திருமணம் 5 வகைப்படுகிறது- தெரியுமா உங்களுக்கு..?? தெரிந்துகொள்ளுங்கள்..!!
ஒரு திருமண உறவில் தொடர்ந்து சண்டைகள், வாக்குவாதம் நீடிப்பது போன்றவை விவாகரத்துக்கு வழிவகுக்கின்றன. திருமணம் எப்போதும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்காது, சில சமயங்களில் அது தனது மோசமான முகத்தை காட்டும்.
திருமணம் ஒருபோதும் எளிதான உறவு கிடையாது. உண்மையில், ஒரு திருமணத்தை உயிருடன் வைத்திருப்பதற்கு போராட வேண்டும். அது மிகவும் கடினமானது. ஒரு திருமண உறவில் தொடர்ந்து சண்டைகள், வாக்குவாதம் நீடிப்பது போன்றவை விவாகரத்துக்கு வழிவகுக்கின்றன. திருமணம் எப்போதும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்காது, சில சமயங்களில் அது தனது மோசமான முகத்தை காட்டும். அமெரிக்க உளவியலாளரும் உறவு நிபுணருமான ஜான் காட்மேன், தம்பதிகளுக்கு இடையிலான தொடர்புகளின் அடிப்படையில் திருமணத்தை 5 வகையாக பிரிக்கிறார். அதுகுறித்து தெரிந்துகொள்வோம்.
நீ பாதி, நான் பாதி
இந்த வகையான திருமணத்தில், தம்பதிகள் அமைதியான முறையில் வாழ்வார்கள். பிரச்சனைகள் மற்றும் சண்டைகளின் போது கூட அவர்கள் ஒருவருக்கொருவர் நிதானமாக இருப்பார்கள். ஒரு பிரச்னை என்று வந்தால், அவ்வளவு சீக்கரம் முடிவு எடுத்துவிட மாட்டார்கள். எதுவாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து தான் முடிவு செய்வார்கள். ஒரு பெரிய சண்டையை எதிர்கொண்டாலும் அவர்கள் மிக விரைவாக நிதானத்துக்கு வந்துவிடுவார்கள். சண்டை வரம்பு மீறி போனால் கூட, பிரச்னையை விரைவாக அடையாளம் கண்டு ஒருவரையொருவர் அமைதிப்படுத்துவார்கள்.
நீயே சரணாகதி
இது மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடிய தம்பதிகளைக் கொண்ட திருமண உறவாகும். மிகவும் உணர்திறன் கொண்ட கணவன், மனைவியால் உரையாடல்களைக் கையாள முடியாது. எனவே, அவர்கள் ஒருவரையொருவர் விமர்சிப்பதையோ அல்லது கடுமையாகப் பேசுவதையோ தவிர்த்துவிடுவார்கள். ண்டைகள் அவர்களுக்கு இடையேயான பிணைப்பை பாதிக்காத வகையில் அவர்கள் இணைந்து இருப்பார்கள். ஒருவேளை அவர்களையும் மீறி, தங்களுடைய உறவில் சேதம் ஏற்பட்டுவிட்டால், இருவரும் சேர்ந்து பழியை ஏற்றுக்கொண்டு சரிசெய்ய முயற்சிப்பார்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கே
இந்த வகையான திருமணத்தில், தம்பதிகள் அரிதாகவே சண்டையிடுவார்கள். தங்களுக்குள் எந்த பிரச்னை வந்தாலும், உடனடியாக நிராகரித்துவிடுவார்கள் அல்லது பிரச்னைகளை தவிர்த்து விடுவார்கள். பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், எப்போதும் நேர்மறையான கருத்துக்களை மட்டுமே பரிமாற வேண்டும் என்று எண்ணுவார்கள். இந்த ஜோடிகளுக்கு தெளிவான இலக்குகள் உள்ளன. அதனால் அவர்களுடைய சண்டைகளின் எண்ணிக்கையை குறைந்துவிடும். தங்களுக்கு உடன்படாத விஷயங்களைப் பற்றி சண்டையிடுவதை விட, அவர்கள் ஒப்புக்கொண்ட விஷயங்களைப் பற்றி மட்டுமே பேச விரும்புவார்கள்.
அடி தடி ரகளை
எதற்கெடுத்தாலும் விதாண்டாவாதம் செய்யும் தம்பதிகள் தங்களிடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டு திருமண உறவை கையாளுகின்றனர். ஒருவரையொருவர் கடுமையாக விமர்சிப்பார்கள், ஒருவரையொருவர் சகட்டு மேனிக்கு குற்றஞ்சாட்டிக் கொள்வார்கள். அவர்களிடையே எப்போதும் சண்டை வந்துகொண்டும் போய்கொண்டும் இருக்கும். தங்களுடைய துணையின் பார்வையை புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. அதற்கு பதிலாக அவர்கள் தங்கள் நிலையை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். இதனால் அவர்களுடைய திருமணம் உறவு சிறப்பதில் சற்று சிரமம் நிலவும்.
Brea up Sex : பிரேக்-அப் செக்ஸில் ஈடுபடுவது சரியான முடிவு கிடையாது- ஏன் தெரியுமா..?
தொடர்பு எல்லைக்கு வெளியே
இந்த வகையான திருமணத்தில், தம்பதிகள் ஒருவருக்கொருவர் மிகவும் எதிர்மறையான வழியில் தொடர்ந்து சண்டையிடுபவராக உள்ளனர். எந்த தீர்வையும் தேடாமல் இலக்கில்லாமல் வாழ்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் மிக மோசமான முறையில் விமர்சிக்கிறார்கள் மற்றும் எந்த விதமான சமரசத்திற்கும் தயாராக இருக்கமாட்டார்கள். இதனால் இவர்களுடைய திருமண உறவும், அவர்களுடைய உற்றார் உறவினரும் மோசமான விளைவைச் சந்திக்க நேரிடுகிறது. இது இறுதியில் விவகாரத்துக்கு வழிவகுக்கிறது.