சுகரை குறைக்கும் '4' வகை சப்பாத்திகள் தெரியுமா? ஈஸியான ரெசிபி!!
Chapati For Diabetes : சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த 4 மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியானது கோதுமை மாவை விட அதிக நன்மை பயக்கும். அவற்றின் செய்முறை பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

சுகரை குறைக்கும் '4' வகை சப்பாத்திகள் தெரியுமா? ஈஸியான ரெசிபி!!
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் சர்க்கரை நோயாள் அவதிப்படுகிறார்கள். சமநிலையற்ற வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கங்களால் இந்நோய் வருகின்றது. உடலில் இன்சுலின் அளவு குறைந்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் தான் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சர்க்கரை நோயாளிகள் காலை முதல் இரவு வரை தங்கள் உணவில் கண்டிப்பாக சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு பிரச்சினையை குணப்படுத்தும் சில சப்பாத்திகளை பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் நீரிழிவு நோயாளிகள் கோதுமை மாவில் இருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். எனவே உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எந்த மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட சப்பாத்திகளில் சாப்பிடுவது நன்மை பயக்கும், அதன் செய்முறை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தினை சப்பாத்தி:
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், நீடூழி நோயை தடுக்கவும் திணை சப்பாத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப் பிரசாதமாகும். தினையில் மெக்னீசியம் ஏராளமாக உள்ளன. இது ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கும். மேலும் இதில் கிளைசெமிக் குறியீடு குறைந்த அளவில் காணப்படுகின்றது. இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் வாய்ப்பை கணிசமாக குறைக்கும். சர்க்கரை நோயாளிகள் தாராளமாக தினை சப்பாத்தியை தினமும் கூட சாப்பிடலாம்.
தயாரிக்கும் முறை:
இந்த சப்பாத்தி செய்யும் முதலில் தினை மாவு மற்றும் கோதுமை மாவை எடுத்துக்கொண்டு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து சப்பாத்தி சுட்டு சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: கோதுமை அல்லது ராகி: சர்க்கரை நோயாளிகளுக்கு எது பெஸ்ட்?
சோளம் சப்பாத்தி:
உங்களுக்கு ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், சோள மாவில் சப்பாத்தி செய்து சாப்பிடுங்கள். ஏனெனில் சோளத்தில் மெக்னீசியம், புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. சோளம் சப்பாத்தியில் பசையும் இல்லை என்பதால், பெரும்பாலான மருத்துவர்கள் இந்த மாவில் தயாரிக்கப்பட்ட சப்பாத்தி சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்.
தயாரிக்கும் முறை:
ஒரு கப் சோள மாவில் ஒரு ஸ்பூன் நெய் சிறிதளவு உப்பு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள் சிறிது நேரம் கழித்து சப்பாத்தி சுட்டு சாப்பிடுங்கள்.
இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் வெல்லம் கலந்த டீ குடிக்கலாமா? உண்மை என்ன?
ராகி சப்பாத்தி:
ராகில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இதிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யாது. அது மட்டுமல்லாமல் இதில் அதிக அளவு தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளதால் அவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும் எனவே இரவில் நோயாளிகள் ராகி சப்பாத்தியை தாராளமாக சாப்பிடலாம்.
தயாரிக்கும் முறை:
ஒரு கப் ராகி மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளுங்கள். முக்கியமாக சப்பாத்தி உடையாமல் இருக்க மெதுவாக பிசைய வேண்டும் என்பது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சப்பாத்தி சுடும்போது ஒரு துணியின் உதவியுடன் லேசாக அளித்துக் கொண்டே இருக்கவும்.
ஓட்ஸ் சப்பாத்தி:
உடல் எடையை குறைப்பதற்காக ஓட்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது ஒரு அருமருந்தாகும். ஓட்ஸிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியை சாப்பிடுவது அவர்களின் உடலில் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. முக்கியமாக வகை 2 நீரிழிவு நோய் ஆபத்தையும் இது குறைக்கிறது. ஓட்ஸில் கிளைசெமிக் குறியீடு குறைவாக உள்ளது. இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. ஓட்ஸில் இருக்கும் பீட்டா குளுக்கோன் நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும். அதுமட்டுமல்லாமல் இது இதயம் தொடர்பான நோய்களிலிருந்தும் உங்களை பாதுகாக்கும்.
தயாரிக்கும் முறை:
முதலில் ஓட்ஸ் மற்றும் கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஓட்ஸை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து கோதுமை மாவுடன் கலந்து அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் ஊற்றி மாவை பிசைந்து, பின் வழக்கமாக சப்பாத்தி சுடுவது போல சுடவும்.