ஜப்பான்ல கணவன், மனைவி சண்டையை இப்படி தான் தீர்க்குறாங்க.. சூப்பரான 5 டிப்ஸ்!!
ஜப்பானில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டையைத் தவிர்க்க பின்பற்றும் குறிப்புகளை இங்கு காணலாம்.

Japanese Relationship Tips
Japanese Techniques To Avoid Conflicts in Relationship : இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவிக்கு சிறு முரண் கூட பூதாகரமாகிவிடுகிறது. உறவு சிக்கல்களுக்கு கவனம் கொடுக்க வேண்டிய காலமிது. பலர் தங்கள் வாழ்க்கைத் துணை தங்களுடைய தேவையை அறிந்து நடக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் அதற்காக நேரம் செலவழிப்பதில்லை. திருமண வாழ்க்கையை தக்க வைத்து கொள்ள அதற்காக சில முயற்சிகளை எடுக்க வேண்டும். திருமண வாழ்வில் சண்டையை தவிர்க்க தேவையான ஜப்பானிய குறிப்புகளை இங்கே காணலாம்.
Japanese Relationship Tips
ஜமாய் - டெக்னிக்
எந்த உறவிலும் உரையாடல் முக்கியம். ஜப்பானில் தம்பதிகளிடயே தகவல் தொடர்பு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜமாய் என சொல்லப்படும் டெக்னிக் என்னவென்றால் நேரடியாக பேசுவதை விட மற்ற வழிகளிலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அதாவது மனைவி கோபப்பட்டால் அதற்கு பதிலாக கணவன் கோபப்பட்டு வார்த்தைகளை விடாமல் சற்று அமைதியாக கோபத்தின் காரணத்தை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். ஏனென்றால் நேரடியாக வார்த்தைகளில் பேசுவது சில நேரம் முரட்டுத்தனமாக தெரியலாம். அது உங்கள் துணையை புண்படுத்திவிடக் கூடும். "ஐமாய்" டெக்னிக்கை பயிற்சி செய்தால் உறவில் நெருக்கம் உண்டாகும். உதாரணமாக விரல்களை நீட்டி கத்தி பேசுவதை விட மென்மையான முறையில் உங்கள் தரப்பை வெளிப்படுத்தலாம்.
Japanese Relationship Tips
காமன்- டெக்னிக்
ஜப்பானிய கலாச்சாரம் சொல்கின்ற "காமன்" டெக்னிக் பொறுமை, கண்ணியம் ஆகியவற்றுடன் பிரச்சனைகளை கையாள அறிவுறுத்துகிறது. பிரச்சனை சூடுபிடிக்கும்போது அவசரமாக அதற்கு எதிர்வினையாற்றாமல் அமைதியாக அதை கையாள வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் சுய கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும். ஜப்பானிய தம்பதிகள் பொறுமையை பலமாக கருதுகின்றனர்.
இதையும் படிங்க: உங்க பார்ட்னருக்கு 'இந்த' விஷயத்தை கொடுக்கலன்னா.. உறவு சீக்கிரமே 'வீக்' ஆகிடும்!!
Japanese Relationship Tips
நன்றியுணர்வு:
ஜப்பானிய கலாச்சாரத்தில் சாப்பிடும் முன்பாக 'இடடகிமாசு' என்ற வார்த்தையை கூறுவார்கள். இது தங்களின் வாழ்க்கையில் கிடைத்த நல்விஷயங்களுக்காக, உணவுக்காக நன்றியுணர்வை வெளிப்படுத்த சொல்லப்படுகிறது. தன் துணையிடம் நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும். அன்பு, பாராட்டு ஆகியவற்றை அடிக்கடி வெளிப்படுத்த வேண்டும். இதுவே உறவை ஆழப்படுத்தும். தன் துணை தன்னை கவனிப்பதாக, தான் சொல்வதை கேட்பதாக உணர்வு வெளிப்படும்போதுதான் உறவு பலப்படும். அதனால் அடிக்கடி நன்றி சொல்வதை பழக்கப்படுத்துங்கள். மனதார பாராட்டுங்கள்.
இதையும் படிங்க: உங்களுக்கு ஏற்ற 'வாழ்க்கைத் துணையை' எப்படி கண்டுபிடிக்கனும் தெரியுமா?
Japanese Relationship Tips
மா- கொஞ்சம் நிறுத்து!
'மா' என்றால் ஜப்பானிய மொழியில் இடைநிறுத்தத்தை (pause) குறிக்கும். உரையாடல், உறவுகள், வேலை எதுவாகினும் ஒரு இடைவெளி அல்லது இடைநிறுத்தம் தேவை. காதல் உறவிலும் கொஞ்சம் இடைவெளி தேவை. துணையிடம் மொத்த நேரத்தையும் செலவிட்டால் உணர்ச்சிரீதியாக சோர்வடையலாம். துணைக்கும் சொந்த விருப்பங்கள், அமைதியான நேரம் தேவை. அதை எடுத்துகொள்ள அனுமதியுங்கள். இதனால் நீங்கள் ஒன்றாக நேரம் செலவிடுன்போது மனநிறைவாக இருப்பீர்கள்.
Japanese Relationship Tips
நல்லிணக்கம்:
ஜப்பானிய மொழியில் நல்லிணக்கத்தை 'வா' என்கிறார்கள். அதாவது உறவுகளுக்கு மரியாதை, அன்பு, உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் போன்றவை அவசியம். கருணையுடன் அன்புடன் இருக்க வேண்டும். நீங்கள் அவ்வப்போது விட்டுக் கொடுத்து கனிவுடன் நடந்துகொள்வது உங்களுக்குள் நல்ல இணக்கத்தை ஏற்படுத்தும்.
Japanese Relationship Tips
ஜப்பானிய உறவுகள்:
ஜப்பானியர்கள் கலாசாரத்தை மதிப்பார்கள். அதனால் தம்பதிகள் பெரும்பாலும் மேலே சொன்ன குறிப்புகளை பின்பற்றுபவார்கள். உரையாடல், நேரம் செலவிடுதல், இடைவெளி, நன்றியுணர்வு, நல்லிணக்கம் ஆகியவற்றை சரியாக பின்பற்றினால் உங்கள் உறவு பலப்படும்.