Weight Loss Foods : ஈஸியா எடையை குறைக்கும் '7' ஆரோக்கியமான உணவுகள்!! லிஸ்ட் இதோ!!
உடல் எடையை ஈசியாக குறைக்க சில ஆரோக்கியமான சில உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Weight Loss Foods
உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் சரியான உணவு டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றினால் மட்டுமே எடையை கண்டிப்பாக குறைக்க முடியும். இப்போது எடையை சுலபமாக குறைக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நட்ஸ்கள் :
எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் தங்களது டயட்டில் பாதாம், முந்திரி போன்ற நட்ஸ்களை சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் புரதம் ஃபைபர் உள்ளன. இவை எடையை குறைக்க உதவும்.
பீன்ஸ், பருப்பு வகைகள் :
சிறந்த புரதம் நிறைந்த உணவாக இது கருதப்படுகிறது இது உங்களது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்து பசியை கட்டுப்படுத்த உதவும். இதனால் எடை அதிகரிப்பது தடுக்கப்படும்.
முட்டை :
முட்டையில் புரதச்சத்து நிறைந்துள்ளதால் இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்து, நாள் முழுவதும் குறைவாக சாப்பிட உதவும். எனவே எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் முட்டையை தினமும் சாப்பிடலாம்.
கீரை :
கீரையில் ஃபைபர், புரதம் மற்றும் தண்ணீர் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை பசியை கட்டுப்படுத்தி எடையை குறைக்க பெரிதும் உதவும்.
மீன் :
எடையை குறைக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அதிக புரதம் மீனை சாப்பிடலாம். இவை மெட்டபாலிசத்தை அதிகரித்து பசியை கட்டுப்படுத்தி எடையை குறைக்க உதவும்.
பெர்ரிகள் :
பெர்ரியில் சர்க்கரை குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகமாகவும் உள்ளன. இது இனிப்பு சாப்பிட வேண்டுமென்ற ஆசையை தணிக்க உதவும்.
முழு தானியங்கள் :
இது மிகவும் மெதுவாக செரிமானம் ஆகும் உணவாகும். எடையை குறைக்க உதவும் உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

