MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Kootanchoru: திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு..கிராமத்து மணத்துடன் அசத்தும் பாரம்பரிய ரெசிபி!

Kootanchoru: திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு..கிராமத்து மணத்துடன் அசத்தும் பாரம்பரிய ரெசிபி!

Tirunelveli special Kootanchoru: திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு செய்வது எப்படி? அரிசி, துவரம்பருப்பு, காய்கறிகள், கீரை, தேங்காய் மசாலா சேர்த்து சுவையான கிராமத்து கூட்டாஞ்சோறு செய்யும் எளிய செய்முறை இதோ.

4 Min read
Author : Vishnupriya
Published : Oct 11 2026, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
திருநெல்வேலி கூட்டாஞ்சோறு
Image Credit : Gemini Ai

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு

கூட்டாஞ்சோறா? இந்தக் குழந்தைகள் விளையாடுவாங்களே அதுவா? என்று நீங்கள் நினைக்கிறீர்களா? குழந்தைகள் விளையாடும் கூட்டாஞ்சோறு வேறு, நெல்லை மண்ணின் மணத்தோடு பல காய்கறிகள், பருப்பு, கீரை, தேங்காய் மசாலா என அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து மணக்கும் திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு வேறு.

வீட்டில் தினமும் ஒரே மாதிரியான சாப்பாட்டைச் சாப்பிட்டு அலுத்துப்போனவர்களா நீங்கள்? அப்படியானால், இந்த நெல்லை ஸ்பெஷல் கூட்டாஞ்சோற்றை ஒருமுறை செய்து பாருங்கள். அரிசி, பருப்பு, கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், கீரை என காய்கறின் குடும்பத்தையே ஒன்றாகச் சேர்ந்து, தேங்காய் மசாலாவின் மணத்தோடு குழைந்து வரும் இந்த உணவின் சுவையே தனிதான்.

கூடுதல் சைட் டிஷ் எதுவும் இல்லாமலேயே சாப்பிடலாம். அப்பளம், வடகம் இருந்தால் சொல்லவே வேண்டாம். வீட்டில் உள்ள காய்கறிகளைப் பயன்படுத்தி, ஒரே பாத்திரத்தில் சுவையான மதிய உணவைத் தயாரிக்க விரும்புபவர்கள் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டிய பாரம்பரிய உணவுதான் திருநெல்வேலி கூட்டாஞ்சோறு. சரி, இதை வீட்டிலேயே சுவையாகச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு என்றால் என்ன?

கூட்டாஞ்சோறு என்பது அரிசி, துவரம்பருப்பு, பலவகையான காய்கறிகள், கீரைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஒன்றாகச் சேர்த்துச் சமைக்கும் பாரம்பரியமான கிராமத்து உணவாகும். குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் இந்த உணவு வீட்டுச் சமையலிலும் கிராமத்து விருந்துகளிலும் இடம்பெறுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
தேவையான பொருட்கள்
Image Credit : Gemini Ai

தேவையான பொருட்கள்

  • அரிசி - 1 கப்
  • துவரம்பருப்பு - 1\2 கப்
  • சின்ன வெங்காயம் - 10 முதல் 12
  • தக்காளி - 2
  • கத்தரிக்காய் - 2
  • முருங்கைக்காய் - 1
  • வாழைக்காய் - 1\2 அல்லது 1 சிறியது
  • உருளைக்கிழங்கு - 1
  • கேரட் - 1
  • பீன்ஸ் - 5 முதல் 6
  • முள்ளங்கி - 1
  • கோவைக்காய் - 5
  • அவரைக்காய் - ஒரு கைப்பிடி
  • மாங்காய் - சிறிய துண்டுகள், விருப்பப்படி
  • முருங்கைக்கீரை அல்லது சிறுகீரை - ஒரு கைப்பிடி


அரைக்க வேண்டிய மசாலா

  • தேங்காய் துருவல் - 1\2 கப்
  • சின்ன வெங்காயம் - 5 முதல் 6
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • சோம்பு - 1\2 டீஸ்பூன்
  • வரமிளகாய் - 3 முதல் 5
  • பூண்டு - 4 பல்


இதர பொருட்கள்

  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • சாம்பார் தூள் - 1 1\2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • தண்ணீர் - சுமார் 4 முதல் 4 1\2 கப்


