MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Idli Podi: திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லிப் பொடி..சுவையின் ரகசியம் தெரியுமா?

Idli Podi: திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லிப் பொடி..சுவையின் ரகசியம் தெரியுமா?

Tirunelveli Special Idli Podi: திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லிப் பொடி வீட்டிலேயே செய்வது எப்படி? எள், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் உள்ளிட்ட பொருட்களை சரியான பதத்தில் வறுத்து அரைத்தால் மணமும் சுவையும் நிறைந்த இட்லிப் பொடி தயார்.

2 Min read
Author : Vishnupriya
Published : Oct 03 2026, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லிப் பொடி
Image Credit : Pinterest

திருநெல்வேலி ஸ்பெஷல் இட்லிப் பொடி

இட்லி, தோசைக்கு எத்தனை வகையான சட்னி, சாம்பார் இருந்தாலும், ஒரு நல்ல இட்லிப் பொடிக்கு இருக்கும் மவுசே தனி. குறிப்பாக திருநெல்வேலி மக்கள் செய்யும் இட்லி பொடிக்கு தனி மணமும் சுவையும் இருக்கும்.

வறுத்த பருப்பு, மிளகாய், எள் ஆகியவற்றின் கலவையில் தயாராகும் இந்தப் பொடியை சூடான இட்லி மீது தூவி, நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் சுவை அசத்தலாக இருக்கும். கடையில் வாங்கும் இட்லி பொடியை விட வீட்டிலேயே நம் சுவைக்கு ஏற்ப காரம், உப்பு, பருப்பு அளவை மாற்றி தயாரித்துப் பாருங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தேவையான பொருட்கள்
Image Credit : Pinterest

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து - 1\2 கப்

கடலைப் பருப்பு - 1\2 கப்

காய்ந்த சிவப்பு மிளகாய் - 12 முதல் 15

எள் - 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் - 1\2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

36
முதலில் பருப்புகளை வறுக்கவும்
Image Credit : Pinterest

முதலில் பருப்புகளை வறுக்கவும்

ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் இல்லாமல் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாகச் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

பருப்புகள் லேசாக பொன்னிறமாகி நல்ல வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். அதிகமாக கருகிவிட்டால் இட்லிப் பொடியில் கசப்பு வந்துவிடும்.

46
எள்ளை வறுப்பதுதான் முக்கியம்
Image Credit : Pinterest

எள்ளை வறுப்பதுதான் முக்கியம்

  • அதே கடாயில் எள் சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.
  • எள் சூடானதும் லேசாக வெடிக்கத் தொடங்கும். நல்ல வாசனை வந்தவுடன் உடனே அடுப்பை அணைத்து விடுங்கள்.
  • எள்ளை அதிகமாக வறுக்கக்கூடாது. கருகிய எள் பொடியின் சுவையை மாற்றிவிடும். வறுத்த எள்ளையும் தனியாக எடுத்து ஆறவிடவும்.
  • இப்போது கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயைச் சேர்த்து வறுக்கவும்.
  • மிளகாய் நிறம் மாறாமல், நல்ல மணம் வரும் அளவுக்கு மட்டும் வறுக்க வேண்டும். அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து மொறுமொறுப்பாக வறுத்துக் கொள்ளலாம்.
  • இறுதியாக பெருங்காயத்தைச் சேர்த்து சில விநாடிகள் கிளறி அடுப்பை அணைக்கவும்.
56
அரைக்கும் முறை
Image Credit : Pinterest

அரைக்கும் முறை

  • அனைத்துப் பொருட்களும் நன்றாக ஆறியதும் முதலில் மிளகாய், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
  • அதன் பிறகு வறுத்த பருப்புகளைச் சேர்த்து அரைக்கவும்.
  • கடைசியாக வறுத்த எள்ளை சேர்த்து ஒரு சில சுற்றுகள் மட்டும் அரைக்கவும்.
  • மிகவும் நைசாக அரைக்காமல் சற்று கொரகொரப்பாக இருந்தால் இட்லிப் பொடியைச் சாப்பிடும்போது பருப்பு, எள்ளின் சுவை நன்றாகத் தெரியும்.
66
சேமித்து வைப்பது எப்படி?
Image Credit : Pinterest

சேமித்து வைப்பது எப்படி?

  • அரைத்த இட்லிப் பொடியை ஒரு தட்டில் கொட்டி முழுமையாக ஆறிய பிறகு காற்று புகாத சுத்தமான டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.
  • எப்போதும் ஈரமான ஸ்பூனைப் பயன்படுத்தாமல், உலர்ந்த ஸ்பூன் பயன்படுத்துவது பொடி நீண்ட நாட்கள் நன்றாக இருக்க உதவும்.

சாப்பிடும் போது ஒரு ஸ்பெஷல் டச்

  • ஒரு சிறிய கிண்ணத்தில் தேவையான அளவு இட்லிப் பொடியை எடுத்துக் கொண்டு அதில் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
  • சூடான இட்லியை அதில் தொட்டு சாப்பிட்டால் எள்ளின் மணமும், பருப்பின் சுவையும், மிளகாயின் காரமும் சேர்ந்து திருநெல்வேலி பாணி சுவையை கொடுக்கும்.

சிறிய ரகசியம்: எள் சேர்ப்பதைத் தவிர, எள்ளை தனியாக வறுத்து கடைசியில் சேர்த்து அரைப்பது இந்த இட்லிப் பொடியின் மணத்தையும் சுவையையும் நன்றாகக் காக்க உதவும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sambar Masala: மணக்க மணக்க சுவையான சாம்பார் மசாலா..வீட்டிலேயே செய்யும் எளிய முறை
Recommended image2
Gen Z favorite food : Gen Z-க்கு பிடித்த உணவுகள் என்ன? வெளியே சாப்பிடுவதற்கு இதுதான் காரணமா?
Recommended image3
Arusuvai : சாப்பாட்டில் இந்த 6 சுவையும் இருக்கிறதா? அறுசுவையின் ரகசியம் இதுதான்!
Related Stories
Recommended image1
Sambar Masala: மணக்க மணக்க சுவையான சாம்பார் மசாலா..வீட்டிலேயே செய்யும் எளிய முறை
Recommended image2
Gen Z favorite food : Gen Z-க்கு பிடித்த உணவுகள் என்ன? வெளியே சாப்பிடுவதற்கு இதுதான் காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved