Tamil

Health: இரத்தச் சர்க்கரை அளவை இயற்கையாகக் கட்டுப்படுத்த உதவும் உணவுகள்

Tamil

வறுத்த கொண்டைக்கடலை (Roasted Chickpeas):

கொண்டைக்கடலையில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம். இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கவும் உதவுகிறது.

Image credits: Getty
Tamil

சியா விதைகள் (Chia Seeds):

சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம். இவை தண்ணீரை உறிஞ்சி ஜெல்லாவதால் செரிமானம் சீராகும். இதனால் சாப்பிட்ட பின் ரத்தச் சர்க்கரை சட்டென்று உயர்வது தடுக்கப்படும்.

Image credits: Getty
Tamil

ராஸ்பெர்ரி பழங்கள் (Raspberries):

ராஸ்பெர்ரி பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த தேர்வு. இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடல் அழற்சியைக் குறைத்து, குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. 

Image credits: Getty
Tamil

முழு கருப்பு உளுந்து (Whole Black Urad Dal):

கருப்பு உளுந்து குறைந்த கிளைசெமிக் கொண்டது. இதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்தைச் சீராக்குவதுடன் இரத்தச் சர்க்கரை அளவையும் சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.

Image credits: Getty
Tamil

கொய்யாப்பழம் (Guava):

சர்க்கரை அளவைக் குறைக்க கொய்யா சிறந்த பழம். இதில் நார்ச்சத்துக்கள் அதிகம். குறிப்பாக, இதன் தோல் இன்சுலின் சுரப்பைச் சீராக்கி இரத்தச் சர்க்கரையை மிகச்சரியாகக் கட்டுப்படுத்துகிறது.

Image credits: Getty
Tamil

கீரை வகைகள் (Leafy Vegetables):

பசலை, முருங்கைக்கீரையில் மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம். இவை இரத்த நாளங்களைப் பாதுகாத்து, உடலின் வளர்சிதை மாற்றத்தைச் சீராக்கி சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.

Image credits: Getty
Tamil

முழு தானியங்கள் (Whole Grains) :

வெள்ளை அரிசிக்குப் பதில் கம்பு, கேழ்வரகு, ஓட்ஸ் போன்றவற்றைச் சேர்க்கலாம். இவை பசியைக் கட்டுப்படுத்தி, நாள் முழுவதும் ஆற்றல் அளிப்பதோடு சர்க்கரை அளவையும் சீராக வைக்க உதவுகின்றன.

Image credits: Getty

வயிற்றுத் தொப்பையை எளிதாகக் குறைக்க உதவும் 8 சிறந்த யோகாசனங்கள்

Gut Health:குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள் ஓர் எளிய வழிகாட்டி

செம்பருத்தி டீ குடிப்பதால் கிடைக்கும் 7 அற்புதமான நன்மைகள்!

தாய் சேய் நலம் : கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய 6 சத்தான பழங்கள்