தாளிக்கத் தேவையானவை

  • நல்லெண்ணெய் அல்லது நெய் - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
  • வெந்தயம் - 1\4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
39
திருநெல்வேலி கூட்டாஞ்சோறு செய்முறை - படி 1
Image Credit : Gemini Ai

திருநெல்வேலி கூட்டாஞ்சோறு செய்முறை - படி 1

அரிசி, பருப்பை ஊறவைக்கவும்

அரிசியையும் துவரம்பருப்பையும் ஒன்றாகச் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை நன்றாகக் கழுவிக்கொள்ளவும். பின்னர் 20 முதல் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். இதனால் அரிசி, பருப்பு விரைவாகவும் சீராகவும் வேகும்.

49
படி 2
Image Credit : Gemini Ai

படி 2

மணமிக்க தேங்காய் மசாலா அரைக்கவும்

மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், சீரகம், சோம்பு, வரமிளகாய், பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து நைசாக அரைத்துக்கொள்ளவும். இந்த மசாலாதான் கூட்டாஞ்சோற்றுக்கு கூடுதல் மணத்தையும், சுவையையும் கொடுக்கும்.

59
படி 3
Image Credit : Gemini Ai

படி 3

காய்கறிகறி குடும்பத்தையே சேர்க்கலாம்

சின்ன வெங்காயம், தக்காளி , உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், புடலங்காய் , பீர்க்காய், சுரைக்காய், பூசணிக்காய், கேரட், முள்ளங்கி பீன்ஸ் என காய்கறிகறி குடும்பத்தையே நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கவும். வாழைக்காயை நறுக்கியதும் தண்ணீரில் போட்டு வைக்கலாம். மாங்காய் சேர்ப்பதாக இருந்தால், அதன் புளிப்புக்கு ஏற்ப புளியின் அளவைக் குறைத்துக்கொள்ளவும்.

69
படி 4
Image Credit : Gemini Ai

படி 4

அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்க்கவும்

குக்கரில் ஊறவைத்த அரிசி, பருப்பைச் சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய காய்கறிகள், அரைத்த தேங்காய் மசாலா, சாம்பார் தூள், மஞ்சள் தூள், புளிக்கரைசல் மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். சுமார் 4 முதல் 4 1\2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

அரிசியின் வகை, காய்கறிகளின் அளவு ஆகியவற்றைப் பொறுத்துத் தண்ணீரின் அளவைச் சிறிது மாற்றிக்கொள்ளலாம்.

79
படி 5
Image Credit : Gemini Ai

படி 5

கீரையைச் சேர்க்கவும்

கலவை நன்றாகக் கொதிக்கத் தொடங்கியதும் முருங்கைக்கீரை அல்லது சிறுகீரையைச் சேர்க்கவும். கீரை மற்ற பொருட்களுடன் கலந்து வேகுமாறு மெதுவாகக் கிளறவும். கீரையை அதிக நேரம் தனியாக வேகவைக்க வேண்டியதில்லை.

89
படி 6
Image Credit : Gemini Ai

படி 6

நன்றாக வேகவைக்கவும்

குக்கரை மூடி மிதமான தீயில் சுமார் 3 விசில் வரும் வரை வேகவைக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரில் உள்ள அழுத்தம் இயல்பாகக் குறைந்த பிறகு திறக்கவும்.

பாத்திரத்தில் சமைப்பதாக இருந்தால், மூடி வைத்து மிதமான தீயில் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் மென்மையாகக் குழையும் வரை வேகவைக்கவும். அடியில் ஒட்டாமல் இருக்க இடையிடையே கிளறவும்.

99
படி 7
Image Credit : Gemini Ai

படி 7

தாளித்துச் சேர்க்கவும்

ஒரு சிறிய கடாயில் நல்லெண்ணெய் அல்லது நெய்யைச் சூடாக்கவும். அதில் கடுகு சேர்த்துப் பொரிய விடவும். பின்னர் உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.

இந்தத் தாளிப்பைக் கூட்டாஞ்சோற்றில் ஊற்றி நன்றாகக் கிளறவும். இரண்டு நிமிடங்கள் மூடி வைத்தால் மசாலா மணம் உணவில் நன்றாகக் கலந்துவிடும்.


சூடாகப் பரிமாறவும்

சுவையான திருநெல்வேலி ஸ்பெஷல் கூட்டாஞ்சோறு தயார்! இதைச் சூடாகப் பரிமாறவும். தொட்டுக்கொள்ள அப்பளம், வடகம் அல்லது உங்களுக்குப் பிடித்த ஊறுகாயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

கூட்டாஞ்சோறு சுவையாக வர சில ரகசியக் குறிப்புகள்

காய்கறிகள் அதிகம் சேர்க்கலாம்: கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழைக்காய், அவரைக்காய் போன்ற காய்கறிகள் இந்த உணவுக்குப் பொருத்தமாக இருக்கும்.

மசாலாவைச் சரியாக அரைக்கவும்: தேங்காய், சீரகம், சோம்பு, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்தால் உணவின் சுவை கூடும்.

புளியின் அளவைக் கவனிக்கவும்: மாங்காய் சேர்க்கும்போது புளியைக் குறைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் உணவு அதிகப் புளிப்பாகிவிடலாம்.

கீரையை மறக்காதீர்கள்: முருங்கைக்கீரை அல்லது சிறுகீரை சேர்ப்பது உணவுக்கு கூடுதல் சுவையையும் கீரை சார்ந்த ஊட்டச்சத்துகளையும் வழங்கும்.

தண்ணீரை அளவாகச் சேர்க்கவும்: கூட்டாஞ்சோறு சாதாரண சாதத்தைவிடக் குழைவாக இருக்கும். இருப்பினும், அதிகத் தண்ணீர் சேர்த்தால் மிகவும் நீர்த்துப்போகலாம்.

கூட்டாஞ்சோறு சாப்பிடுவதால் என்ன சிறப்பு?

இந்த உணவில் அரிசி மூலம் கார்போஹைட்ரேட், துவரம்பருப்பு மூலம் புரதம் மற்றும் நார்ச்சத்து, காய்கறிகள் மற்றும் கீரைகள் மூலம் பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள் கிடைக்கலாம். சேர்க்கப்படும் பொருட்களின் அளவைப் பொறுத்து அதன் ஊட்டச்சத்து மாறுபடும்.

ஒரே பாத்திரத்தில் சமைப்பதால் சமையல் வேலையும் பாத்திரங்களைக் கழுவும் வேலையும் குறையும். குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரே உணவைத் தயாரிக்க விரும்புவோருக்கு இது நல்ல தேர்வாக இருக்கும்.

முடிவாக நெல்லை ஸ்டைல் கூட்டாஞ்சோற்றின் சுவையை ஒருமுறை ருசித்துப் பார்த்தால் அதன் சிறப்பு புரியும். பல காய்கறிகள், பருப்பு, கீரை, தேங்காய் மசாலா என அனைத்தும் ஒன்றாகக் கலந்து தரும் இந்தப் பாரம்பரிய உணவை உங்கள் வீட்டிலும் செய்து பாருங்கள். அடுத்த முறை மதிய உணவுக்கு என்ன செய்வது என்று யோசிக்கும்போது, இந்த நெல்லை ஸ்பெஷல் கூட்டாஞ்சோற்றைத் தேர்வு செய்யலாமே.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Upma : உப்மா-வில் இதையெல்லாம் சேர்த்தா டேஸ்ட் சும்மா அள்ளும், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க!
Recommended image2
Sundakkai Chutney : கசப்பே தெரியாமல் சுவையான சுண்டைக்காய் சட்னி செய்யலாமா? இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைட் டிஷ்!
Recommended image3
சண்டே ஸ்பெஷல்: ஹோட்டல் ஸ்டைல் ஜூஸியான கிரில் சிக்கன்... இனி வீட்லயே செய்யலாம்; ஈசி ரெசிபி!
Related Stories
Recommended image1
Sundakkai Chutney : கசப்பே தெரியாமல் சுவையான சுண்டைக்காய் சட்னி செய்யலாமா? இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைட் டிஷ்!
Recommended image2
Karuppu Ulundhu Kanji : பாட்டி காலத்து கருப்பு உளுந்து கஞ்சி.. வீட்டிலேயே செய்வது எப்படி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved