காதல் திருமணம் செய்ய போறீங்களா..? திருமணத்திற்குப் பிறகு இதை செய்யாவிட்டால் விரிசல் கன்பார்ம்!
காதலை திருமணம் எடுத்துச் செல்வது எவ்வளவு சிரமமோ, திருமணத்திற்குப் பிறகும் அதைத் தக்கவைத்துக்கொள்வதும் கடினம். அதற்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இங்கே..
காதல் திருமணம் என்பது புதிதல்ல, இது போன்ற திருமணங்கள் பல நூற்றாண்டுகளாக நடந்து வருகின்றன. ஒருவரது காதல் திருமணத்தில் வெற்றியடைந்தால், அது பெரிய அளவில் வெற்றியடைந்ததாக நினைப்பார்கள். ஆனால் எந்த ஒரு காதல் திருமணமான, திருமணத்திற்குப் பிறகு பல சோதனையை சந்திக்க நேரிடுகிறது.
பொதுவாக காதல் திருமணத்திற்குப் பிறகு, பல பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஏனென்றால் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பொறுப்புகளின் சுமை அதிகரிக்கும் மற்றும் அதேசமயத்தில், உறவை வேறு வழியில் கையாள வேண்டும். காதல் திருமணத்திற்குப் பிறகு, சில விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்றால், உறவு முறிந்துவிடும். அவை..
காதல் திருமணம் செய்பவர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:
ஒருவரையொருவர் மதிக்கவும்: திருமணத்திற்கு முன், காதலனுக்கும் காதலிக்கும் இடையிலான உறவு மிகவும் சாதாரணமானது. அந்த சமயங்களில் நீங்கள் மற்றவரை மரியாதை இல்லாமல் கூட நடத்தி இருக்கலாம். ஆனால் நீங்கள் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்ட பின் உங்கள் துணையை மதிக்க வேண்டியது மிகவும் அவசியம். எந்த ஒரு நண்பர் அல்லது உறவினர் முன் உங்கள் வாழ்க்கை துணையிடம் மரியாதையுடன் பேச வேண்டும், இல்லையெனில் உறவின் முக்கியத்துவம் குறையலாம். திருமணத்திற்கு பிறகு மரியாதை இல்லையெனில், உறவு நன்றாக இருக்காது.
திருமணத்திற்குப் பிறகு பொய் கொள்ளாதீர்கள்: அது காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, உங்கள் வாழ்க்கைத் துணையிடம் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியம். பொய் மற்றும் வஞ்சகத்தின் உதவியுடன் எந்த உறவும் நீண்ட காலம் நீடிக்காது. உங்களின் அன்றாடச் செயல்பாடுகள் அனைத்தையும் பற்றி உங்கள் துணையிடம் கூறுவது முக்கியம், உதாரணமாக, இன்று நீங்கள் எந்த நபரைச் சந்திக்கிறீர்கள், யார் யாருடன் பேசினீர்கள், வீட்டிற்கு ஏன் வரத் தாமதமாகுகிறது, நிதி விஷயங்கள் போன்றவை. பொய், திருமண வாழ்வில் விரிசல் ஏற்படலாம்
கோபத்தை தவிர்க்கவும்: காதல் திருமணத்திற்குப் பிறகு உங்கள் வாழ்க்கைத் துணையிடம் உங்கள் அணுகுமுறை கண்டிப்பாக மாறும். ஆனால் இனிய அன்பான உறவை முன்பு போலவே வைத்திருங்கள், இல்லையெனில் காதல் திருமணத்தில் தம்பதிகள் 'நீங்கள் அப்படி இல்லை' என்று அடிக்கடி புகார் சொல்லுவார்கள். மேலும் முன்பு போல் இல்லை என்று பல சிறிய விஷயங்களில் கோபப்படுவார்கள். இதனால் விஷயங்கள் மோசமாகத் தொடங்கும். அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, எப்போதும் உங்கள் கணவன் அல்லது மனைவியுடன் அன்பான தொனியில் சூழ்நிலையைச் சமாளிக்கவும்.