Healthy Kitchen: ஆரோக்கியமான சமையலறைக்கு இந்த 7 பொருட்களை உடனே மாத்துங்க!
நம்ம சாப்பாட்டுல செய்யுற சின்ன சின்ன மாற்றங்கள் கூட, நம்ம ஒட்டுமொத்த ஆரோக்கியத்துல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்க கிச்சன்ல இருக்குற சில பொருட்களை மாத்தி, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
18

இதற்கு பதிலாக இது.!
வீட்ல சமைச்சு சாப்பிடுறது ஆரோக்கியமான உணவுப் பழக்கத்துக்கு ஒரு சூப்பர் வழி. நம்ம உணவுமுறைதான் நம்ம ஆரோக்கியத்தை தீர்மானிக்குது. சாப்பாட்டுல செய்யுற சின்ன மாற்றங்கள் கூட, நீண்ட காலத்துல பெரிய பலன்களை கொடுக்கும். ஆரோக்கியமற்ற சில உணவுப் பொருட்களுக்கு பதிலா என்னென்ன பயன்படுத்தலாம்னு பார்க்கலாம்.
Add Asianetnews Tamil as a Preferred Source

28
இதையெல்லாம் கிச்சன்ல வைக்காதீங்க.!
சிப்ஸ், கிராக்கர்ஸ் மாதிரி ஆரோக்கியமற்ற ஸ்நாக்ஸை கிச்சன்ல வைக்காதீங்க. அதுக்கு பதிலா ஆப்பிள், கேரட், வெள்ளரிக்காய் மாதிரி ஃப்ரெஷ்ஷான பழங்கள், காய்கறிகளை வைங்க. இதுல உடம்புக்குத் தேவையான மினரல்ஸ், நார்ச்சத்து எல்லாம் இருக்கு.
38
முழு தானிய கோதுமை பிரெட்
மைதாவால் செய்த வெள்ளை பிரெட்டுக்கு பதிலா, முழு தானிய கோதுமை பிரெட்டை (whole grain bread) பயன்படுத்துங்க. வெள்ளை பிரெட்டை விட இதுல நார்ச்சத்து, சத்துக்கள் அதிகம். இதுதான் ஆரோக்கியமான சாய்ஸ்.
48
நாள் முழுக்க உடலை ஹைட்ரேட்டடா வெச்சுக்கலாம்
சோடா, ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ், பழச்சாறு மாதிரி சர்க்கரை அதிகமான பானங்களுக்கு பதிலா, தண்ணீர் குடிங்க. இல்லைனா, சர்க்கரை இல்லாத டீ அல்லது ஸ்பார்க்ளிங் வாட்டர் குடிங்க. இதனால, சர்க்கரை அளவைக் குறைச்சு, நாள் முழுக்க உடலை ஹைட்ரேட்டடா வெச்சுக்கலாம்.
58
கலோரிகளை குறைக்கலாம் ஈசியா
கொழுப்பு அதிகமுள்ள பால், சீஸ் போன்ற பொருட்களுக்கு பதிலா, கொழுப்பு குறைவான (low-fat) அல்லது கொழுப்பில்லாத (non-fat) பால் பொருட்களை பயன்படுத்துங்க. இதனால, சாச்சுரேட்டட் கொழுப்பு, கலோரிகளை குறைக்க முடியும்.
68
உடல் எடையை நிர்வகிக்க உதவும்
பேக்கன், சாசேஜ் மாதிரி பதப்படுத்தப்பட்ட இறைச்சிக்கு பதிலா, சிக்கன், வான்கோழி (turkey), மீன், பீன்ஸ் போன்ற லீன் புரோட்டீன் (lean protein) உணவுகளை சாப்பிடுங்க. இதுல சாச்சுரேட்டட் கொழுப்பு குறைவு, உடல் எடையை நிர்வகிக்கவும் உதவும்.
78
வெண்ணெய், மார்கரைனுக்கு பதிலா இது ஓகே
வெண்ணெய், மார்கரைனுக்கு பதிலா ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், அல்லது தேங்காய் எண்ணெயை பயன்படுத்துங்க. இதுல இதயத்துக்கு நல்லதான மோனோ அன்சாச்சுரேட்டட், பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகமா இருக்கு.
88
நம்ம ஊர் செக்கு எண்ணெய் வகைகள்
பதப்படுத்தப்பட்ட ரீஃபைண்ட் எண்ணெய்களுக்கு பதிலா, கோல்டு-பிரஸ்டு வெர்ஜின் எண்ணெய்களை (நம்ம ஊர் செக்கு எண்ணெய் மாதிரி) பயன்படுத்துவது சமையலுக்கும், ஆரோக்கியத்துக்கும் ரொம்ப நல்லது. இந்த எண்ணெய்களை பயன்படுத்தும்போது, அதோட ஸ்மோக் பாயின்ட்டை (smoke point) மனசுல வெச்சுக்கிறது முக்கியம்.
Latest Videos

