MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மஞ்சள் நிற பல்லை வெண்மையாக்கும் வாழைப்பழத் தோல்; ரகசியம் இதுதான்!!

மஞ்சள் நிற பல்லை வெண்மையாக்கும் வாழைப்பழத் தோல்; ரகசியம் இதுதான்!!

Banana Peel Teeth Whitening : உங்களது பற்கள் மஞ்சள் நிறமாகவும், கறையாகவும் இருந்தால் அவற்றை வெண்மையாக மாற்ற வாழைப்பழத் தோலை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 29 2024, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Banana Peel Teeth Whitening In Tamil

Banana Peel Teeth Whitening In Tamil

பற்கள் நமது முகத்தின் அழகு மற்றும் நமது ஆளுமையின் முக்கிய அங்கமாக வகிக்கிறது. பற்கள் வெண்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால் நம் தன்னம்பிக்கை கூட அதிகரிக்கும். ஆனால் ஒரு சிலருக்கு பற்கள் மஞ்சள் நிறமாக இருக்கும். பற்களை சுத்தமாக வைக்காமல் இருப்பது, டீ அல்லது காபி அதிகம் குடிப்பது, புகையிலை அல்லது சிகரெட் குடிப்பது அல்லது வயதாகும்போது பற்களின் நிறம் மங்கிப் போவது போன்ற பல காரணங்கள் மஞ்சள் பற்களுக்கு பின்னால் இருக்கும்.

25
Banana Peel Teeth Whitening In Tamil

Banana Peel Teeth Whitening In Tamil

அந்த வகையில் உங்களது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் அவற்றை வெண்மையாகவும், பளபளப்பாகவும் மாற்ற விரும்பினால் அதற்கு விலையுயர்ந்த சிகிச்சை தேவையில்லை. வீட்டிலேயே சில இயற்கை வைத்தியங்களின் உதவியுடன் உங்கள் பற்களின் வெண்மையை மீட்டெடுக்கலாம். நீங்கள் வாழைப்பழத் தோலை பயன்படுத்தலாம். எனவே மஞ்சள் நிற பற்கள் வெண்மையாக வாழைப்பழத் தோலை பயன்படுத்துவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  பல் ஈறுகளில் இரத்தம் கசிவா? அப்ப தினமும் காலை 'இத' செய்ங்க..

35
Banana Peel Teeth Whitening In Tamil

Banana Peel Teeth Whitening In Tamil

வாழைப்பழத் தோலை வைத்து பற்களை வெண்மையாக்குவது எப்படி?

வாழைப்பழ தோலில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கோள் உள்ளன. அவை பற்களை வெண்மையாக பெரிதும் உதவும். ஆனால் நீங்கள் வெறும் வாழைப்பழத் தோலை விட அதனுடன் வேறு ஏதாவது ஒன்றை சேர்த்தால் சிறந்த முடிவுகளை பெற முடியும். இதற்கு வாழைப்பழ தோலுடன் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம்.

45
Banana Peel Teeth Whitening In Tamil

Banana Peel Teeth Whitening In Tamil

பயன்படுத்தும் முறை :

முதலில் வாழைப்பழத் தோலை எடுத்து அதன் உள்பகுதியில் பற்களில் தேய்க்க வேண்டும். தோலில் மேலிருந்து கீழாக வட்ட இயக்கத்தில் தேய்த்தால் அதன் சத்துக்கள் பற்களில் சரியாக பொருந்தும்.

இப்போது ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலாக்கி அதை வாழைப்பழத்தோலுடன் சேர்த்து பற்களில் தடவவும். பற்களில் சுமார் இரண்டு மூன்று இடத்தில் விட்டு விட்டு சாதாரண நேரில் கழுவும். இதை நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

இதையும் படிங்க:  குழந்தைகளுக்கு ஏற்ற 'ஜீரோ' கெமிக்கல் பல்பொடி'.. 10 கிராம்பு இருந்தா வீட்டில் தயார் செய்யலாம்!!

55
Banana Peel Teeth Whitening In Tamil

Banana Peel Teeth Whitening In Tamil

இது எவ்வாறு செயல்படுகிறது?

வாழைப்பழத்தோலில் காணப்படும் தாதுக்கள் பற்களின் மேற்பரப்பை அடைந்து மஞ்சள் நிறத்தை குறைக்கிறது. அதே நேரத்தில் பேக்கிங் சோடா ஒரு இயற்கை ஸ்கிரப்பராக செயல்படுகிறது. இது பற்களின் மேல் அடுக்கில் உள்ள கறைகளை அகற்ற பெரிதும் உதவுகிறது. இது தவிர பேக்கிங் சோடாவில் அல்கலைன் பண்புகள் பற்களின் மஞ்சள் நிறத்தை குறைக்க உதவுகிறது.

நினைவில் கொள் :

இவற்றை நீங்கள் செய்வது மட்டுமில்லாமல் பற்களை தவறாமல் சுத்தம் செய்வதில் கவனம் செலுத்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும். அதிகப்படியான டீ, காபி சிகரெட் ஆகியவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இவை மஞ்சள் நிற பற்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும். அதுபோல பற்களின் வெண்மையை பராமரிக்க அவ்வப்போது பல் மருத்துவர் அணுகவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved