MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Temple style puliyodharai : இதுதான் ரகசியமா? கோயில் புளியோதரை மணமும் சுவையும் வீட்டிலேயே வர இந்த டிப்ஸ் மட்டும் போதும்!

Temple style puliyodharai : இதுதான் ரகசியமா? கோயில் புளியோதரை மணமும் சுவையும் வீட்டிலேயே வர இந்த டிப்ஸ் மட்டும் போதும்!

Temple style puliyodharai: கோயில் புளியோதரை போல மணமும் சுவையும் வீட்டிலேயே பெறுவது எப்படி? தேவையான பொருட்கள், புளிக்காய்ச்சல், புளியோதரை பொடி மற்றும் செய்முறையை எளிய முறையில் தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 30 2026, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கோயில் புளியோதரை
Image Credit : Pinterest

கோயில் புளியோதரை

கோயில் புளியோதரைக்காகவே கோயிலுக்கு போகலாமே.. அந்த அளவுக்கு கோயிலில் வழங்கப்படும் புளியோதரையின் மணமும், புளிப்பு-காரம் கலந்த சுவையும் தனித்துவமானது. வீட்டில் எவ்வளவு முயற்சி செய்தாலும், கோயில் புளியோதரையில் வரும் அந்த ஸ்பெஷல் மணம் மட்டும் வரவில்லையே என்று பலரும் நினைப்பார்கள்.

ஆனால், சில முக்கியமான பொருட்களையும், சரியான பக்குவத்தையும் கடைப்பிடித்தால் வீட்டிலேயே கோயில் புளியோதரை மணம் வீசும் வகையில் சுவையான புளியோதரை செய்யலாம். அந்த சுவைக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான டிப்ஸ் என்ன, புளிக்காய்ச்சலை எப்படி தயாரிக்க வேண்டும், எந்தப் பொருட்களை சரியான அளவில் சேர்க்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
கோயில் புளியோதரை மணத்தில் புளியோதரை செய்வது எப்படி?
Image Credit : Pinterest

கோயில் புளியோதரை மணத்தில் புளியோதரை செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சாதத்திற்கு,

  • பச்சரிசி - 2 கப்
  • தண்ணீர் - தேவையான அளவு
  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்

புளிக்காய்ச்சலுக்கு

  • புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
  • நல்லெண்ணெய் - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • கடலைப் பருப்பு - 1 1\2 டீஸ்பூன்
  • வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 4 முதல் 5
  • பச்சை மிளகாய் - 1 அல்லது 2
  • கறிவேப்பிலை - 1 கொத்து
  • பெருங்காயம் - 1\4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

புளியோதரை பொடிக்கு

  • தனியா - 2 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 5 முதல் 6
  • கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
  • வெந்தயம் - 1\2 டீஸ்பூன்
  • எள் - 1 டீஸ்பூன்
  • மிளகு - 1\2 டீஸ்பூன்
  • சீரகம் - 1\2 டீஸ்பூன்
36
செய்முறை
Image Credit : Pinterest

செய்முறை

  • அரிசியை நன்றாகக் கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உதிரியாக வேகவைக்கவும். சாதம் குழையாமல் இருப்பது மிகவும் முக்கியம். வேகவைத்த சாதத்தை ஒரு பெரிய தட்டில் பரப்பி, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி ஆறவிடுங்கள்.
  • புளியை வெந்நீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும்.
  • அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடுங்கள். குழம்பு போல கொஞ்சம் கெட்டியாகத் தொடங்கியதும் அடுப்பை அணைக்கலாம்
46
புளியோதரை பொடி அரைக்கவும்
Image Credit : Pinterest

புளியோதரை பொடி அரைக்கவும்

  • உளுத்தம் பருப்பு, வெந்தயம், எள், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக அல்லது ஒன்றன்பின் ஒன்றாக மிதமான தீயில் வறுக்கவும்.
  • நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இதுதான் புளியோதரைக்கு கோயில் பாணி வாசனையை கொடுக்கும் முக்கியமான கலவை.
56
புளிக்காய்ச்சல் செய்யுங்கள்
Image Credit : Pinterest

புளிக்காய்ச்சல் செய்யுங்கள்

  • கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போடவும். அது வெடித்ததும் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  • பின்னர் காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்.
  • இதில் தயாரித்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி நன்றாகக் கொதிக்கவிடுங்கள்.
  • எண்ணெய் சிறிது பிரிந்து, கலவை கெட்டியாகும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
  • இப்போது அரைத்த புளியோதரை பொடியை சேர்த்து நன்றாகக் கிளறவும். மேலும் 3- 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து இறக்குங்கள்.
  • ஆறிய சாதத்தின் மீது தேவையான அளவு புளிக்காய்ச்சலை ஊற்றி மெதுவாக கலக்கவும். சாதம் உடையாமல் மென்மையாகக் கிளற வேண்டும்.
  • கலந்த உடனேயே சாப்பிடுவதைவிட, குறைந்தது 30 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் ஊறவிட்டால் புளிக்காய்ச்சல் சாதத்திற்குள் நன்றாக ஊறி சுவை அதிகரிக்கும்.
66
கோயில் புளியோதரை மணம் வர சில முக்கிய ரகசியங்கள்
Image Credit : Pinterest

கோயில் புளியோதரை மணம் வர சில முக்கிய ரகசியங்கள்

  • நல்லெண்ணெய் பயன்படுத்துவது மணத்தையும் சுவையையும் அதிகரிக்கும்.
  • புளியை அதிகமாக சேர்க்காமல், புளிப்பு–காரம்–உப்பு சரியான அளவில் இருக்க வேண்டும்.
  • பொடியை கருகும் அளவுக்கு வறுக்கக்கூடாது; மிதமான தீயில் வறுப்பதே நல்ல மணம் தரும்.
  • சாதம் குழையாமல் உதிரியாக இருக்க வேண்டும்.
  • புளிக்காய்ச்சலை சிறிது அதிகமாக செய்து வைத்தால், அடுத்த முறை தேவைக்கேற்ப சாதத்தில் கலந்து பயன்படுத்தலாம்.
  • புளியோதரை செய்த உடனே சாப்பிடுவதைவிட சிறிது நேரம் ஊறிய பிறகு சுவை நன்றாக இருக்கும்.
  • -விருப்பப்பட்டால் சிறிதளவு வறுத்த எள் அல்லது கூடுதல் வேர்க்கடலை சேர்க்கலாம்.
  • இப்படி செய்தால் வீட்டிலேயே கோயில் பிரசாதத்தை நினைவுபடுத்தும் வகையில் நல்ல மணமும், புளிப்பு-காரம் கலந்த சுவையும் கொண்ட புளியோதரை கிடைக்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Poori : ஒரு துளி எண்ணெய் இல்லாம... குக்கரிலேயே பலூன் மாதிரி புசு புசுனு பூரி செய்யலாம்..!
Recommended image2
Coca-Cola : கொக்க கோலா குடித்து இறந்த இளைஞர்? என்ன காரணம்? இந்த பானங்களால் உடலுக்கு ஆபத்தா?
Recommended image3
Fruit Juice: தாகமா இருக்குன்னு அடிக்கடி ஜூஸ் குடிக்கிறீங்களா? இந்த ஆபத்துகள் தேடி வருமாம்.. முழு விவரம்!
Related Stories
Recommended image1
Murungakkai Rasam: மணக்க மணக்க முருங்கைக்காய் ரசம்..சூடான சாதத்துக்கு செம காம்பினேஷன்!
Recommended image2
Nungu Payasam: அடிக்கும் வெயிலுக்கு செம கூல் ட்ரீட்! நுங்கு பாயாசம் செய்வது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved