தவறியும் குழந்தைகள் முன் பெற்றோர் இந்த 4 வார்த்தைகளை சொல்லாதீங்க!! இதனால் மோசமான விளைவு வரும்!!
ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்ல ஆரோக்கியமும் கல்வியும் மட்டுமே அவசியமில்லை. மிக முக்கியமானது குழந்தையின் மன ஆரோக்கியம்.
ஒரு குழந்தையை வளர்ப்பது பெற்றோருக்கு மிகப்பெரிய பொறுப்பு. குழந்தையின் எதிர்காலம் பெற்றோரின் வழியைப் பொறுத்தது. குழந்தைகளுக்கு பெற்றோர் தான் வழிகாட்டியாக இருப்பார்கள். குழந்தையின் நல்ல ஆரோக்கியத்திற்காக, பெற்றோர் அவர்களின் உணவு, கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்ற அது மட்டும் போதுமானதில்லை.
ஒரு குழந்தையின் எதிர்காலத்திற்கு நல்ல ஆரோக்கியமும் கல்வியும் மட்டுமே அவசியமில்லை. மிக முக்கியமானது குழந்தையின் மன ஆரோக்கியம். குழந்தையின் மனநிலையை ஆரோக்கியமாக வைத்திருக்க, பெற்றோர் அவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லி கொடுப்பதோடு ஆரோக்கியமான சூழலில் வளரவிட வேண்டும். குழந்தைகளின் மனம் மிகவும் தூய்மையானது. அவர்கள் அங்கேயே கற்றுக் கொள்வதைப் பார்க்கிறார்கள். சில சமயங்களில் பெற்றோரின் சில வார்த்தைகள் குழந்தைகளின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தை வளர்ப்பின் போது தங்கள் குழந்தையின் முன் சில விஷயங்களைச் சொல்லக்கூடாது. பெற்றோர்கள் குழந்தைகளிடம் சொல்லக் கூடாத 5 வார்த்தைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
உடல் வடிவம்:
உங்கள் குழந்தையின் உடலைப் பற்றி ஒருபோதும் எதிர்மறையான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள். குழந்தையை குண்டு அல்லது ஒல்லி என்ற பொருள் தருமாறு சொல்லி அழைக்க வேண்டாம். இது அவர்களின் உடல் வடிவை அவமானத்திற்குள்ளாக்கும். அவர்களின் தோற்றத்தில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. இது தவிர, குழந்தையின் தோற்றத்தைப் பற்றி எதிர்மறையான விஷயங்களை சொல்லக் கூடாது. கருப்பு, குண்டு, நோஞ்சான் போன்ற எந்த வார்த்தைகளையும் பயன்படுத்த வேண்டாம். அவர்கள் முன் பிறரிடம் அப்படியான வார்த்தைகளை பேசுவதைத் தவிர்க்கவும்.
முட்டாள்:
பெரும்பாலும் பெற்றோர் குழந்தையின் எந்தவொரு செயலின் மீதும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். அதன் காரணமாக அவர்களை முட்டாள் அல்லது மக்கு என்று சொல்கிறார்கள். இது போன்ற வார்த்தைகள் குழந்தைகளின் சுயமரியாதையையும், நம்பிக்கையையும் குறைக்கும். பெற்றோரின் வாயிலிருந்து வரும் இந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு, குழந்தை தன்னை ஒரு முட்டாளாக நினைக்கத் தொடங்குகிறது. மேலும் புதிய விஷயங்களை முயற்சிக்க பயப்படுகிறது.
தண்டம்:
உங்கள் குழந்தையின் முன் உதவாக்கரை / தண்டம்/ ஒரு வேலைக்கு ஆவறதில்ல போன்ற வார்த்தைகளை நீங்கள் பேசினால், அது அவர்களை தகுதியற்றவர்கள் என நினைக்க வைக்கிறது. இது குழந்தையின் மன உறுதியையும் குறைக்கிறது. பயனற்றவர் என சொல்லி சொல்லி நீங்களே உங்கள் குழந்தை மனதில் தகுதியற்றவர் முக்கியமற்றவர் என்ற எண்ணத்தை ஏற்படுதேதி விடுகிறீர்கள். இதை செய்யாதீர்கள்.
வாயை மூடு.!
குழந்தை தனது மனதில் தோன்றும் எல்லாவற்றையும் பெற்றோருடன் பகிர்ந்து கொள்கிறது. பல சமயங்களில் பெற்றோர் குழந்தையின் வார்த்தைகளால் எரிச்சலடைகிறார்கள். இதனால் அவர்களை அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள். குழந்தையின் முன் இந்த வார்த்தையைப் பேசுவதன் மூலம், அவர் தனது கருத்தை அல்லது உணர்வுகளை அடக்கத் தொடங்குகிறார். பெற்றோருடன் விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்.
வெறுப்பு:
குழந்தையின் முன் வெறுப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். அன்பு, இரக்கம் மற்றும் பச்சாதாபம் பற்றி குழந்தைக்குக் கற்றுக் கொடுங்கள். வெறுப்பு என்ற வார்த்தையை நீங்கள் அவருக்கு முன்னால் பயன்படுத்தினால், அது அவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை அவர் உணரத் தொடங்குகிறார்.