MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • எச்சரிக்கை: ஒருபோதும் இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!! உயிருக்கு ஆபத்து..!!

எச்சரிக்கை: ஒருபோதும் இந்த உணவுகளை சூடுபடுத்தி சாப்பிடாதீங்க!! உயிருக்கு ஆபத்து..!!

நாம் சாப்பிடும் உணவுகளில் சிலவற்றை மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது. அவை எந்தெந்த உணவுகள் என்று இங்கு பார்க்கலாம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jul 04 2023, 01:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நம்மில் பெரும்பாலானோர் சாப்பிட்ட பின் உணவு மீதமாக இருந்தால் அதனை வீணாக்க நினைக்காதோர் ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் அதனை சூடு படுத்தி சாப்பிடும் வழக்கம் உள்ளது. ஆனால் ஆனால் சில உணவுகளை சூடு படுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது நம் உடலுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். அது என்னென்ன உணவுகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

26

கீரை:
இதில் அதிக அளவு நைட்ரேட்டுகள் மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் இவற்றையும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிடும் போது அவை நச்சுத்தன்மையுடையதாக மாறி புற்றுநோயை உண்டாக்கும் பண்புகளை வெளியிடுகிறது. மேலும் இரும்பின் ஆக்சிஜனேற்றம் ஆபத்தான ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகிறது. இது கருவுறாமை மற்றும் புற்றுநோய் உட்பட பல நோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.

36
rice

rice

அரிசி சாதம்:
நாம் அனைவரும் அதிகமாக உணவில் சேர்த்து கொள்ளும் உணவு பொருள் இது. இதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதன் மூலம் உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்படலாம். அரிசி சாதம் குளிர்ந்துவிட்டது என்று நினைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. ஏனெனில் பாக்யாக்களில் உள்ள நுண்கிருமிகள் உற்பத்தி பெருகி அழிந்து அதற்குள்ளேயே தங்க வாய்ப்பு உள்ளது. எனவே அரிசி சாதத்தை ஒருபோதும் சூடுபடுத்தி சாப்பிட வேண்டாம்.

46

முட்டைகள்:
முட்டைகள் புரதத்தின் வளமான மூலமாகும். இருப்பினும், சமைத்த முட்டை அல்லது வேகவைத்த முட்டை மீண்டும் சூடாக்கி சாப்பிடும் போது, அது கடுமையான தீங்கு விளைவிக்கும். ஏனெனில் அதிக புரத உணவுகளில் நைட்ரஜன் நிறைய உள்ளது. இந்த நைட்ரஜன் மீண்டும் சூடுபடுத்துவதால் ஆக்சிஜனேற்றம் அடையலாம். இதனால் புற்றுநோயை உண்டாக்கலாம்.

56

சிக்கன்:
சிக்கனை சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும் என்று நம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இதனை அடுத்த நாள் வைத்து சூடுபடுத்தி சாப்பிட சாப்பிடுவது நல்லதல்ல. ஏனெனில் இதில் அதிக அளவு புரதம் நிறைந்துள்ளதால் அதை மீண்டும் சூடாக்கி சாப்பிடும் போது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இது செரிமான அமைப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

இதையும் படிங்க: தொடர்ந்து புகைப்பிடிப்பதால் காது கேட்காமல் போய்விடுமா? மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

66

காளான்:
இதில் அதிகளவு புரம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், இதனை சமைத்தவுடன் சாப்பிட வேண்டும். இதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் போது பெரியளவில் தீங்கை விளைவிக்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜாக்கிரதை.! ராத்திரியில இந்த 7 பழங்களை மறந்தும் சாப்பிடாதீங்க!
Recommended image2
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image3
Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved