இந்த '7' அறிகுறிகள் வந்தா அசால்டா இருக்காதீங்க; இதயத்திற்கு கவனிப்பு தேவைனு அர்த்தம்!
Signs Your Heart Needs Rest : உங்கள் இதயம் சோர்வாக இருக்கிறது என்பதை காட்டும் சில அறிகுறிகளை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

இந்த '7' அறிகுறிகள் வந்தா அசால்டா இருக்காதீங்க; இதயத்திற்கு கவனிப்பு தேவைனு அர்த்தம்!
இதயம் நம் உயிர் வாழ்வதற்கு முக்கியமான உறுப்பு ஆகும். பொதுவாக நம் அதிகமாக வேலை செய்யும்போது பல சமயங்களில் நம்முடைய உடல் சோர்வடைந்து விடும் அல்லது பலவீனமடையும். அத்தகைய சூழ்நிலையில், நாம் உடலுக்கு சிறிது ஓய்வு கொடுப்போம். உங்களது உடலும் சோர்வடைவது போல இது உங்களது இதயமும் சோர்வடையும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உடல் சோர்வுக்கு பிறகு ஓய்வு கொடுப்பது போல இதயத்திற்கும் சிறிது நேரம் ஓய்வு தேவை. ஆனால் பெரும்பாலானோருக்கு அது குறித்து தெரிவதில்லை. சொல்லபோனால், இதயம் சோர்வாக இருக்கிறது என்பதை குறித்து நமக்கு தெரியாது. இதன் காரணமாக மாரடைப்பு பக்கவாதம் அபாயம் அதிகரிக்கும். ஆனால் சில அறிகுறிகள் மூலம் இதயம் சோர்வாக இருக்கிறது என்பதை கண்டறியலாம். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுவாசிப்பதில் சிரமம்:
நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது தூங்கும் போது சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உங்களது இதயம் சோர்வாக அல்லது பலவீனமாக இருக்கிறது என்று அர்த்தம். இத்தகைய சூழ்நிலையில் உங்களது இதயத்திற்கு உடனே ஓய்வு கொடுங்கள்.
மார்பு வலி :
மார்பில் லேசான வலி கனமான உணர்வு இருக்கும் அல்லது அழுத்தம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டால், இதயம் பலவீனமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி தான் இது.
இதையும் படிங்க: சுவை கண்டு ஏமாறாதீங்க.. இதயத்தை பாதிக்கும் இந்த '3' உணவுகளை சாப்பிட்டா உயிருக்கே ஆபத்து
அதீத சோர்வு:
நீங்கள் தொடர்ந்து சோர்வாக உணர்கிறீர்களா? எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு சக்தி இல்லாதது போல உணர்கிறீர்களாம் ஒருவேளை ஓய்வெடுத்த பிறக்கும் இந்த சோர்வு சரியாக விலகி என்றால் உங்கள் இதயம் ரொம்பவே சோர்வாக இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான் இது. இத்தகைய சூழ்நிலையில், உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
வீக்கம் :
உங்களது பாதங்கள், கணுக்கால் அல்லது கால்களின் கீழ் பகுதிகளில் வீக்கம் இருந்தால் உங்களது இதயம் சோர்வின் அறிகுறி தான் இது.
வியர்வை :
எந்தவித காரணமும் இல்லாமல் உங்களுக்கு ரொம்பவே வியர்க்க ஆரம்பிக்கிறதா? அதுவும் அதுக்கு குளிர்ச்சியாக இருந்தால், இதயம் சோர்வாக இருப்பதற்கான அறிகுறியாகும்.
ஒழுங்கற்ற இதயத்துடிப்பு :
சுவாசிக்கும் போது இதயத்துடிப்பு ரொம்பவே அதிகரிக்கும் அல்லது இதயத்திற்கு சீராக இல்லாமல் இருக்கும். அதாவது இதயத்துடிப்பானது சில சமயங்களில் வேகமாகவும், சில சமயங்களில் ரொம்பவே மெதுவாகவும் இருந்தால் இது இதய சோர்வின் அறிகுறி.
தலை சுற்றல் :
நீங்கள் தொடர்ந்து தலைசுற்றல் பிரச்சனையை சந்திக்கிறீர்களா? நிற்கும்போது கூட மயக்கம் வருவது போல் உணர்கிறீர்களா? இதுவும் இதயம் சோர்வாக இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.
இதையும் படிங்க: மாரடைப்பை தடுக்க; இந்த 8 அறிகுறி தெரிந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள்!
எப்போது மருத்துவரை சந்திக்கலாம்?
மேலே சொன்ன அறிகுறிகள் தவிர, நெஞ்சு வலி அதிகமாக இருந்தாலோ அல்லது உங்களது தோல் நிறம் மாறினால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்களது இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வழக்கமான லேசான உடற்பயிற்சி செய்யுங்கள். இதனுடன் கூட ஆரோக்கியமான உணவு மற்றும் நல்ல தூக்கம் மிகவும் அவசியம்.