MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • இந்த சிவப்பு நிற கீரை பத்தி தெரியுமா? குழந்தைகளின் கண் பார்வையை ஷார்ப் ஆக்கும்! சுகரை குறைக்கும்

இந்த சிவப்பு நிற கீரை பத்தி தெரியுமா? குழந்தைகளின் கண் பார்வையை ஷார்ப் ஆக்கும்! சுகரை குறைக்கும்

சிவப்பு நிறத்தில் இருக்கும் பொன்னாங்கன்னி கீரையில் மற்ற கீரையை விட அதிகமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.

2 Min read
Author : Kalai Selvi
Published : Sep 12 2025, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : istockphoto

பலருக்கும் கீரை சமைத்து சாப்பிடுவது அந்த அளவுக்கு விருப்பமான காரியமாக இருக்காது கீரையை கண்டாலே ஒதுக்கும் நபர்களும் உண்டு. ஆனால் கீரையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. கீரைகளில் நார்ச்சத்துக்கள், முக்கிய தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் பொதிந்து காணப்படுகிறது.

26
Image Credit : istockphoto

ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு மாதிரியான நன்மைகளை தரக்கூடியது. அதிலும் சிவந்த நிற பொன்னாங்கன்னிக் கீரை கூடுதலான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் வைட்டமின் ஏ, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் நார்ச்சத்து ஆகியவை உள்ளன. நாள்பட்ட பல நோய்களுக்கு இதில் தீர்வு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Related image1
Pasalai Keerai : இந்த குளிர்காலத்தில் உடல் எடை குறைய "பசலைக் கீரை" அவசியம்! ஏன் தெரியுமா?
Related image2
Mudakathan Keerai : முடக்கத்தான் கீரையோட பவர் தெரியுமா? இப்படி சாப்பிட்டா 60 வயசுல கூட ஆரோக்கியமா இருக்கலாம்!
36
Image Credit : istockphoto

நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் பொன்னாங்கன்னி கீரை உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மாரடைப்பு ஆகிய நாள்பட்ட நோய்களுக்கு சிறந்த தீர்வு. பொதுவாக இந்த நோய்களுக்கு ஆன்டி ஆக்ஸிடண்ட் மருந்தும் எடுத்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆன்டி ஆக்ஸிடண்ட் பண்புகள் சிவப்பு பொன்னாங்கன்னி கீரையில் இருக்கிறது.

46
Image Credit : istockphoto

இந்த கீரையை வீட்டிலேயே வளர்க்கலாம். இதை பொரியல் செய்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். குழந்தைகளின் கண் ஆரோக்கியத்திற்கு சிறந்த பலன்களை தரும். இரும்புச் சத்து தவிர மற்ற சத்துக்களும் அதிகம் உள்ளாது. இருக்கிறேன் அடிக்கடி உண்பதால் சருமம் பொலிவாகும்.

56
Image Credit : istockphoto

சின்ன குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை பிரச்னை வந்தால் இந்தக் கீரையை 48 நாட்கள் கொடுங்கள். கூடவே கண்களுக்குப் பயிற்சி செய்தால் அவர்களின் பார்வைத்திறன் மேம்படும். இந்தக் கீரை மூளை, நரம்புகள் நன்றாக இயங்க, எலும்புகள் வலுப் பெற, முடி நன்றாக வளர உதவும்.

66
Image Credit : istockphoto

பொன்னாங்கன்னி கீரை கூட்டு ரெசிபி

முதலில் சிறிதளவு சிறுபருப்பை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள். கீரையை நன்கு கழுவி தண்ணீரை உலர விட்டு பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து அதனுடன் கீரையை போட்டு வதக்க வேண்டும். கீரை வெந்து வரும்போது அதனுடன் வேகவைத்த சிறுபருப்பு கலவையை கலந்து, இறுதியில் உப்பு சேர்த்தால் சுவையான பொன்னாங்கன்னி கீரை ரெடி.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?
Recommended image2
Uric Acid : மூட்டு வலியை நீக்கும் சூப்பர் 'சட்னி' ஒருமுறை சாப்பிட்டு பாருங்க! அற்புத பலன்கள் இருக்கு
Recommended image3
Kambu Paniyaram : கம்பு பணியாரத்திற்கு 'சர்க்கரை' நோயை கட்டுப்படுத்துற சக்தி இருக்கு.. ரொம்ப ஈஸியான ரெசிபி இதோ!
Related Stories
Recommended image1
Pasalai Keerai : இந்த குளிர்காலத்தில் உடல் எடை குறைய "பசலைக் கீரை" அவசியம்! ஏன் தெரியுமா?
Recommended image2
Mudakathan Keerai : முடக்கத்தான் கீரையோட பவர் தெரியுமா? இப்படி சாப்பிட்டா 60 வயசுல கூட ஆரோக்கியமா இருக்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved