சோயா பீன்ஸ் சாப்பிடுவதால் ஆண்களுக்கு பாலுறவில் ஆர்வம் குறைகிறதா?
ஆண்கள் அதிக அளவு சோயா பொருட்கள் அல்லது சோயா பால் குடிப்பதால், அவர்கள் பாலியல் பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாவதாக கூறப்படுகிறது.
தாம்பத்திய வாழ்வின் ஒரு அங்கம்தான் பாலுறவு இன்பம்.திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவி இருவரும் இந்த இன்பத்தை விரும்புகின்றனர். அவர்களில் ஒருவருக்கு பாலியல் பிரச்சினைகள் இருந்தாலும், அது இருவரையும் பாதிக்கிறது. இந்நிலையில் ஆண்களிடையே நிலவும் பாலியல் பிரச்னை என்ன? அதை தடுக்க அவர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிபுணர்களின் கருத்து
விறைப்புத்தன்மை, முன்கூட்டிய விந்துதள்ளல் போன்ற பிரச்சனைகள் அதிகம் இருந்தால், அது ஆண்களுக்கிடையேயான பாலுறவு ஆர்வத்தை பாதிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உடல்நலப் பிரச்னைகள் மட்டுமின்றி, குறிப்பிட்ட உடல்நலப் பிரச்னைகள் கூட இதற்கு வழிவகுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் சோயா அல்லது அதன் பொருட்களை அதிக அளவில் உட்கொள்ளும் ஆண்களுக்கு பாலியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சோயா பொருட்கள்
சோயா பட்டாணி அல்லது சோயா தயாரிப்புகளில் அதிக அளவு ஆண்டி-ஆக்சிடண்டுகள் உள்ளன. இது செக்ஸ் டிரைவ் ஹார்மோன்களில் எதிர் விளைவை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளன. அதிக அளவு சோயா அல்லது அதன் பொருட்களை சாப்பிடும் ஆண்களுக்கு பாலியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதற்காக இதை ஆண்கள் சாப்பிடக் கூடாது என்று சொல்லவில்லை. சோயா பால் உள்ளிட்ட சோயா பொருட்கள் மூலமாக பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஆனால் அது அளவுடன் இருக்க வேண்டும் என்று மட்டுமே வலியுறுத்தப்படுகிறது.
உடலுறவுக்கு பிறகு தலைவலி வருகிறதா? எச்சரிக்கையாக இருங்கள்..!!
ஆய்வுகள் கூறுவது
ஆண்களுக்கு பாலுறவு ஆசையையும் தூண்டுதலையும் அதிகரிக்கக்கூடிய ஒரே ஒரு ஹார்மோன் என்றால் அது டெஸ்டோஸ்டிரோன் மட்டுமே. சோயா அல்லது அதன் தயாரிப்புகளை அதிகமாக உட்கொள்வதால் அல்லது தினமும் சோயா பால் குடிக்கும் ஆண்களுக்கு இந்த ஹார்மோனின் செயல்பாட்டு குறைந்துபோய் விடுகிறது. அதனால் நாளிடைவில் அவர்களுக்கு பாலுறவில் ஆர்வம் குறைந்து, பாலியல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன.
கருவுறுதலில் பிரச்னை
தொடர்ந்து சோயா பொருட்களை சாப்பிடும் ஆண்களுக்கு ஹார்மோன்களில் பிரச்சனை தோன்றுவது மட்டுமின்றி, ஆண்களின் விந்தணுக்களின் கருவுறுதலும் குறைகிறது, இதன் விளைவாக எதிர்காலத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்பும் குறைவு என்று ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
செய்ய வேண்டியது
திருமணத்திற்குப் பிறகு, ஆண்கள் இந்த சோயா பொருட்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் எதிர்காலத்தில் குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைந்து போய்விடுவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே, முன்பு குறிப்பிட்டபடி, நீங்கள் அதை உட்கொள்வதை முற்றிலும் நிறுத்த வேண்டியதில்லை. இந்த தயாரிப்பை மிதமாக உட்கொள்வது நல்லது.