- Home
- உடல்நலம்
- உணவு
- உஷார்: மறந்தும் கூட பாலுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க...விளைவு பயங்கரம்..!!
உஷார்: மறந்தும் கூட பாலுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க...விளைவு பயங்கரம்..!!
பாலில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. பாலுடன் சில உணவுகளை சேர்த்து உண்ணக் கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? எனவே பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை குறித்து இங்கு காணலாம்...

பால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. இதில், உடலின் வலிமையை அதிகரிக்க உதவும் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகள் நிறைந்துள்ளன. தினமும் பால் குடித்து வந்தால், எலும்புகள் வலுவடையும். ஆனால் சில உணவுகளை பாலுடன் கலக்கக்கூடாது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். இதனை சேர்த்து குடித்தால் அலர்ஜி முதல் சளி வரை பல உடல்நல பிரச்சனைகள் வரும். பாலுடன் எதைக் சாப்பிட கூடாது? என்பதை பார்கலாம்.
வாழைப்பழங்கள்:
வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. பால் மற்றும் வாழைப்பழம் இரண்டிலும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். ஆனால் வாழைப்பழத்தை பாலில் சேர்த்து சாப்பிட்டால் பலருக்கு அலர்ஜி ஏற்படும்.
அசைவம்:
நீங்கள் இறைச்சி, மீன் அல்லது முட்டை சாப்பிடுகிறீர்களா? ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவற்றை பாலுடன் சாப்பிட வேண்டாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் சாப்பிடுங்கள்.இந்த இரண்டு உணவுகளுக்கும் இடையே சில மணிநேர இடைவெளியை எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
சிட்ரஸ் பழங்கள்:
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சம்பழம் போன்றவற்றில் வைட்டமின் சி மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை சாப்பிடுவதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஆனால் அவற்றை ஒருபோதும் பாலுடன் உட்கொள்ளக்கூடாது.
முள்ளங்கி:
நீரிழிவு நோயாளிகளுக்கும் முள்ளங்கி மிகவும் நன்மை பயக்கும். இதனை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். ஆனால் இந்த முள்ளங்கியை பாலுடன் சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டும் சேர்ந்தால் ஜீரணிக்க மிகவும் கடினம்.
தர்பூசணிகள்:
கோடைகாலப் பழமான தர்பூசணி நம்மை நீரேற்றமாக வைத்திருக்கும். நமது முழு உடலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆனால் பாலுடன் தர்பூசணி சாப்பிடுவது உடல் நலத்திற்கு சிறிதும் நல்லதல்ல. ஏனெனில் இந்த இரண்டு உணவுகளின் தன்மையும் வேறுபட்டது. அவை செரிமான அமைப்பை பாதிக்கின்றன.
வெற்று பால்
பால் ஒரு ஆரோக்கியமான உணவு. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே பாலில் எதையும் கலந்து குடிக்க வேண்டாம். எனவே சாதாரண பால் குடிக்கவும்.
இதையும் படிங்க: பதட்டம் நீங்கனுமா? இந்த ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்க..!!
மஞ்சள் பால்:
நீங்கள் சாதாரண பால் குடிக்க விரும்பவில்லை என்றால், பாலுடன் சிறிது மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். உண்மையில் மஞ்சள் பால் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இருமல், சளி போன்ற பிரச்சனைகள் குறையும். மேலும் பாலில் சில உலர் பழங்களைச் சேர்த்துக் குடிக்கலாம்.