நீக்கும்:

சுருக்கங்களை நீக்கும்:

வாழைப்பழ தோல் ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளதால், இது உங்களது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும் மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுக்கும். வாழைப்பழ தோல் சருமத்தில் கொலாஜனை அதிகரிப்பதிலும், ஈரப்பதமூட்டுவதிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  இதற்கு வாழைப்பழ தோல் பேஸ் உடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூல், முல்தானி மட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை கலந்து முகத்தில் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க:  Banana Peel On Hair : இத படிச்சா இனி வாழைப்பழத் தோலை தூக்கி எறிய மாட்டீங்க! வியக்க வைக்கும் நன்மைகள் இதோ..!

55
வாழைப்பழ தோல் ஃபேஸ் பேக்:

வாழைப்பழ தோல் ஃபேஸ் பேக்:

வாழைப்பழத் தோலை மிக்ஸியில் அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் சிறிதளவு தேன் சேர்த்து நன்றாக கலந்து அந்த பேஸ்டை உங்களது முகத்தில் தடவி சுமார் பத்து நிமிடம் அப்படியே வைத்து விட்டு பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்: போடும் முன் உங்களது முகத்தை கழுவி சுத்தம் செய்து பிறகு தான் போட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வேண்டும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நரைமுடியை மறைக்க இனி ஹேர் டை வேண்டாம்! வீட்டில் இருக்கும் தேயிலையை இப்படிப் பயன்படுத்திப் பாருங்க!
Recommended image2
Hair Tips: கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா? நீங்கள் பயன்படுத்தும் சீப்புதான் காரணமா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!
Recommended image3
Black Milk : வைரலாகும் கருப்பு பால்! இத குடிச்சா MGR போல தகதகன்னு மின்னலாமா? அப்படி என்ன சிறப்பு இந்த பாலில்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved